Subscribe to DriveSpark

மெர்சிடிஸ் பென்ஸ் எம்-கார்டு காரில் ஏறிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

Written By:

இந்தியாவில் நாம் சாமியார் ஆகவேண்டுமானால் ஆன்மிகத்தில் இருக்கும் ஈடுபாட்டை விட பொன், பொருள், 4 ஏக்கர் இடம், மிரட்டும் வாகனம், ஐந்திற்கும் மேற்பட்ட செல்லுலார் ஃபோன்கள் அதுவும் இன்றைய காலட்டத்தில் ஐ-பேட் என ஒரு சாமியார் ஆவதற்கான பட்டியல் ரொம்பப் பெருசு.

துறவற வாழ்க்கை என்று சொல்லி ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் யாரும் இன்று சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. நாகரீகம் வளர வளர ஆன்மீகமும் இன்று காஸ்ட்லியான துறையாக மாறிக்கொண்டே உள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

ஆன்மீகக் கூடத்தில் சாமியார்களை பார்த்ததை விட, ஊடகங்களின் பரபரப்பான செய்தி அறிக்கைகளில் தான் இன்றைய தலைமுறை பெரும்பாலான ஆன்மீகவாதிகளை தெரிந்துகொள்கிறது. ஆன்மீகம், சாமியார், மடம் தொடர்பான அனைத்து செய்திகளும் அன்றும், இன்றும், என்றும் பிரேக்கிங் நியூஸ் தான்.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

ஆன்மீகக் கூடத்தை தாண்டி எளிமையான ஆன்மீகவாதியாக தன்னை காட்டி வந்த ஒருவர் இன்று இந்திய அரசியல் களத்தில் முக்கிய புள்ளியாகியுள்ளார்.

அவர் தேர்ந்தெடுத்தது துறவற வாழ்க்கை தான் என்றாலும், அவரும் இன்றைய காலகட்டத்தில் ஒரு காஸ்ட்லியான வாழ்கை முறையைத்தான் பின்பற்றி வருகிறார்.

அவர் தான் தற்போது உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதல்வாரகியுள்ள யோகி ஆதித்யநாத்.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பா.ஜ.கவை சேர்ந்த யோகி ஆதித்யநாத். சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல வாகனங்களை அமைத்துக்கொள்வது நமது இந்தியாவின் கலாச்சாரம்.

இந்த வழிமுறையை பின்பற்றி இந்தியாவின் தனித்துவமான முதல்வராகவுள்ள யோகி ஆதித்யநாத் தனது பதவியை பொருத்து பெற்றிருக்கூடிய வாகனம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் எம்-கார்டு எஸ்.யூ.வி. கார்.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உ.பியை கைப்பற்றிய பா.ஜ.க, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அறிவித்தது. இது அக்கட்சியை சார்ந்தவர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சி தான், அப்போது பொதுமக்களுக்கு? கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி.

2005ம் ஆண்டில் கிறிஸ்துவர்களை இந்துவாக மாற்றுவேன் என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டதன் மூலம் யோகி ஆதித்யநாத் 'சர்ச்சை சாமியார்' என்ற பெயரோடு இந்தியாவெங்கும் பிரபலமானார். இதனாலேயே இவர் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருந்து வந்தது.

முதல்வராக இருந்தால் எம்.கார்டு காரை பெற்றுவிடலாமா?

முதல்வராக இருந்தால் எம்.கார்டு காரை பெற்றுவிடலாமா?

தீவிர வலது சாரி இந்து கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ள இவர், இந்து அல்லாதவர்கள் விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை பதவிக்கு முன்பும், பிறகும் தொடர்ந்து கூறி வருகிறார். அதனால் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

உ.பி. முதல்வரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தற்போது அவருக்கு மெர்சிடிஸ் நிறுவனத்தின் எம்-கார்டு எஸ்.யூ.வி கார் வழங்கப்பட்டுள்ளது. காரணம் பெரும் செல்வம் படைத்தவர்கள், மதிப்புமிகுந்த பதவியில் இருப்பவர்கள் போன்றோர் பெரும்பாலும் பயன்படுத்தும் கார் மெர்சடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி தான்.

மெர்சிடிஸ் எம்-கார்டு காரில் அப்படி என்ன சிறப்பு?

மெர்சிடிஸ் எம்-கார்டு காரில் அப்படி என்ன சிறப்பு?

கடந்த 2014ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற கார் கண்காட்சியின் போது எம்-கார்டு எஸ்.யூ.வி மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. குண்டுதுளைக்க முடியாத கட்டமைப்பை கொண்டதுள்ளதால், இது வி.வி.ஐ.பி-களுக்கான கார் என்று கூறியே மெர்சிடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி காரை விளம்பரப்படுத்தியது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

எம் சீரிஸ் கார்களை விட எம்-கார்டு எஸ்.யூ.வி கார் 385 கிலோ கூடுதல் எடையை கொண்டது. காரணம் உயிர் பயம் கொண்ட பெரும் தலைகள் பலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழில்நுட்பத்திலும், திறனிலும் பல்வேறு கட்டமைப்புகள் எம்-கார்டு காரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

துப்பாக்கி குண்டுகள் உட்பட காரின் மீது எந்த தாக்குதல் நடத்தினாலும் காரின் கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மெர்சிடிஸ் எம்-கார்டு காரின் வி.ஆர்.4 ரெசிஸ்டன்ஸ் (எதிர்த்து தாக்கும்) அமைப்பு கொண்டுள்ளது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

காரின் கட்டமைப்பு மட்டுமின்றி, கண்ணாடிகள் அனைத்தும் அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, அதுவும் காரின் எடை அதிகரிக்க மேலும் ஒரு காரணம்.

பாதுகாப்பு கூண்டிற்குள் யோகி ஆதித்யநாத்

பாதுகாப்பு கூண்டிற்குள் யோகி ஆதித்யநாத்

ஒருவேளை காரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கார் கண்ணாடிகளில் பிளவு ஏற்படாமல் இருக்க போலிகார்பேனேட் தனிமத்தில் அவை தயாரிக்கப்பட்டுள்ளன. போலிகார்பேனேட் என்பது வேதியல் துறையில் வலிமை வாய்ந்த தனிமமாக உள்ளது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

கட்டமைப்பு மற்றும் கண்ணாடிகள் மட்டுமின்றி எம்-கார்டு கார்களின் டயர்களிலும் குறிப்பிடும்படியான தொழில்நுட்பங்கள் உள்ளன. தட்டையான வடிவத்தில் டயரின் டூயுப்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும், அதனால் காரின் அனைத்து எடையும் தாங்கும் திறன் சக்கரங்களுக்கு கிடைக்கும்.

யோகி ஆதித்யநாத் பயன்படுத்தும் எம்-கார்டு காரின் திறன்

யோகி ஆதித்யநாத் பயன்படுத்தும் எம்-கார்டு காரின் திறன்

4.7 லிட்டரில் இயங்கும் வி-8 பெட்ரோல் எஞ்சின் எம்-கார்டு காரில் உள்ளது, இது 402 பி.எச்.பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை தர வல்லது. காரின் அதிகப்பட்சமான 210 கிலோ மீட்டரை வெறும் 6.5 நொடிகளில் அடையும் ஆற்றல் கொண்டது.

யோகி ஆதித்யநாத்திற்கு எம்-கார்ட் கார் எப்படி கிடைத்தது?

யோகி ஆதித்யநாத்திற்கு எம்-கார்ட் கார் எப்படி கிடைத்தது?

மெர்சிடிஸ் நிறுவனம் எம்-கார்ட் காருக்கான தயாரிப்பை ஆர்டராக பெற்றால், அது உரியவருக்கு டெலிவிரி செய்ய குறைந்த ஒரு வருடமாகும். ஆனால் உ.பி முதல்வரான குறைந்த காலத்திலேயே யோகி ஆதித்யநாத் எப்படி இவ்வாறு ஒரு காரை வாங்கினார் என்பதில் தான் பரபரப்பே அடங்கி இருக்கிறது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

தற்போது யோகி ஆதித்யநாத் பயன்படுத்தி வரும் மெர்சடிஸ் எம்-கார்டு கார் உ.பி. மாநிலத்திற்கு சொந்தமானது. அதாவது இந்த காரை உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்காக வாங்கப்பட்டது. அரசுமுறை பயணத்திற்காக மட்டும் அவர் அதை பயன்படுத்தினார்.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

தற்போது முதல்வருக்கான அரியணையை யோகி ஆதித்யநாத் சொந்தமாக்கி கொண்டதால், விதிப்படி முதல்வருக்கான காரும் தற்போது அவரிடம் வந்துள்ளது.

முதல்வராவதற்கு முன் யோகி பயன்படுத்திய கார்கள்

முதல்வராவதற்கு முன் யோகி பயன்படுத்திய கார்கள்

தற்போது அதிக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட பென்ஸ் காரின் வலம் வந்தாலும், இதற்கு முன்னாள் அவருடைய பெருமைக்குரிய வாகனமாக டொயாட்டா இன்னோவா இருந்தது. தற்போது முதல்வராகி இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.

3 கோடி ரூபாய் காரில் வலம் வரும் யோகி ஆதித்யநாத்

எளிமையான வாழ்க்கை முறையை கொண்ட ஆன்மீகம் இன்று எட்டமுடியாத உயரத்தில் இருக்கக்கூடிய பொன்முடிப்பாக இருக்கிறது. அதை அடைய நாம் முயற்சி முயற்சி செய்ய அது மாற்று வடிவம் எடுத்து மீண்டும் உயரத்திற்கு போய்க்கொண்டே இருக்கிறது.

ஆன்மீகத்தை பாதுக்காக்க யோகி ஆதித்யநாத்தும், அவரை பாதுகாக்க மெர்சிடிஸ் எம்-கார்டு காரும் அவரவர் பணிகளை சிறப்பாக செய்வார்கள் என நாமும் நம்புவோமாக.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP chief minister Yogi Adityanath drives 3 crore Mercedes M Guard. Get more details about his powerful procession and more
Story first published: Thursday, April 6, 2017, 18:10 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark