நான் பாட்டுக்கு செவனேன்னுதான்டா போய்ட்டு இருந்தேன்! யமஹா பைக் ரைடரால் தலையில் அடித்து கொண்ட பாவப்பட்ட மனிதர்!

இந்தியாவில் சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு சமீப காலமாக மிகவும் சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னணி மெட்ரோ நகரங்களில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் என பல்வேறு அம்சங்கள் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் வாகன ஓட்டும் பழக்கம் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் மாறவில்லை. வாகன ஓட்டிகள் பலர் தொடர்ந்து மோசமான வகையில்தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருவது உண்மையிலேயே மிகவும் வேதனையான ஒரு விஷயமாகதான் உள்ளது.

Yamaha R15-Scooter Accident

இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் நகருக்கு அருகே உள்ள சைபராபாத் பகுதியில் அரங்கேறிய இந்த சம்பவத்தின் வீடியோவும் (Video)வெளியாகியுள்ளது. பைக் ரைடர் ஒருவரின் அலட்சியத்தால் நடைபெற்ற சாலை விபத்தை இந்த வீடியோவின் மூலமாக நம்மால் தெளிவாக காண முடிகிறது.

சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த வைரல் வீடியோவை (Viral Video), சைபராபாத் போக்குவரத்து காவல் துறையினர், அவர்களின் யூடியூப் (YouTube) சேனலில் பதிவேற்றியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிவிடி கேமராவில் (CCTV Camera) இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

Yamaha R15-Scooter Accident

சாலை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது யமஹா ஆர்15 (Yamaha R15) பைக் ரைடர் ஒருவர், சாலையின் வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்திற்கு வர முயற்சி செய்கிறார். அப்போது அவர் டர்ன் இன்டிகேட்டர்களை போடவில்லை.

இதனால் அவ்வழியாக வந்து கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர். இதில் ஒரு சில வாகன ஓட்டிகள், யமஹா ஆர்15 பைக் ரைடரை பார்த்ததும் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டனர். இதனால் ஸ்கூட்டரில் வந்த ஒருவர், யமஹா ஆர்15 பைக்கை கவனிக்கவில்லை.

எனவே யமஹா ஆர்15 பைக்கின் பின் பகுதியில், ஸ்கூட்டர் மோதியது. இதன் காரணமாக யமஹா ஆர்15 பைக் மற்றும் ஸ்கூட்டரை ஓட்டி வந்த இருவரும் சாலையில் நிலைதடுமாறி விழுந்தனர். அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணிந்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரின் ஹெல்மெட் உடனடியாக தலையில் இருந்து கழன்று விழுந்தது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. எனினும் ஒரு சிலர் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக உதவிக்கு ஓடி வந்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்15 பைக்கின் ரைடர் மிகவும் அலட்சியமாக வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்திற்கு வந்ததுதான், இந்த சாலை விபத்திற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஸ்கூட்டர் ரைடர் ஓரளவிற்கு மிதமான வேகத்தில் வந்ததைபோல்தான் தெரிகிறது. ஆனால் திடீரென யமஹா ஆர்15 பைக் குறுக்கே வந்ததால், அவரால் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலைகளில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு வரும்போது, அதாவது லேன் மாறும்போது, மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த வீடியோ நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்திய சாலைகளில் பலர் இப்படி அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவார்கள் என்பதால், மிதமான வேகத்தில் செல்வதும் அவசியம். அப்போதுதான் வாகனத்தை கட்டுப்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 14:21 [IST]
English summary
Yamaha r15 scooter accident viral video full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+