பெட்ரோல் விலை ரூ180/லி, எத்தனால் கலப்படம் இல்லாத பெட்ரோல் இது தான்! வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்க உத்தரவிட்டுள்ள நிலையில் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனாலை கலந்து வருகின்றன. இது தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எத்தனால் இல்லாமல் பெட்ரோலை வாங்க முடியுமா என பேசி வரும் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டில்லியை சேர்ந்த லக்ஷித் கவூர் என்பவர் ஆர்டிஐ மூலம் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தெளிவான பதில்களை வழங்கியுள்ளது இதற்காக அந்நிறுவனம் வழங்கிய பதில் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் கேட்ட கேள்விகளும் அதற்காக அந்நிறுவனம் அளித்த பதில்களும் தெளிவாக உள்ளன.

XP100 is E0 Petrol
இவரது முதல் கேள்வி நார்மல் பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது என கேட்டிருந்தார். இரண்டாவது கேள்வியில் எக்ஸ்பி 95 பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலக்கப்படுகிறது என கேட்டிருந்தார். இந்த இரண்டிற்கு அந்நிறுவனம் ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்கள் 20 சதவீத எத்தனாலை மோட்டார் ஸ்பிரிட், மற்றும் எக்ஸ்பி 95 ஆகிய பெட்ரோலில் கலப்பதாக பதிலளித்துள்ளனர்.

3வது கேள்வியாக எக்ஸ்பி99/எக்ஸ்பி100 பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலக்கப்படுகிறது என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அந்நிறுவனம் அவர் டில்லியில் விற்பனையாகும் பெட்ரோல் குறித்த தரவுகளை கேட்டிருந்தததால் எக்ஸ்பி 99 பெட்ரோல் டில்லியில் விற்பனையில் இல்லை எனவும், எக்ஸ்பி 100 பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

XP100 is E0 Petrol

இது போக டில்லியில் அவர் எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலை விற்பனை செய்யும் பங்க் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அந்நிறுவனம் சில பட்டியலை வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்யும் எக்ஸ்பி 100 பெட்ரோலில் எத்தனால் கலப்படம் இல்லை என்பது தற்போது அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

XP100 is E0 Petrol

இந்நிலையில் இந்த பதிவை வெளியிட்ட நபர் தனது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை டேக் செய்து எக்ஸ்பி 95 பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது என்றால் அதற்காக ஏன் பிரிமியம் விலை கொடுக்க வேண்டும்? எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் எத்தனால் கலந்த பெட்ரோலை விட விலை குறைவாக கிடைக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

XP100 is E0 Petrol

சரி நீங்கள் இதை வைத்து எக்ஸ்பி100 பெட்ரோலை வாங்கலாம் என முடிவு செய்தால் அதன் விலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பிரிமியமான எக்ஸ்பி 100 பெட்ரோலை லிட்டருக்கு ரூ180 என்ற என் விலையில் விற்பனை செய்து வருகிறது. எச்பி நிறுவனமும் எச்பி பவர் 100 என்ற பெயரில் விற்பனை செய்யும் பெட்ரோல் ரூ160 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று சாமானிய மக்கள் வாங்கும் விலையுள்ள அனைத்து பெட்ரோல்களிலும் எத்தனால் கலப்படம் நடக்கிறது. எக்ஸ்பி 100, எச்பி பவர் 100 போன்ற பெட்ரோல்கள் இந்தியாவில் பெரும் பகுதிகளில் கிடைக்கவில்லை. இதனால் நீங்கள் எத்தனால் இல்லாத பெட்ரோலை தான் வாகனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அதிக செலவு செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 10:45 [IST]
English summary
Xp100 is e0 petrol confirmed by iocl no ethanol
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X