வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா...

யமஹா நிறுவனம் தனது பிரிமியம் பிராண்ட் ஸ்கூட்டர்கள், பைக்குகள் மற்றும் ஆக்ஸசரீஸ்களை விற்பனை செய்ய ப்ளூ ஸ்கோயர் ஷோரூம்களை திறந்து வருகிறது. தனது 100வது ஷோரூமை தற்போது திறந்துள்ள நிலையில் இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

யமஹா நிறுவனம் தனது பிரிமியம் பைக்குகளை எல்லாம் தனது ப்ளு ஸ்கோயர் ஷோரூம் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இதற்காகவே கடந்த 2012ம் ஆண்டு முதல் "தி கால் ஆஃப் தீ ப்ளூ" என்ற பெயரில் ஒரு கேம்பெயினை நடத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு ஷோரூமாக திறந்து வருகிறது.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

இந்த யமஹா ப்ளு ஸ்கோயர் ஷோரூம் என்பது அனைத்து விதமான பைக்கின் தேவைகளுக்கும் பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. யமஹா பைக்கில் ரேஸிங் செல்ல விருப்பமுள்ளவர்களுக்காகவே இந்த ப்ளூ ஸ்கோயர் ஷோரூம்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த யமஹா நிறுவனத்தின் பிரிமியம் பிராண்ட் பைக்குகள் மற்றும் ஆக்ஸசரீஸ்களை மட்டுமே விற்பனை செய்கிறது.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

மேலும் இந்த ப்ளூ ஷோரூம்கள் யமஹா நிறுவனம் தனது ரைடர்களுக்காக உருவாக்கிய ப்ளூ ஸ்டீக்கர்ஸ் ரைடர் கம்யூனிட்டிக்கான ஒரு தளமாக இது இருக்கிறது. இந்த கம்யூனிட்டி மூலம் யமஹா விரும்பிகள் அவர்களைப் போல மற்ற யமஹா விரும்பிகளுடன் ஒரு நட்புறவு கொள்ள முடியும்.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

இந்நிலையில் தற்போது யமஹா மோட்டார் நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 100 ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சேர்மன் இஷ்ஹின் சிஹானா கூறும்போது : ""தி கால் ஆஃப் தி ப்ளு" கேம்பெயின் மூலம் 100 ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை வெற்றி கரமாக திறந்துள்ளோம். ப்ளூ ஸ்கோயர் ஷோரூம்கள் வாடிக்கையாளர்கள் திருப்தி மற்றும் ஓனர்ஷிப் அனுபவத்திற்காக எங்கள் நிறுவனம் திறந்துவரும் ஷோரூம்கள்,

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

இந்த ஷோரூம்கள் சர்வதேச அளவில் யமஹா ரேஸிங் பிரியர்களை அதிகப்படுத்தும் என நம்புகிறோம். விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தியில் சிறப்பான மைல் கல்லை எப்படிப் பிடிக்க இந்தியா முழுவதும் இந்த ஷோரூமை திறந்துள்ளோம்.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

இந்த ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை ஒவ்வொரு யமஹா விரும்பிகளையும் சென்றடையும் வகையில் விரிவாக்கம் செய்யவுள்ளோம். இதன் மூலம் ரேஸிங் பிரியர்களுக்கு எங்கள் ஷோரூம் நிச்சயம் ஒரு டேஷ்டினேனாக அமையும். " எனக் கூறினார்.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

யமஹா ப்ளூ ஸ்கோயர் அவுட்லெட்களை பொருத்தவரை யமஹா நிறுவனத்தின் பிரிமியம் ரேஞ்ச் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் டிஸ்பிளேவில் இருக்கிறது. ஏரோக்ஸ் 155, YZF-R15M ஆகிய வாகனங்கள் மோட்டி ஜிபி எடிசன்களுடன் விற்பனையாகிறது. இது போக இந்நிறுவனம் வருங்காலத்தில் இந்த ப்ளூ ஸ்கோயர் நிறுவனத்திற்காகப் பிரத்தியேக வாகனங்களைச் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக 100வது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை திறந்த யமஹா . . .

யமஹா நிறுவனம் தனது ப்ளூ ஸ்கோயர் ஷோரூமை இந்தியாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒரிசா, அசாம், சத்தீஷ்கர், பிகார், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், டில்லி, ராஜஸ்தான், மற்று வடகிழக்கு மாநிலங்களில் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 2, 2022, 12:37 [IST]
English summary
Yamaha opens 100th blue square outlet in India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+