பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும்போது செய்யக்கூடாத ஒரு விஷயம் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது எந்தெந்த வழிகளில் எல்லாம் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன? என்பது பைலட்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் அத்தகைய சூழல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதையும் பைலட்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகதான், பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்ட் ஆகும்போதும் காலில் அணிந்துள்ள ஷூ-வை கழற்றக்கூடாது என்று பயணிகளுக்கு வழங்கப்படும் அறிவுரையும் இதில் முக்கியமான ஒன்றாகும்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே பயணிகளுக்கு இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. விமான பயணத்தில் மிகவும் அபாயகரமான கட்டம் எது? என்பதை கடந்த செய்திகளில் நாங்கள் பலமுறை நமது வாசகர்களுக்கு தெரிவித்துள்ளோம். இதன்படி டேக்-ஆஃப் ஆவதும், லேண்ட் ஆவதும்தான் மிகவும் அபாயரகமான கட்டம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

விமானம் புறப்பட்ட முதல் மூன்று நிமிடங்கள் அல்லது விமானம் தரையிறங்குவதற்கு முந்தைய கடைசி 8 நிமிடங்களில்தான் 80 சதவீத விபத்துக்கள் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்ட் ஆகும்போதும் பயணிகளும், விமான ஊழியர்களும் எந்த ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

இங்கேதான் ஷூ முக்கியத்துவம் பெறுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு நீங்கள் ஷூ அணியாமல் இருந்தால், வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவேதான் நீங்கள் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, உங்களை தயார் நிலையில் வைத்துள்ளார்கள். இந்த விதிமுறை உங்களுக்கு மட்டுமின்றி, உங்களுடன் பயணிக்கும் மற்றவர்களுக்கும் உதவும்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

ஒரு சிலர் விமான பயணத்தின்போது ஷூ-வை கழற்றி வைத்து விடுகின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இது மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். அத்துடன் அவர்கள் வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே இந்த ஒழுங்கீனமான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம்.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

அதேபோல் சாதாரண செருப்பு அணிவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் ஒருவேளை சேறு, சகதி நிறைந்த இடத்தில் விமானம் தரையிறங்கும் சூழல் ஏற்பட்டால், சாதாரண செருப்பு உங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடும். எனவே விமான பயணத்தின்போது, ஷூ அணிவதுதான் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பார்க்க சின்ன விஷயமா இருக்கலாம்... ஆனா ரொம்ப ரிஸ்க்... பைலட்கள் எச்சரிக்கையை மீறி இதை மட்டும் செஞ்சராதீங்க...

மேலும் விமானத்தில் கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாது எனவும் விமானங்களில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வெறும் காலுடன் கழிவறைகளுக்கு செல்ல முடியாது. விமான பயணத்தின்போது ஷூ-வை கழற்றி வைக்க வேண்டாம் என தெரிவிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
You Should Always Wear Shoes During Flight: Here Is The Reason Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X