ஏற்காடுக்கு டூ-வீலர்ல சுற்றுலா போக போறீங்களா.. மலையேறதுக்கு முன்னாடியே போலீஸ் ரெடியா காத்திருக்காங்க!

தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஏற்காடு-ம் ஒன்றாகும். தற்போது கோடை விடுமுறை காரணமாக மக்கள் சாரை சாரையாக அங்கு குவிந்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்காட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோடை விழா மலர் கண்காட்சியைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள்கள் அங்கு அதிகளவில் குவிந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதன் விளைவாக சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகன வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அணிவகுத்து நிற்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சில கட்டுப்பாடுகளை காவல்துறையினர் ஏற்காடுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அறிவித்து இருக்கின்றது. விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் பொருட்டு காவலர்கள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Yercaud ghat

அந்தவகையிலேயே இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும் போலீஸார்கள் அறிவித்து இருக்கின்றனர். தலைக்கவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் பயணிகள் ஏற்காடுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்து இருக்கின்றது.

இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஹெல்மெட் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இதன் காரணத்தினாலேயே தலைக் கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இரண்டு சக்கர வாகன ஓட்டி மட்டுமின்றி, இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக் கசவம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Helmet mandatory

இதுதவிர இன்னும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்காட்டில் அனுமதி இல்லை என்பதை வனத்துறை தெரிவித்து இருக்கின்றது. இதை மீறும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வனப்பாதுகாவலர்கள் அறிவித்து இருக்கின்றனர். இத்துடன், குடிதண்ணீர் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடனேயே தலைக் கவசம் ஏற்காட்டில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கூடுதலாக வாகன ஓட்டிகளின் உரிமத்தை பரிசோதிக்கும் பணிகளிலும் போலீஸார் ஈடுபட்டனர். மேலும், விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வாகன ஓட்டிகளை மணிக்கு 30 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கை சிறுவர்களின் பெற்றோர்கள் மீது எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றது. போக்குவரத்து சட்டத்தின்கீழ் அபராதம், சிறை தண்டனை மற்றும் வாகனம் பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் இந்த விதிமீறலுக்கு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஏற்கனவே இந்த விதிகளை ஏற்காட்டில் போலீஸார்கள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, சென்ற நாட்களில் ஹெல்மெட் இல்லாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கு உரிய அபராதத்திற்கான செல்லாணையும் காவல்துறையினர் வழங்கி இருக்கின்றனர்.

ஆமாங்க, அபராத செல்லாண் போட்டு கைகளில் ஒப்படைத்த பின்னரே இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். சுற்றுலா வரும் சிலர் செய்யும் சிறு தவறுகள் பல்வேறு அசம்பாவதங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டே காவலர்கள் முன்னெச்சரிக்கையாக தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஏர்காட்டில் 47வது மலர் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 22 ஆம் தேதி தொடங்கிய இந்த மலர் கண்காட்சி ஐந்து நாட்கள் (26 ஆம் தேதி வரை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சுற்றுலா பயணிகள் இதை நீட்டிக்க கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையிலேயே அது தற்போது வருகின்ற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 15:08 [IST]
English summary
Yercaud police announced helmet mandatory for two wheelers
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+