ஓர் நடிகையாக இருந்துக்கொண்டு இப்படியா நடந்துக்கொள்வது... இளம் நடிகையின் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!!

இந்தியாவில் பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்தப்படி பயணம் செய்வது காதலர்கள் மத்தியில் டிரெண்டாகி வரும் நிலையில், இளம் நடிகை ஒருவர் அவ்வாறு பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்தவாறு ரைடு செய்துள்ளார். யார் அந்த நடிகை என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இணையத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பாடல்களும், அதற்கேற்ற நடன அசைவுகளும் டிரெண்ட் ஆகி வருவது இயல்பே. ஆனால் அத்தகைய செயல்கள் மற்றவர்களை எந்த அளவிற்கு தொந்தரவு செய்யாததாக உள்ளது என்பதை அறிவதே இதில் முக்கியமாகும். ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பு, மெதுவாக இயங்கும் காரில் இருந்து இறங்கி, காரின் ஓட்டத்திற்கு இணையாக சாலையில் நடனமாடுவது டிரெண்ட்டானது.

ஓர் நடிகையாக இருந்துக்கொண்டு இப்படியா நடந்துக்கொள்வது...!?

இதுகுறித்த வீடியோக்களை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதேபோன்று சமீப மாதங்களாக, காதலர்கள் கட்டிப்பிடித்தப்படி பைக்கில் பயணம் செய்தவாறு அதகளப்படுத்தி வருகின்றனர். அதாவது, ஒருவர் பைக்கை இயக்க மற்றொருவர் ரைடருக்கு பின்னால் அமர்வதற்கு பதிலாக ரைடருக்கு முன்னால் பெட்ரோல் டேங்கில் அமர்ந்தப்படி அவரை கட்டிப்பிடித்து கொண்டு பயணம் செய்வது டிரெண்ட் ஆகி வருகிறது.

இதில் பெரும்பாலான சம்பவங்களில் ஆண் பைக்கை ரைடு செய்ய, பெண் பெட்ரோல் டேங்கில் அமர்ந்தப்படி பயணம் செய்திருந்தனர். இத்தகைய பைக் ரைடிங்குகள் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதால், இதுவரையில் இத்தகைய செயல்களில் ஈடுப்பட்ட அனைவரையும் போலீஸார் தண்டித்து உள்ளனர். இந்த நிலையில் இளம் பாலிவுட் நடிகையான தேஜஸ்வி பிரகாஷ் அதேபோன்று பொது சாலையில் ராயல் என்பீல்டு பைக் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். தேஜஸ்வி பிரகாஷ் நிறைய மராத்தி படங்களிலும், இந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஒரு சாதாரண குடிமக்கள் இவ்வாறு பொது சாலையில் நடந்து கொண்டாலே ஏற்க முடியாது எனும்போது, பலரால் அறியப்பட்ட ஒரு இளம் நடிகை இவ்வாறு பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்திருப்பது முகம் சுளிக்க வைத்துள்ளது.

தேஜஸ்வி பிரகாஷின் இந்த ஆபத்தான பயணம் எங்கு நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. ஏதோ ஒரு பாலத்தின் மீதுதான் இவ்வாறு இவர்கள் சர்க்கஸ் செய்துள்ளனர் என்பதை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. வீடியோவில், தேஜஸ்வி பிரகாஷ் உடன் இருக்கும் இளைஞர் யார் என்பது குறித்த விபரங்களும் இல்லை. ஆனால் தேஜஸ்வியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை "எப்போது நீங்கள் கிரேஸ் லவ்வர்ஸ் ஆக இருக்கும்போது" என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டுள்ளனர்.

ஓர் நடிகையாக இருந்துக்கொண்டு இப்படியா நடந்துக்கொள்வது...!?

இந்த கேப்ஷனை வைத்து அந்த இளைஞர் தேஜஸ்வி பிரகாஷின் காதலர் என்றும், இந்த செயல் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக இவர்கள் இருவரால் செய்யப்பட்டது என்றும் கூறினாலும், சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த இன்ஸ்டா வீடியோவில் இவர்கள் இருவருடன் உதவிக்காக மேலும் சிலர் அருகில் நிற்பதை வைத்து பார்க்கும்போது, இது படப்பிடிப்புக்காக செய்யப்பட்டது என தோன்ற வைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இது படப்பிடிப்புக்காக செய்ததாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட சந்தோஷத்திற்காக செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி எப்படியிருந்தாலும் இத்தகைய செயல்கள் குற்றமே. இவ்வாறான காட்சிகளை கொண்ட திரைப்படங்கள்/ சீரியல்களை பார்க்கும்போது மற்றவர்களுக்கும் இவ்வாறு பொது சாலையில் செய்ய வேண்டும் என தோன்றலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக மேற்கண்ட சம்பவத்தில் இருவரது தலையிலும் ஹெல்மெட் இல்லை.

Article Published On: Wednesday, March 29, 2023, 23:08 [IST]
English summary
Young actress tejasswi prakash spotted sitting on moving bikes petrol tank
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+