எப்படியும் 100கோடி ரூபா இருக்கும்.. TN நம்பர் பிளேட்லகூட கார்கள் இருக்கு.. ஒருத்தருக்கு சொந்தமா இத்தன கார்களா!

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் யோஹன் பூனவல்லா. இவரும், முகேஷ் அம்பானியைப் போல மிகப் பெரிய கார் காதலர் ஆவார். முகேஷ் அம்பானி நூற்றுக் கணக்கான சொகுசு கார்களை பயன்பாட்டில் வைத்திருக்கின்றார். இவரை போலவே மிக மிக அதிக எண்ணிக்கையில் ஆடம்பர கார்களை வைத்திருக்கும் நபரே யோஹன் பூனவல்லா ஆவார்.

இவரிடத்தில் என்ன மாதிரியான சொகுசு கார்கள் உள்ளன? மற்றும் வாகனங்கள் அல்லாத பிற ஊர்திகள் என்ன இருக்கின்றன? என்பது பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Yohan poonawalla convoy of exotic cars

யோஹன் பூனவல்லா, பெரும் படையை போலவே சொகுசு கார்களை வைத்திருக்கின்றார். ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இவர் வைத்திருக்கும் ஒட்டுமொத்த சொகுசு கார்களின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நூறு கோடி ரூபாய் என்பது தோராயமாக அளிக்கப்பட்ட மதிப்பே ஆகும். இதைவிட அதிக ரூபாயை அவர் வைத்திருக்கும் சொகுசு கார்கள் கொண்டிருந்தாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அந்த அளவிற்கு மிக பிரமாண்ட எண்ணிக்கையில் அவர் வாகனங்களை வைத்திருக்கின்றார். சொகுசு வாகனங்கள் மட்டுமல்ல ஹெலிகாப்டர் ஒன்றையும் அவர் வைத்திருக்கின்றார்.

Yohan poonawalla convoy

இவை அனைத்தையும் காட்சிப்படுத்தும் புதிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வாயிலாக பூனவல்லாவிடம் சில அரிய மற்றும் பழங்கால வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது தெரிய வந்து உள்ளது. பொக்கிஷமாக கருதப்படும் வாகனங்கள் சிலவும் இவரிடத்தில் இருக்கின்றன.

மேலும், இதுபோன்ற ஏகப்பட்ட கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. அவை அனைத்தையும் லிஸ்ட் போட வேண்டும் எனில் இந்த ஒரு பக்கம் போதாது. இருப்பினும், இந்த வீடியோவில் கான்வாயாக வந்த சில முக்கிய கார்களின் பெயர்கள் இதோ.. மெர்சிடிஸ் பென்ஸ் 190 எஸ்எல் ரோட்ஸ்டர் இந்த காரே கான்வாயில் இடம் பிடித்த முதல் ஆடம்பர வாகனம் ஆகும்.

Yohan poonawalla exotic cars

இது ஓர் கன்வர்டபிள் வகை கார் மாடல் ஆகும். இதைத் தொடர்ந்து, ஃபெர்ராரி 488 பிஸ்தா ஸ்பைடர், லிங்கன் கான்டினென்டர் 4 டோர் கன்வர்டபிள், லம்போர்கினி கல்லர்டோ, பழங்கால ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்2, ஃபெர்ராரி 458 அபர்டா என ஏகப்பட்ட கார்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, இன்னும் பல ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லீ உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களும் இவரிடத்தில் உள்ளன. மேலும், இவர் மட்டுமின்றி இவருடைய குடும்பத்தில் உள்ளவர்களும் ரோல்ஸ் ராய்ஸ் காரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் இவரை மிக சிறந்த கார் காதலர் என வாகன உலகம் அழைக்கின்றது.

மேலும், மிகவும் நேர்த்தியான கார்களையே தன்னுடைய கார் சேகரிப்பில் யோஹன் பூனவல்லா வைத்திருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே இவருக்கு ஆண்டின் மிக சிறந்த கார் சேகரிப்பாளர் என்கிற விருது ஜெனிவா மோட்டார் ஷோவில் வழங்கப்பட்டது. ஒரு இந்தியருக்கு இத்தகைய விருது வழங்கப்பட்டது இந்தியாவிற்கே பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் தான் பல ஆண்டுகளாக பராமரித்து வரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ மற்றும் லிங்கன் கார்களை அவர் அங்கு காட்சிப்படுத்தினார். இந்த கார்களை வைத்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் அதிக பராமரிப்பைக் கொண்ட கார் மாடல்களே இவையாகும். இந்த நிலையிலேயே யோஹன் பூனவல்லா சேகரித்து வரும் அனைத்து கார்களும் ஓர் வீடியோ வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யோஹன் பூனவல்லாவை போலவே இன்னும் பலர் ஆடம்பர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அரிய வாகனங்கள் சிலவற்றையும் அவர்கள் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் நம்ம தல தோனி போன்ற முக்கிய பிரபலங்களும் அடங்குவர். இவரிடத்தில் நிஸான் ஜூங்கா போன்ற அரிய வகை கார்களும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, January 1, 2024, 15:27 [IST]
English summary
Yohan poonawalla car collection video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X