பர்த் டே பேபியின் மிரள வைக்கும் சொகுசு கார்கள்... 2 படம் மொத்தமா தூக்கி விட்டுடுச்சு!!
பேன் இந்தியா (Pan India) படத்தின் மூலம் தென்னிந்தியாவில் இருந்தும் நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ரசிக்கக்கூடிய திரைப்படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்தவர்களுள் கன்னட நடிகர் நவீன் குமார் கவுடா (Naveen Kumar Gowda)-வும் ஒருவர் ஆவார். இந்த பெயரில் எந்த நடிகரையும் கேள்விப்பட்டது போல் இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. யாஷ் (Yash) என்று சொன்னல் தெரிகிறதா? கேஜிஎஃப் (KGF) நாயகன்... அவரே தான். இன்னும் சிலருக்கு, 'ராக்கி பாய்' (Rocky Bhai) என்று சொன்னால் தெரியும்.
ராக்கி பாய்க்கு இன்று (ஜனவரி 8) 39வது பிறந்தநாள் ஆகும். கர்நாடகா மாநிலம், ஹசான் மாவட்டத்தில் உள்ள பூவனஹள்ளி என்கிற கிராமத்தில் 1986ஆம் ஆண்டில் பிறந்தவரான நவீன் குமார் கவுடா தனது சினிமா பயணத்திற்காக பெயரை 'யாஷ்' என மாற்றிக் கொண்டார். 2008ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தாலும், 2018இல் வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படம் தான் யாஷின் சினிமா கேரியரை முற்றிலுமாக திருப்பி போட்டது.

பொதுவாக, இந்திய அளவில் நன்றாக ஓடிய திரைப்படம் அதன் 2வது பாகத்தில் சற்று சொதப்புவது உண்டு. ஆனால், 2022ஆம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் 2ஆம் பாகமும் பேன் இந்திய அளவில் வெற்றி பெற்றது. முதல் பாகத்தை காட்டிலும் 5 மடங்கு அதிக வசூலை அள்ளிய கேஜிஎஃப் 2ஆம் பாகம், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இதுவரையில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களுள் ஒன்றாக உள்ளது.
இந்த தொடர் வெற்றிகளுக்காக பல வருடங்கள் கடினமாக உழைத்த நடிகர் யாஷ் ஓர் கார் பிரியர் ஆவார். சமீபத்தில் கூட, கருப்பு நிறத்தில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காரை ஷோரூமில் இருந்து மனைவி ராதிகா பண்டிட் மற்றும் குழந்தைகள் உடன் நடிகர் யாஷ் வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்றும் அந்த சமயத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ரூ.5 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) காரை நடிகர் யாஷ் வாங்கியுள்ளார். இந்த விலைக்கு ஏற்ப இந்த ரேஞ்ச் ரோவர் காரில் பல லக்சரியான அம்சங்களும், பல வண்ணங்களில் பெயிண்ட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த ரேஞ்ச் ரோவர் காருக்குள் நன்கு விசாலமான இருக்கை அமைப்பு, ஏசி உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.
இந்த ரேஞ்ச் ரோவர் ஸ்பெஷல் எடிசன் கார் மட்டுமின்றி, மெர்சிடிஸ்-பென்ஸ் டி.எல்.எஸ் 350டி (Mercedes-Benz DLS 350d) காரும் நடிகர் யாஷிடம் உள்ளது. மெர்சிடிஸின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) காரான இதன் விலை ரூ.85 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இந்த பென்ஸ் காருடன், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி 250டி (GLC 250d) என்கிற ரூ.78 லட்சம் மதிப்பாலான பென்ஸ் காரும் இந்த நடிகரிடம் உள்ளது.

பிஎம்டபிள்யூ (BMW)-இல் 5-சீரிஸ் (5-Series) கார் யாஷிடம் உள்ளது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.70 லட்சம் இருக்கும். இவற்றுடன், ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடி க்யூ7 (Audi Q7), ரூ.70 லட்சம் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque), ரூ.35 லட்சம் மதிப்பிலான பஜேரோ ஸ்போர்ட் (Pajero Sport) உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்துள்ள இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாயின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.53 கோடி என்கிற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் யாஷிடம் உள்ள சொகுசு கார்களை எல்லாம் பார்த்தால், இவற்றை நிறுத்துவதற்காகவே பெரிய கேரேஜை கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. மேலும், இந்த தொகுப்பில் பார்த்துள்ளவை இந்த கன்னட நடிகரிடம் உள்ள சொகுசு கார்களை மட்டுமே ஆகும். இன்னும், விலை குறைவான கார்களை எல்லாம் சேர்த்தால், லிஸ்ட் பெரியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









