ஊரே பார்த்து வியக்கும் காரை இளம் வயதிலேயே வாங்கிட்டாரு! 2020இல் நிறுவிய கம்பெனி இலாபத்தை கொட்டுது போல!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்குவதே நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய கனவாக இருக்கும் நிலையில், மெர்சிடிஸ்-மேபக் (Maybach) காரை வாங்குவதை எல்லாம் யோசித்து பார்க்கவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு பென்ஸ் கார்களை காட்டிலும், மேபக் கார்கள் விலைமிக்கவையாக விளங்குகின்றன. அத்தகைய மெர்சிடிஸ்-மேபக் கார் ஒன்றை இளம் வயதிலேயே தொழிலதிபர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள மேபக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்படுவதை போல, மெர்சிடிஸ்-மேபக் காரிலும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய மெர்சிடிஸ்-மேபக் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றுதான், மேபக் இ.க்யூ.எஸ் (EQS) என்கிற லக்சரியான எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரை வாங்க வேண்டும் என்பது பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விருப்பமாக இருந்துள்ளது.

young bengaluru businessman anish mallappa

இதற்காக அவர், மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் காரின் 680 வேரியண்ட்டை வாங்கியுள்ளார். இதன் மூலமாக, இந்தியாவில் இளம் வயதில் இக்யூஎஸ் காரை வாங்கியவராக இவர் அறியப்படுகிறார். இந்த பெங்களூரு தொழிலதிபரின் பெயர், அனிஷ் மல்லப்பா (Anish Mallappa) ஆகும். பெங்களூருவில் செயல்படும் 'ஃபோகல்லி' (Focally) என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனராக அனிஷ் மல்லப்பா உள்ளார்.

தனித்தனியாக பிரிக்கக்கூடிய ஸ்மார்ட்டான மூக்கு கண்ணாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான இதனை 2020ஆம் ஆண்டில்தான் அனிஷ் மல்லப்பா உள்பட அவரது நண்பர்கள் நிறுவினர். அதற்குள்ளாக, மெர்சிடிஸ்-மேபக் காரை வாங்கும் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ள அனிஷ் மல்லப்பா தற்போது வாங்கியிருக்கும் இக்யூஎஸ் 680 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.2.28 கோடி ஆகும்.

young bengaluru businessman anish mallappa

ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், காரின் ஆன்-ரோடு விலை இன்னும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும். 680 வேரியண்ட் இல்லாமல், 'நைட் சீரிஸ்' வேரியண்ட்டிலும் இக்யூஎஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலை இன்னும் அதிகமாக ரூ.2.63 கோடி ஆகும்.

மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் 680 எலக்ட்ரிக் காரை தொழிலதிபர் அனிஷ் மல்லப்பா வாங்கியிருப்பதை சம்பந்தப்பட்ட மெர்சிடிஸ் டீலர்ஷிப் ஷோரூம் தனது யூடியூப் (Youtube) சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் சி.எல்.ஏ, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களில் நண்பர்களுடன் அனிஷ் மல்லப்பா மெர்சிடிஸ் ஷோரூமுக்கு வருவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோவில், பெரிய பெட்டி ஒன்றில் கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

பெட்டியை திறந்த போதும், துணியால் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தது. அதனை விலக்கி தனது புத்தம்-புதிய மெர்சிடிஸ்-மேபக் காரை பார்வைக்கு கொண்டுவந்த தொழிலதிபர் அனிஷ் மல்லப்பாவுக்கு பூங்கொத்துடன் காரின் சாவி வழங்கப்பட்டது. அதன்பின், ஷோரூமுக்குள் வைத்தே பூஜை செய்யப்பட்டதை அடுத்து, டிரைவர் சீட்டில் அமர்ந்து அனிஷ் மல்லப்பா ஷோரூமில் இருந்து காரை ஓட்டி சென்றார்.

இ.க்யூ.எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இதுவாகும். அளவில் பெரியதான 22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் உருவாக்கப்படும் இந்த காருக்கு, மேபக் கார்களுக்கே உண்டான ட்யூயல்-டோன் பெயிண்ட் வழங்கப்படுகிறது. உள்ளே 11.6 இன்ச்சில் இரு திரைகளை பெறும் இந்த எலக்ட்ரிக் காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் முன்பக்கத்தில் ஒன்றும், பின்பக்கத்தில் ஒன்றும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டபுள் எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் இந்தியாவில் சில எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான, மெர்சிடிஸ்-மேபக் இக்யூஎஸ் காரை தான் பெங்களூரு இளம் தொழிலதிபர் அனிஷ் மல்லப்பா வாங்கியுள்ளார். இதனால், பெங்களூரு சாலைகளில் இந்த மேபக் எலக்ட்ரிக் காரில் இனி இவரை பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 11:09 [IST]
English summary
Young bengaluru businessman bought mercedes maybach eqs 680 electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+