23 வயசுல செய்யுற சாதனையா இதெல்லாம்!! வாழ்வில் ஒவ்வொரு படியா முன்னேறல... ரேஞ்ச் ரோவர் மூலம் ஒரேடியா லிஃப்ட்டில்

அவ்னீத் கவுர் (Avneet Kaur), இந்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் 23 வயதான இளம் நடிகை. கடந்த சில நாட்களாக அவ்னீத் கவுரின் பெயரின் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக, சர்ச்சையான செய்திகளிலும், காதல் வதந்திகளிலும் இவரது பெயர் அதிகம் இடம்பெறுகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடன் இணைத்து வைத்து பேசப்படும் நடிகை அவ்னீத் கவுர் சில தினங்களுக்கு முன்பு மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியால் சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்றார்.

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கில் இருந்து அவ்னீத் கவுரின் ரசிகர் ஒருவரது இன்ஸ்டாகிராம் பதிவு லைக் செய்யப்பட்டுள்ளது. உலகமே போற்றும் கிரிக்கெட் வீரர் லைக் செய்யும் அளவிற்கு யார் இந்த இளம் நடிகை என நாலு பேர் நாலு விதமாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள்ளாக, இந்த லைக்கை தான் செய்யவில்லை எனவும், தன்னிச்சையாக இது நடந்துள்ளது எனவும் விராட் கோலி தெளிவுப்படுத்தினார்.

actress avneet kaur s car collections

அதேபோல், நடிகை தமன்னாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சமீபத்தில், மற்றொரு பிரபலமான நடிகையான தீபிகா படுகோனேவை கிண்டல் செய்யும் விதமான பதிவு லைக் செய்யப்பட்டுள்ளது. இதுவும் தானாக நடந்துள்ளதாகவும், இவ்வாறான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ளதை கவனிக்கும்படியும் நேரடியாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு நடிகை தமன்னா கோரிக்கை வைத்துள்ளார்.

தமன்னாவின் இந்த இன்ஸ்டா பதிவால், நடிகை அவ்னீத் கவுரின் பெயரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அவ்னீத் கவுரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 2014ஆம் ஆண்டில் தனது 13ஆம் வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தாலும் இவருக்கு ஓரளவிற்கு கவனிக்கத்தக்க கதாபாத்திரம் 2018ஆம் ஆண்டில் வெளிவந்த 'புருனே' என்கிற இந்தி திரைப்படத்தில்தான் கிடைத்தது.

actress avneet kaur s car collections

முதல் திரைப்பட வாய்ப்பை நன்கு கெட்டியாக பிடித்துக் கொண்ட அவ்னீத் கவுர் அதன் மூலம் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளை பெற துவங்கினார். அடுத்ததாக, இந்தியாவை தாண்டி வியட்நாம் நாட்டு திரைப்படம் ஒன்றில் நடித்துவரும் நடிகை அவ்னீத் கவுர், அவ்வப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலமாக, 23 வயதிலேயே பல சொகுசு கார்களுக்கு சொந்தக்காரராக அவ்னீத் கவுர் உள்ளார்.

இவரிடம் உள்ள விலையுயர்ந்த கார் என்றால், அது ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகும். இந்தியாவில் பல்வேறு விதமான ரேஞ்ச் ரோவர் கார்கள் ரூ.83 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.4 கோடி வரையிலான விலைகளில் உள்ளன. அவற்றுள் எந்த ரேஞ்ச் ரோவர் காரை அவ்னீத் கவுர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இது இல்லாமல், இந்த இளம் நடிகையிடம் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) கார் ஒன்றும் உள்ளது.

actress avneet kaur s car collections

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் எஸ்யூவி காராக விளங்கும் கோடியாக்கை விலையுயர்ந்த கார் என்று சொல்ல முடியாது, அதேநேரம் விலை குறைவான கார் என்றும் சொல்ல முடியாது. தற்சமயம் இந்தியாவில் ஸ்போர்ட்லைன் மற்றும் செலெக்‌ஷன் எல்&கே என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கோடியாக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.46.89 லட்சம் மற்றும் ரூ.48.69 லட்சமாக உள்ளன.

இவை மட்டுமின்றி, இந்தியர்களின் விருப்பமான காரான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்றும் அவ்னீத் கவுரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஃபார்ச்சூனர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.44.58 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இவற்றுடன், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) கார் ஒன்றையும் இந்த பாலிவுட் நடிகை வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு எல்லா திறமைகளும் அவ்னீத் கவுரிடம் உள்ளதாக இந்தி திரைத்துறையினர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நடிகையிடம் தற்போதைக்கு குறைவான எண்ணிக்கையில் கார்கள் இருந்தாலும், வரும் காலங்களில் இவர் அதிக சொகுசு கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில், அவ்னீத் கவுரிடம் தற்போதுள்ள கார்களே நம்மில் பலருக்கு கனவாக உள்ளது.

Article Published On: Thursday, May 29, 2025, 5:00 [IST]
English summary
Young actress avneet kaur car collections range rover to hyundai creta
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X