வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பிரபல மனிதர் ஒருவர் தனது மனைவிக்காக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பூனவல்லா இன்ஜினியரிங் க்ரூப் (Poonawalla Engineering Group) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் யோஹான் பூனவல்லா (Yohan Poonawalla). இவர் கார் ஆர்வலரும் கூட. மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் விலை உயர்ந்த கார்களை யோஹான் பூனவல்லா சொந்தமாக வைத்துள்ளார்.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இந்த வரிசையில் பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) கார் ஒன்றை இவர் தற்போது தனது கார் கலெக்ஸனில் சேர்த்துள்ளார். ஆனால் இது புத்தம் புதிய கார் கிடையாது. இந்த கார் முன்பு வேறு ஒருவருக்கு சொந்தமாக இருந்தது ஆகும். சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) நிறுவனத்தில் யோஹான் பூனவல்லா வாங்கியுள்ளார்.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

யோஹான் பூனவல்லா தனது மனைவி மிச்செல் பூனவல்லாவிற்காக (Michelle Poonawalla) இந்த காரை வாங்கியிருப்பதை போல் தெரிகிறது. யோஹான் பூனவல்லாவிடம் ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு ஏராளமான விலை உயர்ந்த கார்களை யோஹான் பூனவல்லா சொந்தமாக வைத்துள்ளார்.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இதில், லம்போர்கினி கல்லார்டோ எஸ்இ (Lamborghini Gallardo SE), ஆடி ஆர்எஸ்7 (Audi RS7), ஃபெராரி 458 ஸ்பெஷலே அபார்டா (Ferrari 458 Speciale Aperta), ரோல்ஸ் ராய்ஸ் ட்ராப்ஹெட் கூபே (Rolls Royce Drophead Coupe), பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி (Mercedes-Benz SLS AMG) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

யோஹான் பூனவல்லா தற்போது வாங்கியுள்ள பென்ட்லீ பென்டை கார் அருமையான மற்றும் பிரகாசமான ஆரஞ்ச் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2019ம் ஆண்டு மாடல் கார் ஆகும். ஆனால் 2020ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கார் வெறும் 2,800 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பென்ட்லீ பென்டைகா காரில், 4.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜ்டு, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 550 பிஎஸ் பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இன்ஜின் சக்தியானது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக இந்த காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பென்ட்லீ பென்டைகா சொகுசு எஸ்யூவி காரின் எடை சுமார் 2.3 டன்கள் ஆகும். இவ்வளவு அதிகமான எடை கொண்டது என்றாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த அதிகபட்சமாக மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் (டாப் ஸ்பீடு) செல்ல கூடியது.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இதுதவிர பென்ட்லீ பென்டைகா காரில் இன்னும் அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷனும் இருக்கிறது. இந்த வெர்ஷனில் 6.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, டபிள்யூ12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 625 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த வெர்ஷனிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்தான் பொருத்தப்பட்டுள்ளது.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

அத்துடன் இந்த வெர்ஷனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் பென்ட்லீ நிறுவனம் இந்திய சந்தையில் வி8 வெர்ஷனை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. பென்ட்லீ பென்டைகா காரின் வி8 வெர்ஷனின் விலை 4.10 கோடி ரூபாய் ஆகும். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

ஆனால் யோஹான் பூனவல்லா வாங்கியுள்ள பென்ட்லீ பென்டைகா ஏற்கனவே ஒருவருக்கு சொந்தமானது என்பதால், பிக் பாய் டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்து என்ன விலைக்கு வாங்கினார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் மிகவும் குறைவான கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளதால், கிட்டத்தட்ட இதே விலைக்கு வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வேறு ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை மனைவிக்காக வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பென்ட்லீ பென்டைகா மிகவும் பிரபலமான காராக திகழ்ந்து வருகிறது. இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது சாதாரண கார் என்றாலும் சரி அல்லது சொகுசு கார் என்றாலும் சரி, செடான் ரக கார்களை விட எஸ்யூவி ரக கார்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

Article Published On: Tuesday, January 25, 2022, 13:18 [IST]
English summary
Yohan poonawalla buys bentley bentayga luxury suv details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+