காரை ரொம்ப நேரம் ஓட்ட போறீங்களா.. இதோ உங்களுக்கான ஸ்பெஷல் யோகாக்கள்..

இருப்பதிலேயே ரொம்ப டஃபான விஷயம் என இந்திய சாலையில் வாகனங்களை ஓட்டுவதைச் சொல்லலாம். சாலைகள், ஒரு பக்கம் வாகனங்களை ஓட்டுவதையே சவாலானதாக மாற்றுகின்றது என்றால், மற்றொரு பக்கம் லோக்கல் ரேஸர்கள் அதை கூடுதல் சவாலானதாக மாற்றிவிடுகின்றனர். இவர்கள் கொடுக்கும் தொல்லை அதற்கு மேல் டஃபானது.

சர்சர் என்று வாகனங்களுக்கு குறுக்காகவும், மறுக்காகவும் புகுந்து போய் ரத்த கொதிப்பு இல்லாத நபர்களுக்குகூட ரத்த கொதிப்பை வரவைத்துவிடுவார்கள். மேலும், பார்த்து பார்த்து போகக் கூடிய பொறுமையான நபர்களைகூட ரேஷ் டிரைவ் செய்யும் வகையில் மாற்றுவிடுவார்கள். இத்தகைய சூழலை கையாள சில ஸ்பெஷல் யோகா ஆசனங்கள் உள்ளன.

International day of yoga

அவை என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக இந்த உலகம் அனுசரித்து வருகின்றது. இந்த நாளை முன்னிட்டே டிரைவர்களுக்கான சிறப்பு ஆசனம் பற்றிய தகவலை இங்கு பார்க்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சுவாச பயிற்சி: வாகனம் ஓட்டும்போது சுவாசம் சீராக இல்லாததை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா?, இல்லை எனில் அடுத்த முறை வாகனத்தைக் கொண்டிருக்கையில் அதை கவனித்து பார்க்கவும். அது நாம் நினைப்பதைபோல் அமைதியாக இல்லாமல் இருப்பதை உணர்வீர்கள். குறிப்பாக, சக வாகன ஓட்டிகளின் செயலால் ஏற்படும் மன அழுத்தம், உங்கள் சுவாசத்தை மிகுந்த ஆக்ரோஷமானதாக மாற்றிவிடும்.

Stress free driving

இதுமாதிரியான சூழலில் உங்கள் மனதையும், சுவாசத்தையும் சீரானதாக மாற்ற சுவாச பயிற்சியே மிகுந்த உதவியாக இருக்கும். பலர் விபத்தைச் சந்திக்க வாகனம் ஓட்டும்போது மனது ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. புள்ளி விவரங்கள் சில, சக வாகன ஓட்டிகள் ஏற்படுத்தும் மன உளைச்சலே விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆகையால், மன உளைச்சலை தவிர்ப்பதே நமக்கு நல்லது.

மெடிடேஷன்: லாங் ட்ரிப்பை மேற்கொள்ளும் முன் ஒரு குட்டி மெடிடேஷனை செய்யலாம். இது நீண்ட தூர பயணத்தின்போது மன அமைதியை வழங்கும். இதை லாங் டிரைவ் செய்வதற்கு முன் மட்டுமல்ல டிரைவ் செய்துக் கொண்டிருக்கும்போது இடையிலும் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதனால் மனம் ஒரு நிலை செய்யப்பட்டு கூடுதல் கவனத்தை சாலையில் செலுத்த உதவியாக இருக்கும்.

Stress free driving tip

ஸ்ட்ரெட்ச் செய்யலாம் மற்றும் ஷோல்டர்களை ரொட்டேஷன் செய்யலாம்: நீண்ட நேரமாக ஒரே பொசிஷனில் அமர்ந்திருக்கும்போது அது உங்களுக்கு வெறுப்பையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தக் கூடும். இந்த மாதிரியான சூழலில் கைகளை ஸ்ட்ரெட்ச் மற்றும் ஷோல்டர் ரொடேஷனைச் செய்து கொள்ளலாம். இதன் உடல் பாகங்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்.

குறிப்பாக, கைகளை முன் மற்றும் பின் பக்கமாக சுழல செய்வதனால் கைகளின் ரத்த ஓட்டம் சீராகி வலிகள் நீங்கும். மேலும் கணிசமான அளவு ஓய்வு கைகளுக்கு கிடைக்கும். இதுதவிர, இருக்கையில் அமர்ந்தபடியே உங்களின் இடுப்புகளை வளைத்து, நெளித்து லேசாக ஸ்ட்ரெட்ச் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக உடல் சோர்வு லேசாக குறையும்.

இதேபோல், வாகனத்தை எடுக்கும் முன்பும் லேசாக ஒட்டுமொத்த உடலையும் லேசாக ஸ்ட்ரெட்ச் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக இருக்கமான ரைடிங் உணர்வு ஏற்படுதவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். உடலை கோணல் மாணலாக வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்: காரை எடுக்கும் முன், உங்களின் பேண்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் வால்லட்டை எடுத்து காருக்குள் வைத்துவிடலாம்.

பாக்கெட்டில் வால்லட்டை வைத்தபடி அமர்வதனால் ஒரு பக்கம் ஏற்றமாகவும், மறு பக்கம் இறக்காமவும் இருக்கும். இதனால் இடுப்பு வலி ஏற்பட கூடும். மேலும், உடலின் பொசிஷனும் மாறக் கூடும். ஆகையால், காரின் இருக்கையில் அமரும்போது சமநிலையில் அமர்ந்திருக்கோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கூன் விழுந்ததைப் போலவும் அமர வேண்டாம். இதனால், உங்களுக்கு விரைவில் பின் பக்க வலி ஏற்பட தொடங்கும்.

கபாலபதி சுவாச பயிற்சி: காரை ஓட்டும்போது இதை செய்வதனால் மன அழுத்தம் மற்றும் உடலில் தேங்கும் நச்சு வாயுக்களை வெளியேற்ற முடியும். அதிக காற்றை உள்வாங்குவதால், உள்ளே ஏற்கனவே இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும். இதன் வாயிலாக தூக்க கலக்கமாக உணர்ந்தாலும் அதையும் அகற்றிக் கொள்ள முடியும். நான்கு 30 செகண்டுகளுக்கு இதை செய்வதனால் உங்களின் மனதில் அமைதியான சூழல் ஏற்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறிய ஆசனங்கள் மற்றும் உடற்பயிற்சியை செய்வதன் கூடவே மன அமைதியை வழங்கக் கூடிய பாடல்களையும் கேட்கலாம். அதேவேளையில், காரை ஓட்டும்போது உற்சாகமான மன நிலையே தேவை என்பதால் உங்களை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள பாடல்களை அதிகம் கேட்கலாம். இதை உங்களை விழிப்புடன் வைத்து மிகுந்த உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 15:16 [IST]
English summary
Yoga for drivers international yoga day special
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X