ராணி எலிசபெத்தின் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.. அம்பானி, அதானி இல்ல.. அவ்ளோ பெரிய பணக்கராரு யாருங்க!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக அம்பானி மற்றும் அதானி ஆகியோர் அறியப்படுகின்றனர். இவர்கள் பெரும் பணக்காரர்கள் என்கிற அதேசமயத்தில் மிகப் பெரிய கார் காதலர்களாகவும் காட்சியளிக்கின்றனர். மிக முக்கியமாக முகேஷ் அம்பானி இடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அவரிடத்தில் இருக்கும் கார்களை நிறுத்துவதற்கு என்றே அவர் அவருடைய அன்டிலியா இல்லத்தில் தனி தளங்களையே ஒதுக்கி இருக்கின்றார்.

அந்த அளவிற்கு மாபெரும் கார் காதலராக அம்பானி இருக்கின்றார். இவர்களை போலவே இந்தியாவில் இன்னும் பல செல்வந்தர்கள் வாகனங்களின் மீது கொண்ட காதலுக்காக அறியப்படுகின்றனர். அவர்களில் ஒருவரே யோஹன் பூனவல்லா ஆவார். இவரிடத்தில் சொகுசு வாகனங்கள் மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளன.

Yohan poonawalla

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இவரிடத்தில் உள்ள வாகனங்களையும், அவற்றின் சிறப்புகளையும் விவரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பக்கம் போதாதது. அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலேயே சொகுசு மற்றும் சிறப்புகளைத் தாங்கிய கார்களை செல்வந்தர் யோஹன் பூனவல்லா பயன்படுத்தி வருகின்றார்.

இத்தகைய மிகப் பெரிய கார் காதலர் இவர் என்கிற காரணத்தினாலேயே இவருக்கு சென்ற ஆண்டில், ஆண்டின் மிக சிறந்த கார் சேகரிப்பாளர் என்கிற விருது ஜெனிவா மோட்டார் ஷோ-வில் வழங்கப்பட்டது. ஒரு இந்தியருக்கு இத்தகைய விருது வழங்கப்பட்டது இந்தியாவிற்கே பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்தது.

இவர் ஏதே ஓர் சாதாரண சொகுசு கார் சேகரிப்பாளர் அல்ல. விண்டேஜ் மற்றும் கடந்த காலங்களில் ராஜாக்கள் போன்றோர் பன்படுத்தி வந்த அரிய வகை கார்களையே இவர் தன்னுடைய சேகரிப்பில் வைத்திருக்கின்றார். மேலும், சில வரலாற்று சிறப்புமிக்க கார்களும் இவரிடத்தில் இருக்கின்றன. அந்த அளவிற்கே மிகவும் தனித்துவமான கார் கலெக்சனை யோஹன் பூனவல்லா வைத்திருக்கின்றார்.

இந்த நிலையிலேயே தன்னுடைய மிகுந்த கார் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக கடந்த காலத்தில் ராணி எலிசபெத் பயன்படுத்தி வந்த லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரை அவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இணையத்தின் வாயிலாகவே இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஓர் 2016 ரேஞ்ஜ் ரோவர் எஸ்டிவி8 ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி (Range Rover SDV8 Autobiography LWB) மாடல் ஆகும். ராணியின் இறப்பிற்கு முன்னர் இந்த கார் அவருடைய பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ராணியின் பயன்பாட்டிற்காக இந்த காரில் தனிப்பட்ட பயனாக்கம் அதிகளவில் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், ராணி பயணிப்பதற்கு ஏற்ப காரில் படிக்கட்டுகள், காவலர்கள் பயன்படுத்தும் லைட்டுகள் கூடுதல் கை பிடிகள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் எதையும் மாற்றாமலேயே அவர் இந்த காரை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் ராணியின் இந்த கார் ஏலத்தின் வாயிலாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதில், கலந்துக் கொண்ட நிலையிலேயே யோஹன் பூனவல்லா ஏலத்தை வென்றெடுத்ததாகக் கூறப்படுகின்றது. 18 மைல்கள் தூரம் வரை பயணித்திருக்கும் இந்த கார் ரூ. 2.25 கோடி எனும் ஆரம்ப விலையிலேயே ஏலத்திற்கு வந்தது.

இதில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கேற்ற காரை ஏலம் கேட்டிருக்கின்றார். ஆனால், பெரும் தொகையை கொடுத்து யோஹன் பூனவல்லா ஏலத்தை முடித்துவிட்டிருக்கின்றார். ஆனால், என்ன விலைக்கு அவர் வாங்கினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. யோஹன் பூனவல்லா ஓர் மிக சிறந்த கார் ஆர்வலர் ஆவார்.

இவரிடத்தில் மிக மிக பழமையான அரிய வகை கார்கள் பல உள்ளன. இதனால்தான் இவரை மிக சிறந்த கார் காதலர் என வாகன உலகம் கூறுகின்றது. அவற்றுடனேயே விரைவில் ராணி எலிசபெத் பயன்படுத்திய ரேஞ்ஜ் ரோவர் கார் மாடல் இணைய இருக்கின்றது. ஆனால், இந்த காரின் படங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக சிறந்த கார் காதலராக யோஹன் பூனவல்லா இருக்கின்றார். மைசூர் ராஜா மற்றும் கட்ச் அரச குடும்பம் பயன்படுத்தி வந்த அரிய வகை கார்களைகூட அவர் தன்னுடையதாக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ராணி எலிசபெத் பயன்படுத்திய காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 20:42 [IST]
English summary
Yohan poonawalla buys queen elizabeth used range rover here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+