சர்வீஸ் பண்ண காரை துபாயக்கு தூக்கி சென்ற பணக்காரர்! காரணம் இது தான்!

இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை துபாய்க்கு சர்வீஸ்க்காக கொண்டு சன்ற சம்பவம் தற்போது வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஸ்ட்லி கார்களை வாங்குவதில் இருக்கும் பெரிய சிக்கல் அதை சர்வீஸ் செய்வது தான். சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யாமல் விட்டால் அந்த காரின் வாரண்டி கிடைக்காமல் போகும், சர்வீஸ்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியதுவரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர் யோகன் பூனாவாலா, இவர் பூனாவாவா என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏகப்பட்ட பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் இவர் பல காஸ்ட்லியான காருக்கு சொந்தகாரராகவும் இருக்கிறார். இவரும் ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லி போன்ற காஸ்ட்லி பிராண்ட் கார்கள் எல்லாம் உள்ளன. இது குறித்து நாம் பல முறை செய்தி வெளியிட்டுள்ளோம்.

Yohan Poonawala

இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் 7 கார் ஒன்று துபாயில் இந்தி நம்பர் பிளேட் உடன் சுற்றி திரியும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து விசாரித்த போது சில முக்கியமான கதவல்கள் கிடைத்தன. இந்த வீடியோ துபாயில் உள்ள மான்சரி ஃபேக்டரியில் எடுக்கப்பட்டது. இந்தியவாில் பாந்தோம் 7 காரில் மான்சரி கிட் பொருத்தப்பட்ட முதல் கார் இது தான்.

மான்சரி என்பது கார் மாடிஃபிகேஷனில் பிரபலமான ஜெர்மன் நிறுவனம் ஆகும். இது குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லி, மெர்சிடீஸ் பென்ஸ், ஃபெராரி போன்ற பிராண்ட் கார்களுக்கு மாடிஃபிகேஷன் செய்வதில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் வெளிப்புற தோற்றம் மட்டும் இல்லாமல் உட்புறமும், இன்ஜின் எக்ஸாஸ்ட், உள்ளிட்ட அம்சங்களுடன் வாகனத்தை பெர்ஃபார்மென்ஸையும் மாடிபிகேஷன் செய்யும் வேலையையும் செய்துவருகிறது.

Yohan Poonawala

இந்த ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் 7 காரின் ஸ்டாண்டர்டு மாடலில் 7.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 551 எச்பி பவரையும் 810என்எம் டார்க் திறனையும் வெளியப்படுத்தும் இன்ஜினாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பாந்தோம் 7 காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்த 6.75 லிட்டர், ட்வின் சிலிண்டர் வி12 இன்ஜின் தான் தான் இருக்கும் இது பிஎம்டபிள்யூ என்74 என அழைக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 563 எச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் தறினை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மேலும் மான்செரிஇந்த காரில் உள்ள எக்ஸாஸ்ட் சிஸ்டத்தையுமு் மாற்றியமைத்துள்ளது. இது வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸை மேலும் அதிகரிக்கும். இந்த மாடிஃபிகேஷன் ஏற்கனவே மான்செரி நிறுவனத்தால் செய்யப்பட்டது. இதனால் இதை சர்வீஸ் செய்ய வேண்டும் என்றாலும் மான்செரி நிறுவனத்திற்கு தான் செல்ல வேண்டும் அந்நிறுவனம் ஜெர்மனை தலையிடமாக கொண்டது. இந்நிறவனம் வடக்கு முெரகி்கா, மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பால, ஆகிய பகுதகிளில் உள்ள நாடுகளில் கிளைகளை வைத்துள்ளது. இ்நதியாவில் கிளைகள் இல்லை. துபாயில் உள்ள கிளையில் பெரிய ஒர்க் ஷாப் மற்றும் சர்வீஸ் ஏரியா உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு இது தான் அருகில் உள்ள சர்வீஸ் பாயிண்ட் ஆகும்.

Yohan Poonawala

இதனால்தான் பூனாவாலா தனது சொந்தமான காரை சர்வீஸ் செய்ய துபாய் னுப்பியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான் வைலராக பரவி வருகிறது. இதை வைத்து சிலர் இந்த காரை பூனா வாலா துபாய்க்கு விற்பனை செய்துவிட்டார் என்று எல்லாம் பேசி வருகின்றனர். இது முற்றலும் புரளி தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சர்வீஸ் சென்டரை நடத்தினாலும் சில வெளிநாட்டு கார்களை வாங்கிானல் சர்வீஸ் பிரச்சனை வரும் போது வெளிநாட்டிற்கு காரை எடுத்து செல்ல வேண்டியது வரலாம். இது எதிர்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2025, 13:59 [IST]
English summary
Yohan poonawalla rolls royce phantom vii in dubai
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X