டிரைவரே இல்லாமல் தானாக ஓடி குளத்திற்குள் விழப்போன கார்! வைரலாகும் வீடியோ!

தற்போது வாகனங்களில் ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக புகுத்த துவங்கிவிட்டனர். இதில் ஆட்டோமெட்டிக் பார்க்கிங் அம்சமும் ஒன்றும். இப்படியாக ஆட்டோமெட்டிக் பார்க்கிங் வசதியுள்ள கார் ஒன்று சமீபத்தில் பார்க் ஆகும் போது குளத்திற்குள் விழப்போன சம்பவம் வீடியோவாக பதிவாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஷாவ்மி நிறுவனம் எஸ்யூ 7 என்ற காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் பார்க்கிங் தொழிற்நுட்பம் இருக்கிறது. இந்த கார் டிரைவர் உதவி இல்லாமல் சுற்றி இருக்கும் பகுதிகளை அறிந்து எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் கார் தன்னை தானே பார்க் செய்துவிடும். இந்த அம்சம் டிரைவர்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

xiaomi su7

இந்நிலையில் சமீபத்தில்இந்த காரின் பார்க்கிங் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இந்த கார் குளத்திற்குள் விழுவது போல சென்றது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒருவர் காரை நிறுத்திவிட்டு அதை ஆட்டோ பார்க் செய்ய உத்தரவிட்டு காரிலிருந்து இறங்கி செல்கிறார். கார் அதுவாக பார்க் செய்ய துவங்குகிறது.

அப்பொழுது கார் நிற்கும் பகுதிக்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. அந்த குளம் இருப்பது காரில் உள்ள தொழிற்நுட்பத்திற்கு தெரியவில்லை. அதனால் கார் அந்த குழம் இருக்கும் பகுதியை நோக்கி சென்றது. அப்பொழுது காரின் முன்பக்க வீல் சாலையிலிருந்து இறங்கி குளத்திற்குள் சென்றது. அதை அங்கிருந்தவர்கள் கவனித்தனர்.

காரின் முன்பக்க வீல்கள் சாலையிலிருந்து இறங்கிவிட்டதால் கார் நகராமல் நின்றுவிட்டது. இதனால் கார் தண்ணீருக்குள் விழவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் வந்து காரை மீட்டனர். ஷாவ்மி நிறுவனம் கடந்த நவம்பர் 26ம் தேதி ஒரு அப்டேட்டை வெளியிட்டது. இந்த அப்டேட்டில் பார்க்கிங் அசிஸ்டென்ஸில் சில மாற்றங்களை செய்தது. முகக்கியமாக பார்க் செய்யும் போசிஷனை கண்டவதில் செய்யப்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வல்லுநர்கள் கூறும் போது ஆட்டோமெட்டிக் பார்க்கிங் வசதி இருந்தாலும், டிரைவர் மேற்பார்வையிலேயே பார்க்கிங் நடக்க வேண்டும். டிரைவர் இல்லாமல் பார்க்கிங் நடந்தால் பிரச்சனை வரும் போது தடுக்க முடியாது. ஆட்டோமெட்டிக் பார்க்கிங் செய்யமு்பேஆது அது எந்த இடத்தில் பார்க் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும். வாகனம் பார்க்கிங் செய்ய போதுமான இடம் இருக்கிறதா பார்க்கிங் செய்ய முன்னே பின்னே நகரும் போது ஏதாவது தடுப்பு இருக்கிறதா என்பதை கண்காணிக்கும்.

இந்த நேரத்தில் தண்ணீர், புல் வெளி, பள்ளங்கள் ஆகியவற்றை இன்னும் துல்லியமாக கணிக்க சென்சார்கள் அப்டேட் செய்யப்படவில்லை இதனால் இந்த இடங்களில் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இப்படி தான் குறிப்பிட்ட சம்பவத்திலும் நடந்துள்ளது. மேலும் பார்க்கிங் செய்யும் போது எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டால் வாகனம் நிற்கவேண்டும் என்ற பாதுகாப்பு அம்சம் இருந்ததால் கார் குளத்திற்குள் செல்லவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:ஷாவ்மி நிறுவனம் தொழிற்நுட்பம் நிறைந்த காரை தயாரித்து வரும் நிலையில் நடைமுறையில் இப்படியான சிக்கல்கள் வரும் போது இதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து அதை சரி செய்ய பார்க்க வேண்டும். இது நிச்சயம் எதிர்காலத்தில் விபத்தை தடுக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 12, 2025, 14:25 [IST]
English summary
Xiaomi su7 autonomous parking near pond incident
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+