இந்தியாவுலேயே இப்படி ஒரு யமஹா ஆர்எக்ஸ் இது ஒன்னுதான் இருக்கு.. இதோட மதிப்பு ரூ. 3.2 லட்சமாம்.. இதோ முழு விபரம்
பைக் மாடிஃபிகேஷன் வாயிலாக யமஹா ஆர்எக்ஸ் பைக் ஒன்று முற்றிலும் தனித்துவமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த மாற்றத்தினால் பைக்கின் மதிப்பு ரூ. 3.2 லட்சமாக அதிகரித்து உள்ளது. அப்படி என்னென்ன மாற்றங்கள் யமாஹ ஆர்எக்ஸ் பைக்கில் செய்யப்பட்டு உள்ளது என்பதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
யமஹா ஆர்எக்ஸ் 100, இந்த பைக் இப்போது விற்பனையில் இல்லை. இருந்தாலும் அதற்கு ரசிக பட்டாளம் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இப்போதும், இந்த பைக்கிற்கு ஃபேன்களும், டிமாண்டும் இருப்பது அதிசயத்தின் உச்சம். 90ஸ் கால கட்டத்தில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்ற பைக் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் இந்த பைக்கின் புகழ் 2 ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான், ஸ்ட்ரோக் வாகன உலகின் லெஜண்ட்டாக இந்த பைக் பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு புகழைச் சேர்த்து வைத்திருக்கும் ஓர் பைக் மாடலையே இந்திய இளைஞர்கள் சிலர் மாடிஃபிகேஷன் வாயிலாக மாறுபட்ட தோற்றம், திறன்மிக்கதாக மாற்றி இருக்கின்றனர்.
மாற்றப்பட்டு இருப்பது யமஹா ஆர்எக்ஸ் 135 மாடல் ஆகும். மாடிஃபிகேஷன் செய்யப்பட்டதால் இந்த பைக்கின் மதிப்பு தற்போது 3.2 ரூபாயாக அதிகரித்து உள்ளது. பைக்கின் ஹெட்லைட் தொடங்கி எக்சாஸ்ட் சிஸ்டம் வரை என பலவற்றை இளைஞர்கள் மாற்றி இருக்கின்றனர். இதனால்தான் அதன் மதிப்பு ரூ. 3.2 லட்சமாக உயர்ந்து இருக்கின்றது.

இந்தியாவில் இந்த மாடிஃபிகேஷன் சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், இந்த பைக்கிற்கு தேவையான பாகங்கள் சில வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி, இந்தோனேசியாவில் இருந்து பைக்கிற்கான சில முக்கிய பாகங்களே கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. யமஹா நிறுவனம் இந்த ஆர்எக்ஸ் பைக் மாடல்களை இந்தியாவில் மட்டுமில்லைங்க, சில உலக நாடுகளிலும் விற்பனைக்கு வழங்கியது.
அந்தவகையில், அது இந்தோனேசியா சந்தையில் ஆர்எக்ஸ் 135 மாடலை ஆர்எக்ஸ் கிங் எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கியது. அந்த சந்தையிலும் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்பு உண்டு. ஆகையால், அங்குள்ள ஆஃப்டர் மார்க்கெட்டில் ஆர்எக்ஸ் 135 அலங்கரிப்பதற்கான பாகங்கள் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதனாலேயே இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் தனது மலேசியா நண்பர் வாயிலாக பைக்கை அலங்கரிக்கும் சாதனைங்களை வாங்கி தற்போது மிகவும் அட்டகாசமானதாக மாற்றி இருக்கின்றார். இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் ஹெட்லைட் எல்இடி லைட் ஆகும். சதுரமான வடிவில் முற்றிலுமான மாறுபட்ட தோற்றத்தில் அது உள்ளது.
இதேபோல், திருப்பத்தை சமிக்ஞை செய்யும் இன்டிகேட்டர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல மாற்றங்கள் பைக்கில் செய்யப்பட்டு இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் பைக்கின் ஃப்ரேம் மற்றும் எஞ்சினை தவிர மற்ற அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றன அல்லது மாடிஃபை செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் ஃப்யூவல் டேங்கும் லேசாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் வீல் மாற்றப்படவில்லை என நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த ஸ்டீல் வீலும் மாற்றப்பட்டதே ஆகும். 17 அங்கு வீல்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த வீலில் பந்தய பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயரே பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டிஸ்க் பிரேக்குகள் என்டார்க் ஸ்கூட்டர்களுக்கானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காலிபர் மற்றும் மாஸ்டர் சிலிண்டர்கள் ஆர்சிபி தயாரிப்பாகும்.
இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன்களும் மிக சிறப்பானவையாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இருக்கை மிகவும் ஸ்பெஷலானதாகக் கட்சியளிக்கின்றது. இதனை தேவைக்கு ஏற்ப அவரே கஸ்டமைஸ் செய்து பெற்றிருக்கின்றார். இந்த ஒட்டுமொத்த அப்கிரேஷனுக்கும் மொத்தமாக 10 நாட்கள் எடுத்திருக்கின்றன. ஆகையால், மிகவும் விறுவிறுப்பாக இந்த பைக் மாடிஃபிகேஷன் பணிகள் அரங்கேறி இருப்பது துள்ளியமாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கை மிகவும் அழகிய கிராஃபிக்குகளால் இளைஞர்கள் அலங்கரித்து இருக்கின்றனர். இது அந்த பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த பைக்கை இளைஞர்கள் மாடிஃபை செய்த கையோடு வேறொரு நபர்களுக்கு விற்று விட்டதாகவும் கூறப்படுகின்றது. ரூ. 30 ஆயிரம் லாபத்திற்கே அவர்கள் விற்றிருப்பதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









