தாலி கட்டி 10 வருஷம் ஆன பிறகும் மனைவிய தாங்கு தாங்குன்னு தாங்கறாரு! வாடக கார்ல சாதாரணமா போனது இவ்ளோ பெரிய ஆளா!

திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது தற்போது அதிகமாகி விட்டது. ஒரு சில பிரபலங்கள் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று விடுகின்றனர். இன்னும் ஒரு சில பிரபலங்களோ, திருமணமாகி பல வருடங்கள் கடந்த பின்னரும் கூட, அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் திடீரென விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்புகள் சமூக வலை தளங்களில் பேசு பொருளாக மாறுவது சமீப காலமாக வாடிக்கையாகி விட்டது.

உண்மையில் விவாகரத்து பெறுவது என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்களுடைய தனியுரிமைக்கு நாம் மதிப்பளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் பிரபலமான மனிதர்கள் என்பதால், அவர்களுடைய விவாகரத்து முடிவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என சமூக வலை தளங்களில் சர்ச்சை கிளம்பி விடுகிறது.

Yash-Radhika

ஆனால் ஒரு சில பிரபலமான மனிதர்கள், இந்த சர்ச்சைகளுக்குள் எல்லாம் சிக்காமல், வாழ்ந்து வருகின்றனர். இதில், யஷ் (Yash) மிகவும் முக்கியமானவர். கன்னட நடிகரான இவர் கேஜிஎஃப் (KGF) திரைப்படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். கேஜிஎஃப் திரைப்படம் இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி தந்துள்ளது.

இவருக்கும், பிரபல நடிகையான ராதிகா பண்டிட்டிற்கும் (Radhika Pandit) சுமார் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். யஷ் - ராதிகா திருமண பந்தம் மற்றவர்களுக்கு எல்லாம் முன் மாதிரியானது என்பது அவர்களுடைய ரசிகர்களின் கருத்து.

Yash-Radhika Spotted In Mercedes Benz GLS Taxi

இந்த சூழலில், அவர்களுக்கு இடையேயான அன்பை வெளிக்காட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், யஷ் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் கை கோர்த்தபடியே ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வெளியே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

வெளியில் அவர்களுக்கு கார் ஒன்று காத்து கொண்டுள்ளது. பொதுவாக இது போன்ற சூழல்களில் தனித்தனியாக சென்று ஒவ்வொரு டோரின் வழியாக காருக்குள் ஏறுவதுதான் பலரின் வழக்கம். ஆனால் யஷ் அப்படி செய்யவில்லை. மாறாக முதலில் ஒரு கதவை அவரே திறந்து ராதிகாவை காரில் அமர வைக்கிறார்.

அதன் பின் மற்றொரு கதவு வழியாக காருக்கு உள்ளே அவர் ஏற செல்கிறார். அத்துடன் இந்த வீடியோ முடிவடைந்து விடுகிறது. யஷ் அவரது மனைவி ராதிகாவை கவனித்து கொள்ளும் விதம் அற்புதமானது என இந்த வைரல் வீடியோவிற்கு சமூக வலை தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவின் மற்ற நடிகர்களை போலவே யஷ்சும் விலை உயர்ந்த கார்களை விரும்ப கூடியவர். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes Benz GLS 350D), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 250டி கூபே (Mercedes Benz GLC 250D Coupe), ஆடி க்யூ7 (Audi Q7), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) ஆகிய கார்களை எல்லாம் அவர் வைத்துள்ளார்.

ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் பார்ப்பது வாடகை கார் ஆகும். எனினும் பிரபலங்களை வாடகை காரில் பார்ப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஒரு சில சமயங்களில் அவர்கள் வாடகை கார்களில் பயணம் செய்வது வழக்கமான ஒரு விஷயம்தான். இருப்பினும் யஷ் மற்றும் ராதிகா பயணம் செய்தது, மிகவும் விலை உயர்ந்த வாடகை கார் ஆகும்.

அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.34 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.39 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் சில நிறுவனங்கள் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு வழங்கி வருகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களை கூட வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும். பிரபல மனிதர்கள் வெளியூர் செல்லும் சமயங்களில் ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டல், ஹோட்டலில் இருந்து ஏர்போர்ட் பயணிப்பதற்கு விலை உயர்ந்த வாடகை கார்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி யஷ், ராதிகாவுடன் வெளியூர் சென்ற சமயத்தில், வாடகை காரை பயன்படுத்தியிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 14:09 [IST]
English summary
Yash radhika spotted in mercedes benz gls taxi viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+