சென்னையில இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தா தரமா இருக்கும்.. YellowHat & ReadyAssist இன் விருது நிகழ்ச்சி!
ஜூன் 21 ஆம் தேதி உலக மோட்டார் சைக்கிள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அந்த தினமே இன்று. இந்த தினம் மோட்டார்சைக்கிள் பிரியர்களின் ஸ்பெஷலான நாள்களில் ஒன்று ஆகும். பெண்கள்மீது காதல் கொள்ளாத இளைஞர்களைக்கூட பார்த்துவிட முடியும், மோட்டார்சைக்கிள் மீது காதல் கொள்ளாதவர்களைக் காண்பது மிக மிக கடினம்.
இத்தகைய மோட்டார்சைக்கிள்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நாளாகவே ஜூன் 21 இருக்கின்றது. இந்த தினத்தின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யெல்லோ ஹேட் மற்றும் ரெடி அசிஸ்ட் (YellowHat and ReadyAssist) இரு நிறுவனங்களும் இணைந்து பெங்களூருவில் ஓர் மாபெரும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியே இப்போது தொடங்கி இருக்கின்றது. இதில், சுமார் 700 க்கும் அதிகமான இருசக்கர வாகன காதலர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுடன் இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓபராயும் இணைந்துக் கொள்வார். சிறப்பு விருந்தினராக இவருடன் இன்னும் சில முக்கிய பிரமுகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய கொண்டாட்டமாக நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, கலாச்சார நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற இருக்கின்றன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்தும் இங்கு நடைபெற உள்ளது. இத்துடன், டிஜே இசை நிகழ்ச்சி மற்றும் சமூக வலைதள ஃபேம்கள் உள்ளிட்ட சிலரின் சொற்பொழிவுகளும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற இருக்கின்றது.

ஆகையால், மிக சிறந்த அனுபவமாக இந்த தினம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, சில முக்கிய நிறுவனங்களின் ரைடிங் கியர்களும் இங்கு விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன காதலர்களை ஈர்க்கும் பொருட்டு இதற்கான விற்பனை மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
மேலும், டூ-வீலர் ஸ்டண்ட் ஷோவும் நடைபெற இருக்கின்றது. இத்துடன், சில கேடகரியின்கீழ் இருசக்கர வாகன ரைடர்கள் மற்றும் ரெடி அசிஸ்டின் மெக்கானிக்கள் சிலருக்கு விருது வழங்கவும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மெக்கானிக்குகளின் பிள்ளைகள் 36 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் ஓராண்டிற்கான படிப்பிற்கான செலவுகள் ஏற்கப்பட உள்ளது.

இத்தகைய சூப்பரான நிகழ்ச்சியே இருசக்கர வாகன ரைடர்களுக்கு மத்தியில் தற்போது பெங்களூருவில் தொடங்கி இருக்கின்றது. விருதுப் பெற்றவர்கள் பற்றிய விபரம் இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய நபர்கள் கலந்துக் கொண்டு இருக்கின்றனர்.

நிகுஞ்ஜ் பட்டில் (முன்னாள் ஃபடா தலைவர்), ராம சங்கர் பாண்டே (சிஇஓ, டாடா கிரீன் பேட்டரீஸ்), தீபங்சு தேவ் சர்மா (சீஃப் எடிட்டர், மொபிலிட்டி அவுட்லுக்), சோஹிந்தர் சிங் கில் (சிஇஓ, ஹீரோ எலெக்ட்ரிக்) மற்றும் ஸ்ரேஷ்த் மிஷ்ரா (கோ ஃபுண்டர் சிம்பிள் எனர்ஜி) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரைடர்கள் இடையே நட்புறவை அதிகரிக்கச் செய்யும் விதமாகவும், இருசக்கர வாகன தினத்தை சிறப்பிக்கும் விதமாக யெல்லோ ஹேட் மற்றும் ரெடி அசிஸ்ட் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இந்த நிகழ்ச்சி இருசக்கர வாகனம் சார்ந்த வணிகத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









