சும்மா சிட்டா பறக்கும்... உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி... எப்ப வருது தெரியுமா?

துபாயில் உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றிகரமான நடத்தப்பட்டுள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் காணலாம் வாருங்கள்.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

நாம் சிறு வயதில் இருக்கும் போது சினிமாக்களில் கார்கள் எல்லாம் பறப்பதைப் பார்த்திருப்போம். அப்பொழுது பலர் வெளிநாடுகளில் எல்லாம் கார்கள் பறக்கும் எனச் சிறு பிள்ளை தனமாக நம்பியிருப்போம். ஆனால் வளர்ந்து பின்பு தான் இந்த உலகிலேயே பறக்கும் கார்கள் எல்லாம் கிடையாது. சினிமாக்களில் சுவாரஸ்யங்களைக் கூட்ட கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று நாம் உணர்ந்திருப்போம். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் நீங்கள் ஏமாறவில்லை.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

இந்த உலகின் பறக்கும் கார் என்ற ஒரு விஷயம் தற்போது வந்துவிட்டது. துபாயில் பறக்கும் கார்கள் வெற்றி காரணமாக மனிதர்களைக் கொண்டு பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுவிட்டது. இந்த கார்கள் வரும் 2025ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தெளிவான விளக்கத்தைத் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

சீனாவைச் சேர்ந்த டெக்னாலஜி நிறுவனம் ஸ்பெங்க் ஏதோஹித் (XPENG AEROHT) இந்நிறுவனம் பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலும் தற்போது ஆய்வு கட்டத்திலேயே இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பறக்கும் கார்களை உருவாக்கியுள்ளது. VTOL என அழைக்கப்படும் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் தொழிற்நுட்பத்தில் இந்த பறக்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

எக்ஸ்2 எனப் பெயரிடப்பட்ட இந்த பறக்கும் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் காராகும். இந்த பறக்கும் கார் குறுகிய தூரத்திற்கு மனிதர்கள் ஒரு இடம் விட்டு ஒரு இடம் பயணிக்கவும் சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் இது பயன்படுகிறது. இந்த எக்ஸ்2 பறக்கும் காரில் இன்டெலிஜென்ட் ஃபிளைட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆட்டோனமஸ் ஃபிளைட் கேபபிலிட்டீஸ் ஆகிய ஆகி தொழிற்நுட்ப அம்சங்கள் இருக்கிறது.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

இது இந்த பறக்கும் காரில் தானியங்கியாகப் பறக்க அனுமதிக்கும். இந்த பறக்கும் காரில் ஏறிச் செல்ல வேண்டிய இடத்தை மார்க் செய்துவிட்டால் விமானம் தானாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று விடும். யாரும் இந்த பறக்கும் காரை கண்ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த பறக்கும் கார்

முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் திறன் கொண்டதால் இது பறக்கும் போது எந்த வித காற்று மாசும் ஏற்படுவதில்லை. இந்த காரில் ஒரே நேரத்தில் இருவர் பறக்கும் செல்லலாம்.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

இந்த விமானம் பறக்க மொத்தம் 8 புரோபல்லர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மூலைக்கு 2 புரோபல்லர்கள் என மொத்தம் 4 மூலையில் 8 புரோப்பலர்கள் மூலம் இந்த விமானம் பறக்கிறது. இந்த பறக்கும் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

இந்த எக்ஸ்2 பறக்கும் காரை தயாரித்த நிறுவனம் இதன் சேவையை முதலில் துபாய் நாட்டில் துவங்க அந்நாட்டுத் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சோதனை ஓட்டம் கடந்த திங்கட்கிழமை துபாயில் நடந்தது. இந்த சோதனை GITEX Global 2022 மாநாட்டின் ஒரு அங்கமாக இந்த சோதனை நிகழ்வும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இந்த சோதனை நிகழ்வில் இந்த பறக்கும் காரை 90 நிமிடங்கள் பறக்க விடப்பட்டுச் சோதனையிடப்பட்டன.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

துபாய் இப்படியாகத் தானியங்கி கார்களை இயங்குவதற்கு நல்ல மார்கெட், இங்குள்ள மக்கள் அதிகம் இதை விரும்பி பயணிப்பார்கள். இந்த மார்கெட்டில் இந்த கார்களை வெளியிடுவது மூலம் இந்த வெற்றி பெற்று உலகம் முழுவதும் இந்த சேவையைத் துவங்க நல்ல துவக்கமாக இருக்கும் என்பதால் இந்த தேர்வை அவர்கள் செய்துள்ளனர். இந்த கார் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும்.

சும்மா சிட்டா பறக்கும் . . . உலகின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் கார் சோதனை வெற்றி . . . எப்ப பயன்பாட்டிற்கு வருது தெரியுமா . . .

இன்று சாலைப் பயணத்தில் உள்ள பிரச்சனைகளான, டிராஃபிக், விபத்து, உள்ளிட்ட பல பிரச்சனைகள் இந்த பறக்கும் காரில் இருக்காது. நீங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து, செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகவும், சரியான நேரத்திலும் செல்ல முடியும். ஒரு காலத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனாக இருந்த கார் இன்று சாத்தியமாகியுள்ளது. இது எல்லாம் பலர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2022, 13:13 [IST]
English summary
Xpeng tested x2 electric flying taxi in Dubai successfully
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+