அம்பானி, அதானி எல்லாம் இல்ல... பலரும் பார்த்திடாத கார்கள் உடன் பிசியான சாலையை தெறிக்கவிட்ட தொழிலதிபர்!

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் யோஹான் பூனாவாலா (Yohan Poonawalla) வேகம் மற்றும் ஆடம்பரத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர் என்பது நம்மில் சிலருக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன். இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் (Rolls-Royce Phantom VII EWB) கார் உட்பட பல உயர்தர கார்களை இவர் வைத்துள்ளார்.

பூனாவாலா இன்ஜினியரிங் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான யோஹான் பூனாவாலா மேற்கூறப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார் மட்டுமின்றி, லம்போர்கினி கல்லார்டோ எஸ்.இ, பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் டபிள்யூ12 ஸ்பீடு, ஃபெராரி 458 ஸ்பெஷல் அப்பெர்டா, போர்டோஃபினோ, எஃப்12 பெர்லினெட்டா, 488 பிஸ்டா போன்ற நம்மால் நினைத்து பார்க்கவே முடியாத பல சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

yohan poonawalla s multi-crore luxury cars

இப்போது செய்தி என்னவென்றால், செல்வந்தர் யோஹான் பூனாவாலா தனது விலையுயர்ந்த கார்களுடன் மும்பையின் பரபரப்பான சாலை ஒன்றை தெறிக்க விட்டப்படி சென்றுள்ளார். 'ஆட்டோமொபிலி ஆர்டன்ட் இந்தியா' என்ற வலைதளத்தில் பகிரப்பட்ட இது தொடர்பான சில படங்கள், யோஹான் பூனாவாலாவின் கண்கவர் கார்கள் ஒன்றாக பயணம் செய்யும் காட்சிகளை காட்டுகின்றன.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் உடனான இந்த அணிவகுப்பு மும்பையை நோக்கி சென்றதாக அந்த பதிவு தெரிவிக்கிறது. இந்த அணிவகுப்பில் சிவப்பு நிற பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் டபிள்யூ12 ஸ்பீடு, ஃபெராரி 488 பிஸ்டா மற்றும் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் VIII EWB ஆகியவை முன் வரிசையில் சென்றுள்ளன.

yohan poonawalla s multi-crore luxury cars

அவற்றைத் தொடர்ந்து, ஒரு வெள்ளை நிற பென்ட்லி கான்டினென்டல் மற்றும் பழைய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் ஆகியவையும் காணப்பட்டன. அதாவது, தொழிலதிபர் யோஹான் பூனாவாலாவிடம் புதிய தலைமுறை பாண்டோம்-8 கார் மட்டுமின்றி, பழைய தலைமுறை பாண்டோம் காரும் உள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் இவர் புதிய பாண்டோம் VIII EWB காரை வாங்கினார்.

இது யோஹான் பூனாவாலா வாங்கிய 22வது ரோல்ஸ் ராய்ஸ் கார் என சொன்னால் நம்ப முடிகிறதா? இதை விட ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த காருக்காக அவர் 22 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. 2018இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII EWB இன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் 9.5 கோடி ரூபாய் ஆகும்.

yohan poonawalla s multi-crore luxury cars

இது இல்லாமல், கூடுதல் செலவு செய்து தனது விருப்பத்திற்கேற்ப காரை மாற்றிக் கொண்டுள்ள யோஹான் பூனாவாலா, இந்த பாண்டோம் VIII EWB காரை கிளாசிக் போஹேமியன் ரெட் நிறத்தில் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இதில் திடமான தங்க நிற 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி' மற்றும் 22 அங்குல பிரஷ்டு சில்வர் டிஷ் பிளேட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் VIII, 6.75 லிட்டர் வி12 ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது. இந்த என்ஜின் 571 bhp மற்றும் 900 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. யோஹான் பூனாவாலாவிடம் உள்ள மற்றொரு விலையுயர்ந்த காரான ஃபெராரி 488 பிஸ்டா, 3.9 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 என்ஜினைக் கொண்டுள்ளது.

yohan poonawalla s multi-crore luxury cars

இது 710 hp மற்றும் 770 Nm ஆற்றலை உருவாக்குகிறது. இந்த கார் வெறும் 2.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். கான்டினென்டல் ஃபிளையிங் ஸ்பர் W12 ஸ்பீடு, 6.0 லிட்டர் W12 டர்போசார்ஜ்டு என்ஜினுடன் வருகிறது. இது 635PS மற்றும் 900 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் யோஹான் பூனாவாலா ஒரு தீவிர ரோல்ஸ் ராய்ஸ் கார் சேகரிப்பாளர் ஆவார். பழங்கால மற்றும் கிளாசிக் கார்களின் மீதான அவரது ஆர்வம், பல்வேறு நிகழ்வுகளில் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையில் தற்போது நடைபெற்றுள்ள கார் ஷோ ஆனது யோஹான் பூனாவாலா அவ்வப்போது நடத்தக்கூடிய ஒன்றே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 8, 2025, 0:00 [IST]
English summary
Yohan poonawallas weekend trip to mumbai with multi crore luxury cars check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X