தமிழ்நாட்டை புரட்டி போட்ட விஜய் படத்துல முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா! 1.50 கோடி கார்ல தேவதை மாரி வர்றாங்க
இந்தியாவின் சொகுசு கார் (Luxury Car) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள நிறுவனங்களில், பிஎம்டபிள்யூ (BMW) முதன்மையானது. குறிப்பாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) காருக்கு, இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, ரஜினிகாந்த் (Rajinikanth), அஜய் தேவ்கன் (Ajay Devgn), யுவராஜ் சிங் (Yuvraj Singh) மற்றும் கேஎல் ராகுல் (KL Rahul) போன்ற பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் சொந்தமாக வைத்துள்ளனர்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஆரம்ப விலை 1.29 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.33 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) வேரியண்ட்டை பொறுத்து, சுமார் 1.50 கோடி ரூபாய் முதல் 1.60 கோடி ரூபாய் வரை வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரில் பிரபல நடிகை ஒருவர் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, பிரபல நடிகையான யாமி கௌதம் (Yami Gautam) ஆவார்.
இவர் ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் கன்னடா மட்டுமின்றி, தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழை பொறுத்தவரையில், ராதா மோகன் இயக்கத்தில் உருவான கௌரவம் மற்றும் ஜெய் நடிப்பில் உருவான தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட 2 திரைப்படங்களில் யாமி கௌதம் நடித்திருக்கிறார்.

இதில், கௌரவம் திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டும், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டும் வெளியானது. அதற்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் யாமி கௌதம் தலை காட்டவில்லை. மாறாக ஹிந்தி மொழி திரைப்படங்களில் அதிகளவில் நடிக்க தொடங்கினார்.
அவர் தற்போது பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் மிகவும் சொகுசானது. இந்த விலை உயர்ந்த காரில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை 3 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 3 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வரும் இந்த கார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மற்ற பெரும்பாலான நடிகைகளை போலவே, யாமி கௌதமும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரிடம் ஏற்கனவே உள்ள ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் ஆடி ஏ4 (Audi A4) போன்ற சொகுசு கார்கள் எல்லாம் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
யாமி கௌதமை பற்றிய மற்ற தகவல்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் (Tamil Nadu) பல சர்ச்சைகளையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்திய தலைவா (Thalaivaa) படத்தில், விஜய்க்கு (Vijay) ஜோடியாக முதலில் யாமி கௌதம்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே அவருக்கு பதிலாக அமலா பால் (Amala Paul) நடித்தார்.


Click it and Unblock the Notifications








