மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் பறக்கும் விமானத்தில் ஓர் பயணம்!

Written By:

சில ஆயிரம் கிலோமீட்டர்களை ஒரு சில மணிநேரத்தில் கடந்துவிடும் ஆற்றல் படைத்த விமானங்களில் பயணிப்பது என்பது பலருக்கும் நிறைவு தரும் விஷயம். ஆனால், மிக நெடுந்தொலைவு விமான பயணங்கள் என்பது அலுப்பு தரும் விஷயமாக இருப்பதோடு, அதி நேர விரயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தையும் ஒரு சில மணிநேரத்தில் கடந்து விடும் ஆற்றல் வாய்ந்த புதிய தலைமுறை விமானங்களை வடிவமைப்பதில் பல நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த கனவை மெய்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சில உருப்படியான கான்செப்ட் மாடல் விமானங்களை தற்போது ஸ்லைடரில் காணலாம்.

 01. ஏரோஸ்கிராஃப்ட் டிரிஜிபிள் ஏர்ஷிப்

01. ஏரோஸ்கிராஃப்ட் டிரிஜிபிள் ஏர்ஷிப்

எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான சரக்கு போக்குவரத்தில் ஆகாய கப்பல்களை பயன்படுத்தும் எண்ணம் பல நிறுவனங்களிடையே உள்ளது. சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி, பயணிகள் போக்குவரத்திலும் இந்த ஆகாய கப்பல்களை பயன்படுத்த இயலும். அவ்வாறு உருவாக்கப்பட்டு வரும் கான்செப்ட்டுகளில் ஒன்று இந்த புதிய ஆகாய கப்பல். ஒரு ஏக்கர் பரப்புடைய வடிவத்தை கொண்ட இந்த ஆகாய கப்பல் 400 டன் எடை கொண்டதாக இருக்கும். ஹீலியம் மற்றும் ஜெட் எஞ்சின்கள் உதவியுடன் இயங்கும் ஆகாய கப்பல் தரையை விட சற்றே மேலே பறக்கும் என்பதோடு, எங்கு வேண்டுமானாலும் தரை இறக்க முடியும்.

02. லாக்ஹீட் மார்ட்டின் ஸ்கைடக் ஹைபிரிட் ஏர்ஷிப்

02. லாக்ஹீட் மார்ட்டின் ஸ்கைடக் ஹைபிரிட் ஏர்ஷிப்

முந்தைய ஸ்லைடில் பார்த்தது போன்றே இதுவும் ஒரு ஆகாய கப்பல். ஆனால், இந்த ஆகாய கப்பலில் பின்புறத்தில் புரொப்பல்லர் கொடுக்கப்பட்டு இருப்பதால் செம்மையான திறன் கொண்டதாக இருக்கும். சிறப்பான ஏரோடைனமிக் தத்துவமும், குறைவான எரிபொருள் செலவில் செல்லும். அதிக நாட்கள் ஆகாயத்திலேயே நிலைநிறுத்தி கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

03. ஏர்பஸ் பிளேன் 2050

03. ஏர்பஸ் பிளேன் 2050

இதன் உடல்கூடு ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. எனவே, பறந்து கொண்டிருக்கும்போதே, பயணிகள் வெளிப்புறத்தை முழுமையாக ரசித்தவாறே பயணிக்க முடியும். அதேநேரத்தில், கடுமையான சீதோஷ்ண நிலை மற்றும் மின்னல் தாக்கும் சமயங்களில் பயணிகளை அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அதற்காக விசேஷ டிஜிட்டல் திரை மூலமாக மறைப்பு வேலைகளையும் செய்ய முடியும். இதுதவிர, பல விசேஷ சமாச்சாரங்களை இந்த விமானத்தில் சேர்க்க ஏர்பஸ் திட்டமிட்டு இருக்கிறது.

04. ஐகான் ஏ-5 தி ஃபோல்டபிள் ஆம்பிபியஸ் பிளேன்

04. ஐகான் ஏ-5 தி ஃபோல்டபிள் ஆம்பிபியஸ் பிளேன்

தரையிலும், தண்ணீரிலும் தரையிறங்கும் வசதி கொண்ட ஆம்பிபியஸ் ரக விமான கான்செப்ட் இது. இந்த விமானத்தில் இருக்கும் 1,211சிசி ரோட்டஸ் 912 எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 686.4 கிலோ எடையுடன் மேலேழும்பும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 176 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த விமானம் சாதாரண 91- ஆக்டேன் எரிபொருளில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

05. போயிங் டிஸ்க்ரோட்டர்

05. போயிங் டிஸ்க்ரோட்டர்

விமானத்தை செங்குத்தாக தரையிறக்கவும், மேலே எழும்புவதற்கு வசதி படும் வகையில், டிஸ்க் ரோட்டர் பொருத்தப்பட்ட விமான கான்செப்ட். அதாவது, ஹெலிகாப்டர் மற்றும் விமானம் என இரண்டின் சிறப்பம்சங்களை கொண்டது. மேலே எழும்பியவுடன் ரோட்டர்கள் இயக்கம் நின்றுபோய், இறக்கைகளில் உள்ள எஞ்சின் விமானம் போல இயங்கத் துவங்கிவிடும். போயிங் நிறுவனத்தின் தீவிர பரிசோதனை முயற்சிகளில் இதுவும் ஒன்று.

06. QUEIA 2058 கான்செப்ட் கிராஃப்ட்

06. QUEIA 2058 கான்செப்ட் கிராஃப்ட்

2008ம் ஆண்டு நாசா ஏரோநாட்டிக்ஸ் போட்டிக்காக, அமெரிக்காவின் மியாமி பல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்த விமான கான்செப்ட். வால்பகுதி இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இந்த விமான மாடல் 2058ல் விமானங்கள் எப்படியிருக்கும் என்பதை காட்டும் முன்னோடி மாடலாக கருதப்படுகிறது.

 07. மாக்லேவ் ஏர் அர்பன் டிரான்ஸ்போர்ட்

07. மாக்லேவ் ஏர் அர்பன் டிரான்ஸ்போர்ட்

ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் மற்றும் காந்த சக்தியில் இயங்கும் பறக்கும் சாதனமாக வடிவமைக்கப்பட்டது. அதாவது, தரைக்கு மேலே குறிப்பிட்ட இடைவெளியில், மாக்லேவ் எனப்படும் காந்தவிசை புலத்துடன் இயைந்து ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் மூலமாக விமானம் போன்று அதிவேகத்தில் செல்லும். பெரு நகரின் மையப்பகுதியிலிருந்து விமான நிலையத்தை இணைக்கும் விதத்திலான போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

 08. க்ரீன் ஏர்வேஸ் பறக்கும் தட்டு

08. க்ரீன் ஏர்வேஸ் பறக்கும் தட்டு

டெல்ஃப்ட பல்கலைகழகத்தில் பணியாற்றும் எட்னெல் ஸ்ட்ராட்ஸ்மா என்பவரின் எண்ணத்தில் உருவான பறக்கும் தட்டு கான்செப்ட். இந்த பறக்கும் தட்டின் மிக முக்கிய சிறப்பம்சம் என்ன தெரியுமா? விமானங்களைவிட மிக குறைவான புகையை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும்.

09. ஸ்கைலான் சர்ஃபேஸ் டூ ஆர்பிட் பிளேன்

09. ஸ்கைலான் சர்ஃபேஸ் டூ ஆர்பிட் பிளேன்

ராக்கெட் போன்று செங்குத்தாக விண்வெளியில் பாய்ந்து பின்னர், குறிப்பிட்ட இலக்கிற்கு நேராக விமானம் போல தரையிறங்கும் கான்செப்ட் இது. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும். வளி மண்டலத்தை தாண்டும்போது, எரிபொருள் கலனிலிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும். இதுவும் மிக விரைவான போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

10. லாக்ஹீட் மார்ட்டின் எஸ்ஆர்-72

10. லாக்ஹீட் மார்ட்டின் எஸ்ஆர்-72

உலகின் அதிவேக லாக்ஹீட் மார்ட்டின் எஸ்ஆர்-71 பிளாக்பேர்டு விமானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜெட் விமானம். இது மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் பறக்கும்.

11. இப்படியும்...

11. இப்படியும்...

எதிர்காலத்தில் கார்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு சாலையில் பாதுகாப்பாக செல்வது போன்று, நாரைக்கூட்டம் போல சிறிய விமானங்கள் இணையாக பறக்கும் வாய்ப்பு உள்ளது.

12. மிதக்கும் விமான நிலையங்கள்

12. மிதக்கும் விமான நிலையங்கள்

வானிலேயே மிகப்பெரிய விமானங்களின் முதுகில் அமைக்கப்படும் தளத்தில், நீண்ட தூர விமானங்கள் தரை இறங்கி மீண்டும் பறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

13. பொழுதுபோக்கு வசதிகள்

13. பொழுதுபோக்கு வசதிகள்

சொகுசு கப்பல்கள் போலவே, விமானங்களில் தியேட்டர், சூதாட்ட விடுதி போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 14. எரிபொருள்

14. எரிபொருள்

காற்றில் உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி, பறக்கும் விமானங்களும் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உலகின் அதிவேக விமானம் பிளாக்பேர்டு!

உலகின் அதிவேக விமானம் பிளாக்பேர்டு!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
You'll Soon Be Able Fly At 7,400Km/h — Find Out How.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark