12 கோடி ரூபா காரை வாங்கிய குழந்தை முகம் கொண்ட பணக்காரர்.. அம்பானி, அதானினு நினைச்சுடாதீங்க! இவரு வேற ஒருத்தர்!

காரை சேகரிப்பதில் விருது பெற்ற ஓர் நபராக இருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான யோஹன் பூனவல்லா. பால்வடியும் முகத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவரின் செயலும் குழந்தைகள் போலவே இருக்கின்றது. குழந்தைகள் விளையாட்டு கார்களைப் போல வாங்கி குவிப்பதைப் போலவே நிஜ உலகின் பிரமாண்ட கார்களை வாங்கி குவித்து வருகின்றார். குறிப்பாக, இவரிடத்தில் அரிய வகை ஆடம்பர கார் மாடலே மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதற்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது விண்டேஜ் கால கார்களே அதிக எண்ணிக்கையில் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த மாதிரியான கார்களை சேகரிப்பதிலேயே இவர் பெயர்போனவராகக் காட்சியளிக்கின்றார். அந்தவகையில், இங்கிலாந்து ராணி பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றும்கூட யோஹன் பூனவல்லாவுக்கு சொந்தமாக இருக்கின்றது. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலையே அவர் தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கின்றார். ஆனால், இந்த காரை அவர் லண்டனிலேயே வைத்திருக்கின்றார்.

Yohan poonawalla adds new rolls royce phantom

இந்தியாவிற்கு அந்த கார் கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகின்றது. இதுமாதிரியான ஓர் தனித்துவமான கார் காதலரே இந்திய பணக்காரர் யோஹன் பூனவல்லா. இவரே தற்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB) கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 12 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய வாயை பிளக்க வைக்கும் விலைக் கொண்ட காரையே இந்திய பணக்காரர் தற்போது புதிதாக வாங்கி இருக்கின்றார்.

Rolls royce solid gold spirit of ecstasy

இது அவர் வாங்கும் 6 ஆவது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப மிகப் பெரிய கஸ்டமைசேஷனுக்கு யோஹன் பூனவல்லா உட்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காரின் தனித்துவமான நிறம் உள்ளது.

போஹிமேன் சிவப்பு நிறமே அந்த காருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், தனித்துவமான தங்க பூச்சுக் கொண்ட ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி மற்றும் 22 அங்குல பிரஷ்டு சில்வர் நிற பிளேட்டால் அலங்கரிக்கப்பட்ட அலாய் வீல் போன்றவையும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல இலுமினேட் ஆகும் திறன் கொண்ட கிரில், ஸ்டார்லைட் ஹெட்லைட், காரின் பின் பக்கத்தில் 'பி' (P) எனும் ஆங்கில எழுத்துக்கள் உள்ளிட்டவற்றையும் யோஹன் பூனவல்லா சேர்த்திருக்கின்றார். பூனவல்லாவை குறிக்கும் விதமாகவே இந்த எழுத்தை காரின் பின் பக்க பில்லர்களில் சேர்த்திருக்கின்றனர்.

எனவே மற்ற வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி கார் மாடல்களைக் காட்டிலும் இது பலமடங்கு தனித்துவமானதாகக் யோஹன் வாங்கியிருப்பதுக் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து மிகவும் காஸ்ட்லியானதாகவும் அது மாறி இருக்கின்றது. அதாவது, இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக சிறப்பு கஸ்டமைசேஷனால் யோஹன் பூனவல்லாவின் கார் மாறியிருக்கின்றது.

ஆனால், துள்ளியமான விலை விபரம் தெரிவிக்கப்படவில்லை. காருக்கு வெளியிலேயே இந்த அளவிற்கு மாற்றங்கள் செய்திருக்கும் யோஹன் பூனவல்லா, அதன் உள் பகுதியில் எவ்வளவு மாற்றங்களைச் செய்திருப்பார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இதை வைத்து பார்த்தால் காரின் விலைக்கு நிகரான விலையிலேயே அவர் கூடுதல் கஸ்டமைசேஷன்களைச் செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எஞ்சினைப் பொருத்தவரை இந்த காரில் 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 517 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 10 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜையே வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இருப்பினும் பெரும் செல்வந்தர்கள் இந்த காரை எதையும் பொருட்படுத்தாமல் சொகுசான பயணத்திற்காக வாங்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே யோஹன் பூனவல்லா இந்த காரை வாங்கி இருக்கின்றார். அதேவேளையில் அவரிடத்தில் இதுபோன்று இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனாலேயே அவர் மிகப் பெரிய கார் சேகரிப்பாளராக காட்சியளிக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 12, 2025, 10:33 [IST]
English summary
Yohan poonawalla expands his luxury car collection with new rolls royce phantom viii ewb
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+