மஞ்சள் நிறத்தில் மாறும் அரசு பஸ்கள்! இதுல இருக்குற வசதிகள் தெரிஞ்சா பக்கத்து ஸ்டேட்காரங்க பொறாமை படுவாங்களே!
தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அடுத்த 6 மாதங்களில் 1000 பஸ்கள் வரவுள்ளது. இந்த பேருந்துகளில் உள்ள வசதிகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் அரசு பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு சிறந்த பேருந்து சேவைகளை வழங்க அவ்வப்போது தமிழ்நாடு அரசு பேருந்துகளை அப்டேட் செய்து வருகிறது.

அதன்படி தற்போது புதிதாக பேருந்தை அப்டேட் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் சுமார் 2000 பேருந்துகளை அப்டேட் செய்து புதிய மஞ்சள் நிற பேருந்துகளாக அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இதில் முதல் கட்டமாக ஆயிரம் பேருந்துகளை மட்டும் அடுத்த ஆறு மாதத்திற்குள் புதுப்பிக்க ஆணை பிறப்பித்தது.
இந்த 1000 பேருந்துகளில் முதல் 100 பேருந்துகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. படிப்படியாக அடுத்த பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் மொத்தம் 2000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இது மக்களின் வசதிக்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2000 புதிய பேருந்துகளை பொறுத்தவரை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளில் சேஸ்ஸை அடிப்படையாகக் கொண்டு புதிய பேருந்துகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால் முற்றிலுமாக புதிதாக பேருந்துகளை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பழைய பேருந்துகளையே புதிதாக புதுப்பித்துக் கொள்ள முடியும். இதனால் செலவும் குறையும்.
இதில் புதிய மஞ்சள் பேருந்துகளில் பழைய பேருந்துகளில் இல்லாத அளவு சில முக்கியமான வசதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது முக்கியமாக இந்த பேருந்துகளின் படிக்கட்டுகள் வயதானவர்களும் ஏறக்கூடிய அளவில் குறைவான உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது படிக்கட்டுகள் ரோட்டுக்கு மிக அருகில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஸ்சுக்கு உட்புறம் வழக்கமான பழைய பஸ்களில் 57 சீட்டுகள் இருக்கும் ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள பஸ்களில் 52 சீட்டுகள் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சீட்டில் அமர்ந்து வருபவர்களுக்கு அதிக இட வசதி இருக்கிறது. குறிப்பாக உயரமானவர்கள் சீட்டில் அமர்ந்தால் அவர்கள் முட்டி தட்டாதவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸில் மற்றொரு முக்கியமான அப்டேட் என்றால் அது செல்போன் சார்ஜர் தான். பொதுவாக அரசு பஸ்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி இருக்காது. ஆனால் இனி இந்த பஸ்களில் இரண்டு சார்ஜிங் பாய்ண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவைப்பட்டால் இதை அவசர நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த பஸ்ஸில் முக்கியமாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகளை டிரைவர் மட்டுமே ஆப்ரேட் செய்ய முடியும். பஸ்ஸில் வேகமாக செல்லும் போது தானியங்கி கதவுகளை மூடிவிட்டால் பஸ்ஸிலிருந்து யாரும் ரன்னிங்கில் ஏறவோ இறங்கவோ முடியாது. இதனால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
இந்த பஸ்சின் நிறத்தை பொருத்தவரை மஞ்சள் மற்றும் வெளிர்மஞ்சள் ஆகிய நிறங்களை வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய டிசைனில் இந்த பஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் இருக்கைகள் எல்லாம் அதிக குஷன் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அரசு பஸ்களில் பயணிகள் சிரமம் என்று பயணம் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு அவ்வப்போது போக்குவரத்து கழக பஸ்களை அப்டேட் செய்வது நல்ல விஷயம் தான். ஆனால் இன்றும் சாலையில் ஓடவே தகுதி இல்லாத பல பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதை கவனித்து அந்த பஸ்களை முதலில் சீரமைக்க வேண்டும். அந்த பஸ்கள் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கும் அபாயத்தில் ஏக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications