அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் ஒருவர் செய்த காரியத்தை, கோவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

தேர்தல் வந்து விட்டால், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு மிகவும் வித்தியாசமான சில வழிகளை கையில் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும், தங்கள் கட்சிக்காக மிகவும் நூதனமான வழிகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வாக்கு கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

இந்த வரிசையில் யோகா மாஸ்டர் ஒருவர் அதிமுகவிற்காகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காகவும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையின் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும், அனைவரின் கவனிக்கும் தொகுதியாகவும் தொண்டாமுத்தூர் மாறியுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

அவரை எதிர்த்து மிகவும் வலுவான வேட்பாளரான கார்த்திகேய சிவசேனாபதியை திமுக களமிறக்கியுள்ளதால், தொண்டாமுத்தூரில் போட்டி அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக யோகா மாஸ்டர் ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வித்தியாசமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

அவர் தலைகீழாக நடந்தபடியே மாருதி சுஸுகி ஆல்டோ காரை இழுத்து சென்றுள்ளார். சத்ரபதி என்ற அந்த யோகா மாஸ்டர் அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதற்காக மட்டும் இதை நான் செய்யவில்லை என கூறியுள்ளார். மேலும் யோகா குறித்த விழிப்புணர்வையும், அதன் பலன்களையும் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்கமும் இதில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

மாருதி சுஸுகி ஆல்டோ இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும். இடுப்பில் சங்கிலியை கட்டிக்கொண்டு அதன் மூலம் மாருதி சுஸுகி ஆல்டோ ஹேட்ச்பேக் காரை சுமார் 800 மீட்டர்களுக்கு இழுத்து சென்றதாகவும் சத்ரபதி கூறியுள்ளார். இதனை ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியிடம் இருந்து வெளிவரும் சிறிய கார்களில் ஒன்று ஆல்டோ. இதன் எடை 755 கிலோ. எடை குறைவானது என்றாலும் கூட, இந்த காரை தலைகீழாக நடந்தபடியே 800 மீட்டர்களுக்கு இழுத்து செல்வதற்கு நிச்சயம் வலிமை வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்காக யோகா மாஸ்டர் செய்த காரியம்... வாயை பிளந்து பார்த்த கோவை மக்கள்... வீடியோ

இந்த ஸ்டண்ட்டை செய்வதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்பியதாக யோகா மாஸ்டர் சத்ரபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''கோவை மக்களிடம் யோகாவிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே யோகா செய்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த நான் விரும்பினேன்.

குழந்தைகளும், முதியவர்களும் யோகா செய்ய தொடங்க வேண்டும்'' என்றார். ஆனால் கார் அல்ல மற்ற வாகனங்களை இழுப்பது புதிய ஸ்டண்ட் அல்ல. இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு கார், லாரி போன்ற வாகனங்களை கடந்த காலங்களில் பலர் இழுத்துள்ளனர். சாதனை முயற்சிகளுக்காகவும் பலர் இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்துள்ளதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

Image Courtesy: ANI News

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yoga Master, Walking Upside Down, Pulls Maruti Suzuki Alto Hatchback - Viral Video. Read in Tamil
Story first published: Thursday, March 25, 2021, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X