120 விலை உயர்ந்த கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

120 கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளை வாங்கி சேர்த்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர். அவரது பிரம்மாண்ட கார் கராஜிற்கு ஒரு விசிட் அடிக

வீட்டு வாசலில் ஒரு காரை வாங்கி நிறுத்தினாலேயே சமூகத்தில் அந்த வீட்டின் அந்தஸ்தும், கவுரவமும் பன்மடங்கு உயரும். இந்த நிலையில், 120 கார்களை வாங்கி குவித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மராட்டிய மாநிலம், கோல்ஹாப்பூரை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஷெர்னிக் கோதாவத்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

கோதாவத் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் 27 வயது நிரம்பிய ஷெர்னிக் கோதாவத்திற்கு சிறு வயதில் இருந்தே கார்கள் மீது அலாதி பிரியம். இதற்கு காரணம், அவரது தாத்தாவும், தந்தையும் கார் சேகரிப்பில் ஆர்வம் உடையவர்கள் என்பதுதான்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஷெர்னிக்கின் தந்தை சஞ்சய் கோதாவத் எனர்ஜி நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். கடந்த 1994ம் ஆண்டுதான் ஷெர்னிக்கின் தந்தை வீட்டில் கார்களுக்கான தனி கராஜை உருவாக்கி இருக்கிறார். அதன் பிறகு தொடர்ச்சியாக கார்களை வாங்கத் துவங்கி இருக்கிறார். அந்த ஆர்வத்தை பார்த்து வளர்ந்த ஷெர்னிக்கும் இப்போது தந்தை வழியில் கார்களை வாங்கி குவித்து வருகிறார்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஷெர்னிக்கின் தந்தை சஞ்சய் கோதாவத்திற்கு செடான் மற்றும் எஸ்யூவி வகை கார்கள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால், மகன் ஷெர்னிக்கிற்கு ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்கள் என்றால் இஷ்டம். எனவே, 3 செடான் கார்களுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் கார் என்று தந்தையும், மகனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளனர்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

அதன்படி, 3 செடான் கார்கள் வாங்கியவுடன் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் அவர்களது வீட்டிற்கு வந்துவிடுமாம். தற்போது அவர்கள் வீட்டு கராஜில் நிறுத்தப்பட்டு இருக்கும் 120 கார்களில் 25 சதவீதம் கார்கள் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்கள் என்று ஷெர்னிக் தெரிவித்துள்ளார்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஷெர்னிக்கிற்கு அவரது தந்தை முதன்முதலாக மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்கி கொடுத்துள்ளார். அதேநேரத்தில், எங்கே அதிவேகத்தில் ஓட்டுவாரோ என்று கருதி, ஷெர்னிக்கிடம் காரை கொடுக்கும்போதெல்லாம் பதட்டமடைந்துவிடுவாராம். இருப்பினும், அந்த காரை நன்றாக ஓட்டி கற்றுக்கொண்டவுடன் தனது கவனத்தை முழுவதுமாக சூப்பர் கார்கள் பக்கம் திருப்பி விட்டார் ஷெர்னிக்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

தற்போது ஷெர்னிக் வீட்டு கராஜில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், ரேஞ்ச்ரோவர் வோக், நிஸான் ஜிடிஆர், போர்ஷே கேயென் பாக்ஸ்டர், லிங்கன் லிமோசின், கேடில்லாக் எஸ்டிஎஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே மற்றும் எக்ஸ்எஃப், க்றைஸ்லர் ஹெமி 300, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், எஸ்எல் க்ளாஸ், ஜிஎல் க்ளாஸ் மற்றும் இ க்ளாஸ் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்கள், ஆடி ஏ8 சொகுசு செடான் கார், க்யூ7 எஸ்யூவி மற்றும் ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களும் இருக்கின்றன. இதில், சுவாரஸ்யம் என்னவெனில், இதில் பல கார்கள் இந்தியா வருவதற்கு முன்னரே இவர்கள் இறக்குமதி செய்து வாங்கி இருக்கின்றனர்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

அதிவேகம் என்றால் ஷெர்னிக்கின் நினைவுக்கு வருவது நிஸான் ஜிடிஆர் மற்றும் ஃபெராரி 360 கார்கள்தானாம். சொகுசு என்றால் அது மெர்சிடிஸ் பென்ஸ் காரை தட்டிக் கொள்ள முடியாது என்று தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார். ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை வாங்கியபோது, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தில் திளைத்ததாகவும், அது த்ரில்லான அனுபவமாகவும் நினைவு கூர்கிறார் ஷெர்னிக்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஹம்மர் எஸ்யூவியை மும்பையில் டெலிவிரி பெற்று உடனடியாக தனது சொந்த ஊரான கோஹ்காப்பூருக்கு திரும்பி இருக்கிறார். இடையில் எங்கும் நிற்காமல் கிட்டத்தட்ட 400 கிமீ தூரம் அந்த எஸ்யூவியை ஓட்டி வந்திருக்கிறார் ஷெர்னிக். ஒரு பெரிய டிரக்கை ஓட்டுவது போன்ற அனுபவத்தை கொடுத்ததாம் ஹம்மர் எஸ்யூவி.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

120 கார்களையும் தினசரி பராமரிப்பதற்காக மெக்கானிக்குகளை பணியமர்த்தி வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் ஷெர்னிக். தினசரி அனைத்து கார்களும் ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓட விட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

நம் நாட்டு சாலைகளில் அதிவேகத்தில் செல்வது ஆபத்தானது என்பதை அறிவேன். எனவே, கார்களை அதிவேகத்தில் ஓட்டுவது கிடையாது. தேசிய நெடுஞ்சாலை எண்4ல் அவ்வப்போது சென்று வருவது பிடிக்கும். அதுவும் இரவு வேளைகளில் மட்டும். காரின் உச்சபட்ச வேகத்தை தொட்டு பார்க்க முனைந்தது கிடையாது என்று சூப்பர் கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மெஸெஜையும் இந்த இடத்தில் கூறுகிறார்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் விரைவு சாலையில் தந்தையுடன் ஜாகுவார் எஸ்5 காரில் பயணித்து இருக்கிறார். அதிகபட்சமாக 300 கிமீ வேகம் வரை அவரது தந்தை ஓட்டியதாக நினைவுகூர்கிறார். அப்போது என்னிடம் லைசென்ஸ் இல்லாததால், தனது தந்தையுடன் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணித்ததாக கூறுகிறார்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

ஆட்டோபான் சாலையில் ஃபெராரி அல்லது லம்போர்கினி காரில் அதுபோன்று அதிவேகத்தில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதையும் தெரிவித்துள்ளார் ஷெர்னிக்.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

120 விலை உயர்ந்த கார்கள் மட்டுமின்றி, ஏராளமான சூப்பர் பைக்குகளும் ஷெர்னிக்கிடம் உள்ளது. ட்ரையம்ஃப், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பல பிராண்டுகளின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களை வாங்கி வைத்துள்ளார். ஓய்வு நேரங்களில் இந்த பைக்குகளில் ரவுண்டு அடிப்பதும் அவரது வழக்கமாக உள்ளது.

120 சூப்பர் கார்கள், எண்ணிடலங்கா சூப்பர் பைக்குகள்... கலக்கும் இளம் தொழிலதிபர்!

கார், பைக் மட்டுமில்லை, சொந்தமாக ஹெலிகாப்டர்களும் ஷெர்னிக் குடும்பத்தாரிடம் உள்ளது. அவை அவரது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் வாகன பிரியத்தின் உச்சத்தை காட்டுவதாகவே இவர்களது மோட்டார் உலகம் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Young Business Man Shrenik Ghodawat's with a 120-car collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X