இந்த போட்டியில நாங்களும் கலந்துக்கலாமா?.. 100 ரூபா லாட்டரிக்கு 76 லட்ச ரூபா சொகுசு காரை தர போறாங்களா!!

லாட்டரி டிக்கெட்டில் பணத்தை பரிசாக கொடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஓர் மாநிலத்தில் சொகுசு கார்களை பரிசாக அறிவித்து இருக்கின்றனர். என்னென்ன கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை பார்க்கலாம், வாங்க.

அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஹவ்லி-ம் ஒன்றாகும். ராஸ் மஹா உத்சவின்போது கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக இது இருக்கின்றது. மாநிலத்தின் பார்பெட்டா மாவட்டத்தில் இந்த பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டே விழா குழு லாட்டரி பரிசுகளை அறிவித்து இருக்கின்றது.

Range rover sport sv outlook

பொதுவாக லாட்டரி டிக்கெட் விழுந்தால் பெரும் தொகையே பரிசாக வழங்கப்படும். ஆனால், இந்த கமிட்டி லக்சூரி கார்களை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. முதல் பரிசாக ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார் வழங்கப்பட இருக்கின்றது. சுமார் 76 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையிலேயே இந்தி ஆடம்பர ரக இந்திய சந்தையில் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதைத்தொடர்ந்து, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும், மஹிந்திரா ஸ்கார்பியோ காரும், ஸ்கோடா குஷாக் மற்றும் டாட நெக்ஸான் உள்ளிட்ட கார்களையும் விழா கமிட்டி பரிசாக வழங்க இருக்கின்றது. இவ்வளவு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்க போறாங்களே, டிக்கெட்டின் விலை மிக அதிகமாக இருக்குமோ என உங்களுக்கு சந்தேக்கக் கூடும்.

Range rover sport sv

ஆனால், அதுதான் இல்லை. ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.300 மட்டுமே என கூறப்படுகின்றது. இந்த மலிவு விலையிலேயே ஹவுலி ராஸ் கொண்டாட்டத்திற்கான லாட்டரி டிக்கெட் விற்கப்பட இருக்கின்றது. இந்த லாட்டரி டிக்கெட் விற்பனையில் கிடைக்க இருக்கும் லாபத்தை விழா கமிட்டி பரிசு பொருட்களை வழங்க மட்டுமல்ல பலதரப்பட்ட நற்பணிகளுக்காகவும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

அதேவேளையில், மேலே குறிப்பிட்ட கார் மாடலின் எந்தெந்த வேரியண்டுகள் பரிசாக வழங்கப்படும் என்பதை துள்ளியமாக விழா குழு அறிவிக்கவில்லை. இருப்பினும், நடு நிலை அல்லது ஆரம்ப நிலை வேரியண்டையே நிறுவனம் பரிசாக தேர்வு செய்து வழங்கும் என தெரிகின்றது. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவர் இருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரேஞ்ஜ் ரோவர் எவோக், ரேஞ்ஜ் ரோவர் வெலார், ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ஜ் ரோவர் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெயர்களுக்கு ஏற்ப வித்தியாசமான தோற்றம் மற்றும் காஸ்மெட்டிக் அலங்காரங்களை மட்டுமே இந்த மாடல்கள் கொண்டிருக்கும்.

லக்சூரி அம்சம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்குவதில் இந்த கார் மாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கும். இந்த காரில் ஆடம்பர வசதிகள் மட்டுமின்றி பாதுகாப்பு வசதிகளும் மிக அதிகம் ஆகும். எனவேதான் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் பலர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏன் நம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த காரை பயன்படுத்தி வருகின்றார். அவரிடத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஆகிய கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற கார் மாடலையே ஹவுலி ராஸ் விழா கமிட்டி முதல் பரிசாக வழங்க திட்டமிட்டு இருக்கின்றது. சென்ற ஆண்டில் இதே விழா குழு ஆடி காரை முதல் பரிசாக வழங்கியது.

இந்த நிலையிலேயே இந்த வருடம் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. அதேபோல், சென்ற ஆண்டு 3.2 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளை அந்த குழு விற்பனைச் செய்தது. இந்த ஆண்டில் சுமார் 4 லட்சமாவது லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைச் செய்ய விழா குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியில் விழா குழுவினர் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காட்சியளிக்கின்றன. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரல் பயணிக்கும்போது சாலையில் பயணிக்கும் அனுபவத்திற்கு பதிலாக தண்ணீரில் மிதக்கக் கூடிய அனுபவமே கிடைக்கும். அந்த அளவிற்கு மிக சிறந்த ரைடிங் அனுபவத்தையே இந்த கார்கள் வழங்கும். மேலும், வெளிப்புறத்தில் ஏற்படும் இரைச்சல்கள்கூட இந்த காரில் ஏற்படாது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 12:25 [IST]
English summary
You can drive a range rover for just 100 rupees here is how
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+