இந்த சிவப்பு நிற காரோட விலை 7 கோடி ரூபாவா! இதை வாங்கிய நபர் யாருனு தெரியுமா? அம்பானியிடமே இல்லாத கார்!
இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துக் கொண்டிருக்கும் நபர்களில் யோஹன் பூனவல்லாவும் ஒருவர் ஆவார். இவர் ஒரு தீவிர கார் சேகரிப்பாளர் ஆவார். இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதற்காகவே அவருக்கு சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் "2023 ஆம் ஆண்டின் சிறந்த கார் சேகரிப்பாளர்" என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இத்தகைய நபரே தற்போது ரூ. 7 கோடி செலவு செய்து ஒரே ஒரு கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் சிறப்புகள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிகப் பெரிய கார் காதலராக முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களிடத்தில் இல்லாத கார்களே இருக்க முடியாது என அடித்து கூறலாம். அந்த அளவிற்கு மிக மிக அதிக எண்ணிக்கையில் அவர் சொகுசு கார்களை வைத்திருக்கின்றார். தனது மும்பை அன்டிலியா இல்லத்தில் கார்களை நிறுத்துவதற்கு என்றே தனி தளங்களை அவர் அமைத்திருக்கின்றார்.
மேலும், அந்த தளங்களில் நூற்றுக் கணக்கான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இத்தகைய மிகப் பெரிய கார் விரும்பியே முகேஷ் அம்பானி ஆவார். இவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தியாவில் ஒரு சிலர் சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களில் ஒருவரே யோஹன் பூனவல்லா ஆவார். இவரே தற்போது இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் என கூறும் அளவிற்கு மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார். ரூ. 7 கோடி மதிப்புள்ள பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12 சூப்பர் லிமோ (Bentley Flying Spur W12 Speed Super-limo ) காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.
இது வழக்கமான வெர்ஷன் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் அல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இதைவிட அதிக பவர்ஃபுல்லான வேரியண்டே இதுவாகும். இதனால்தான் இதன் விலை மிகவும் அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. யோஹன் பூனவல்லாவிடம் ஏற்கனவே விலை உயர்ந்த கார் மாடல்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஃபெர்ராரி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களே அவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த நிலையிலேயே அவரது கராஜில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12 சூப்பர் லிமோ சிறப்பு பதிப்பு புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் நான்கு கதவுகள் கொண்ட மிகவும் நீளமான அமைப்புடைய சொகுசு செடான் ரக கார் மாடல் ஆகும்.
மேலும், அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இது அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் கார் மாடல் மட்டுமில்லைங்க, மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு கவர்ச்சியளிக்கும் விதமாக 22 அங்குல பெரிய அலாய் வீல், பெரிய கிரில், பெரிய துளைகள் கொண்ட ஏர் இன்டேக் துவாரம் (குரோம் அணிகலனால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்), எல்இடி லைட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, இதன் மேற்கூரை சற்றே சாய்வாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அக்காருக்கு இன்னும் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. அதிக சொகுசான இருக்கைகள், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என பலதரப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த காருக்கு மிக சிறந்த இழுவை திறனை வழங்குவதற்காக 6.0 லிட்டர் டபிள்யூ 12 டர்போசார்ட் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 635 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும். இசட்எஃப் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாசத்திற்கு ஒரு கார் என சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர் முகேஷ் அம்பானி ஆவார். இவருக்கே ஒரு சிலர் இந்தியாவில் கார்களை வாங்குவதில் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால், அவர்களில் ஒருவரே பூனவல்லா ஆவார். இவரும் தொடர்ச்சியா ஆடம்பர கார்களை வாங்கி குவித்த வண்ணம் இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









