போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

போலீஸ்காரர்களிடம் வேலையை காட்டிய இளைஞர்களிடம் போலீசார் தங்கள் வேலையை காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

இந்தியாவில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் கிண்டல் செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக டூவீலர்களில் பயணிப்பவர்களால்தான் போலீசாருக்கு இவ்வாறான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. போலீசார் பைக்கை நிறுத்த முயலும்போது, அவர்களை கிண்டல் செய்து விட்டு, வாகன ஓட்டிகள் வேகமாக தப்பி விடுகின்றனர்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

இது ஏதோ இந்தியாவில் ஒரு நகரத்தில் அல்லது ஒரு மாநிலத்தில் மட்டும் ஏற்படும் பிரச்னை கிடையாது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இந்த பிரச்னை நிலவி வருகிறது. இந்த சூழலில் சண்டிகர் போக்குவரத்து போலீசார் சமீபத்தில் இதே பிரச்னையை சந்தித்துள்ளனர். பைக்கில் ட்ரிபிள்ஸ் வந்தவர்களை நிறுத்த முயன்றபோது, அவர்கள் போலீசாரை கிண்டல் செய்து விட்டு சென்றுள்ளனர்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

எனினும் போலீசாரை கிண்டல் செய்து விட்டு 3 இளைஞர்கள் பைக்கில் தப்பிய சம்பவம் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து அந்த பைக்கின் உரிமையாளரை போலீசார் கண்டறிந்தனர். இதன்பின் அவருக்கு தங்கள் பாணியில் அதிரடி தண்டனை ஒன்றை வழங்கினர். இந்த சம்பவம் சண்டிகரில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

சண்டிகரின் செக்டார் 25/38 டைவிங் ரோடு பகுதியில், போக்குவரத்து போலீசார் சமீபத்தில் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக யமஹா ஆர்எக்ஸ் 2-ஸ்டிரோக் பைக்கில் 3 பேர் வந்தனர். இதை பார்த்ததும் போலீசார் அவர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் பைக்கை நிறுத்துவதற்கு பதிலாக போலீசாரை பார்த்து சிரித்தபடியும், டாட்டா காட்டியபடியும் அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரங்களுக்கு உள்ளாக பைக்கின் உரிமையாளரும் சண்டிகரின் செக்டார் 25 பகுதியை சேர்ந்தவருமான விக்ராந்த் என்பவரை போலீசார் கண்டறிந்தனர். அவருக்கு 7 குற்றங்களுக்காக 14,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. என்னென்ன குற்றங்களுக்காக விக்ராந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பதை கீழே காணலாம்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

1. ட்ரிபிள் டிரைவிங்

2. ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தது.

3. டிராபிக் சிக்னலுக்கு கீழ்படியாதது.

4. சாலையின் ராங் சைடில் வாகனத்தை ஓட்டியது.

5. சைக்கிள் டிராக்கில் வாகனத்தை ஓட்டியது உள்பட 7 குற்றங்களுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

ஆனால் பில்லியன் ரைடர்களுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வாகனத்தின் கண்ட்ரோலில் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரை மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பது கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. போலீசாரை கிண்டல் செய்து விட்டு 3 இளைஞர்கள் பைக்கில் தப்பி செல்லும் வீடியோ அங்கிருந்த 2 பாதசாரிகளால் எடுக்கப்பட்டது.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

அந்த பைக்கின் பதிவு எண் வீடியோவில் பதிவானது. இதனை அடிப்படையாக வைத்து செக்டார் 29 பகுதியை சேர்ந்த அந்த பைக்கின் உரிமையாளரை போலீசார் கண்டறிந்தனர். ஆனால் அந்த நபரோ செக்டார் 25 பகுதியை சேர்ந்த விக்ராந்த்திற்கு பைக்கை விற்பனை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதன்பின்புதான் விக்ராந்த்தை போலீசார் கண்டறிந்தனர்.

போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

விக்ராந்த்தின் வீட்டிற்கே சென்று அபராத ரசீதை போலீசார் வழங்கியபோது, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர் லைசென்ஸை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு கூடுதலாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தும் வரை விக்ராந்த்தால் பைக்கின் ஓனர்ஷிப்பை மாற்றம் செய்ய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2019, 12:00 [IST]
English summary
Yamaha RX Rider Fined Rs.14,500 For Violating Traffic Rules. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+