அவங்க உசுரோட இருந்திருந்தா காரு பக்கத்துலகூட போயிருக்க முடியாது.. ஆனா இப்போ இந்தியர் யூஸ் பண்ணிட்டு இருக்காரு!

கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட இந்திய பணக்காரர்களில் யோஹன் பூனவல்லா-வும் ஒருவர் ஆவார். தனித்துவமான கார்கள் பலவற்றை தனக்கு சொந்தமாக இவர் வைத்திருக்கின்றார். வழக்கமான பணக்காரர்களைப் போல வெறும் ஆடம்பர கார்களை மட்டுமல்லாமல், சில அரிய வாகனங்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இதன் காரணத்தினாலேயே இவருக்கு விருதுகள் சில வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய ஓர் தனித்துவமான கார் காதலரே யோஹன் பூனவல்லா ஆவார். இவரே அரிய தன்னுடைய அரிய வகை கார் கலெக்சனில் ராணி எலிசபத் பயன்படுத்திய ஆடம்பர கார் ஒன்றை தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கின்றார்.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி (Range Rover SDV8 Autobiography LWB) எடிசன் காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இங்கிலாந்து ராணி எலிசபத்-இன் பயன்பாட்டில் இருந்த முக்கியமான ஆடம்பர கார்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் அந்த காரை இந்திய செல்வந்தர் வாங்கி இருக்கின்றார்.

Yohan poonawalla buys queen elizabeth range rover

இந்த காரில் அவர் லண்டன் நகர சாலைகளில் வலம் வரும் காட்சிகளே தற்போது வெளியாகி இருக்கின்றன. மேலும், இந்த காரை அவர் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வாங்கிவிட்டார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இப்போதே முதல் முறையாக அவர் அந்த காருடன் காட்சியளித்திருக்கின்றார்.

மிக முக்கியமாக அந்த கார் இங்கிலாந்து ராணி பயன்படுத்தியபோது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கின்றது. முன்னால் பொருத்தப்பட்டு இருந்த அந்நாட்டு தேசிய கொடிகள்கூட அகற்றப்படாமல் அப்படி இருக்கின்றது. இதுமட்டுமல்ல இன்னும் பல அணிகலன்கள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றது. நம்பர் பிளேட்கூட மாற்றப்படாமல் அப்படி இருப்பது கூடுதல் சுவாரஷ்யமான தகவல் ஆகும்.

மேலும், புதிய மனம் மாறாமலும் அந்த கார் அப்படியே இருப்பதும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. சொல்லப்போனால் இது 2016 மாடல் ஆகும். லேண்ட் ரோவர் எஸ்டிவி8 ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி எடிசனே இதுவாகும். இந்த காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் டீசல் எஞ்சின் ஆகும்.

அதிகபட்சமாக 335 பிஎச்பி மற்றும் 740 என்எம் டார்க் ஆற்றலை இது வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 28,969 கிமீ தூரம் மட்டுமே இந்த கார் பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் வாயிலாக மிகவும் குறைவான அளவிலேயே இந்த கார் பயணம் மேற்கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், இதனை யோஹன் பூனவல்லா 2,24,8850 பவுண்டுகளுக்கு வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 2 கோடி ஆகும். அரிய மற்றும் தனித்துவமான காராக இது இருப்பதானலேயே இந்த அளவு தொகையை செலவிட்டு யோஹன் பூனவல்லா இந்த காரை வாங்கி இருக்கின்றார்.

இதுபோன்ற செயலுக்காகவே அவருக்கு 2023 சிறந்த கார் சேகரிப்பாளர் எனும் விருது ஜெனிவா சர்வதேச மோட்டார் ஷோவில் வழங்கப்பட்டது. மிகப் பெரிய விண்டேஜ் கார் உலகத்தையே தனக்கு சொந்தமானதாக இவர் வைத்திருக்கின்றார். அந்தவகையில், 1933 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் II (Rolls-Royce Phantom II Sir Malcolm Campbell Sports Saloon by Barker & Co) மாடலும் கூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது.

இதுமட்டுமல்ல, 1964 லிங்கன் கான்டினென்டல் 4-டோர் கன்வெர்டபிள் (Lincoln Continental 4-Door Convertible) போன்ற கார் மாடல்கள் எல்லாம் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர இன்னும் பல்வேறு அரிய மற்றும் உலக தலைவர்கள் பயன்படுத்திய கார்களை இவர் வைத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸபார்க் கருத்து: யோஹன் பூனவல்ல தனித்துவமான கார் காதலராகக் காட்சியளிக்கின்றார். இதற்கு சான்றாகவே அவரிடத்தில் இருக்கும் கார்களும் இருக்கின்றன. இந்த நிலையிலேயே இங்கிலாந்து ராணி பயன்படுத்தி வந்த ரேஞ்ச் ரோவர் காரையும் அவர் அவருடைய கார் சேகரிப்பில் சேர்த்திருக்கின்றார். ஆனால், இந்த கார் இந்தியா கொண்டு வரப்படுமா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2024, 17:09 [IST]
English summary
Yohan poonawalla roaming in queen elizabeth s range rover in london
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+