பார்ப்பதற்கு இரு கண்கள் பத்தாது... சேலையில் பைக் ரைடிங்!! இளைஞர்களின் லைக்ஸ் மலை போல குவிஞ்சி கெடக்கு!

பெண்கள் பைக் ஓட்டுவது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. பெண்கள் பைக் ஓட்ட வேண்டுமெனில் அதற்கென அவர்கள் பிரத்யேகமான உடையை அணிந்திருக்க வேண்டும் என்கிற நிலை மாறி, பெண்கள் இப்போதெல்லாம் சேலையில் கூட மோட்டார்சைக்கிள் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, இளம்பெண்கள் தான் சேலையிலும் பைக் ஓட்ட அதிகம் விரும்புகின்றனர். இதற்கு சாட்சியாக பல்வேறு நிகழ்வுகளை இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இங்கு ஒரு இளம்பெண் சேலையில் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை ஓட்டி அசத்தியுள்ளார்.

யார் இவர்? சேலையில் பைக் ஓட்டுவது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை பற்றி இனி பார்க்கலாம். இளம் தலைமுறையினர் மத்தியில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மிக பிரபலமாக உள்ளன என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் குறைந்தது ஒரு மாடல் ஆவது அவர்களது ஃபேவரட்டாக இருக்கும்.

girl rides bike in saree

ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஓட்டுவதற்கு அந்த அளவிற்கு ஜாலியானவை ஆகும். கடந்த காலங்களில் இருந்து பெண்கள் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டுவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இங்கு ஒரு இளம்பெண் ராயல் என்ஃபீல்டு காண்டினென்டல் ஜிடி650 பைக்கை ஓட்டி அசத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, ஜெட்டி பைக்கர்கேர்ள் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பைக்கில் காட்சித்தரும் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கு தான் இந்த ஜெட்டி பைக்கர் கேர்ள் ஆகும். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்து பார்த்ததில், இந்த பெண் பைக் பிரியர் என்பதை அறிய முடிகிறது. இவரிடம் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக் ஒன்று உள்ளது. இந்த பைக்குடன் இருக்கும் பல்வேறு விதமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

girl rides bike in saree

இந்த வகையில் சமீபத்தில் இவர் பகிர்ந்துக் கொண்ட, சிவப்பு நிற சேலையில் பைக் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தங்களது லைக்ஸையும், கமெண்ட்ஸையும் வாரி வழங்கி வருகின்றனர். ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் சிவப்பு நிறத்திற்கு ஏற்ப சிவப்பு நிறத்தில் புடவையை இந்த பெண் அணிந்துள்ளார்.

வீடியோவில், இந்த பெண் தனது இரு கைகளையும் விட்டு பைக் ஓட்டுவதை காணலாம். அதுமட்டுமின்றி சில இடங்களில், ஒரு கையில் பைக்கை ஓட்டிக் கொண்டு, மற்றொரு கையால் சேலையின் முந்தானையை ஸ்டைலாக சுற்றிக் கொண்டு பைக் ஓட்டுவதையும் வீடியோவில் காணலாம். அந்த சமயங்களில், இவரது கவனம் சாலையில் இல்லை.

girl rides bike in saree

பொதுவாகவே, சேலையில் பைக் ஓட்டுவது என்பது அசவுகரியமானது என்பது மட்டுமின்றி, ஆபத்தானதும் கூட. ஏனெனில், சேலை ஆனது பெரிய அளவிலான ஆடை என்பதால், அது பைக்கின் சக்கரத்தில், செயின் ஸ்பிராக்கெட்டில் அல்லது என்ஜின் சிஸ்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடும். உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால், இது விபத்தில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது.

இதனால்தான், நிறைய பெண்கள் சேலையில் பைக் ஓட்ட விரும்புவதில்லை. ஆனால், இந்த இளம்பெண் சேலையில் பைக் ஓட்டியது மட்டுமின்றி, ஸ்டைலாக இரு கைகளை விட்டு பைக் ஓட்டியது மற்றும் சாலையை பார்க்காமல் வீடியோவிற்காக சுற்றி முற்றி பார்த்தவாறு பைக்கை ஓட்டியுள்ளார். இது பெரிய தவறு ஆகும். இவர் செய்துள்ள ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், முறையாக ஹெல்மெட் அணிந்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பெண் ஹெல்மெட் அணிந்திருப்பது கூட மற்றவர்கள் தன் முகத்தை பார்த்துவிட கூடாது என்பதற்காகவே. ஏனெனில், தனது பெயரை கூட வெளிப்படுத்த விரும்பாதவர், முகத்தை மட்டும் எப்படி வெளிக்காட்டுவார். ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி இருப்பினும், நடு ரோட்டில் இரண்டு கைகளை விட்டு பைக் ஓட்டியது பெரிய தவறாகும். போலீசார் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 11:02 [IST]
English summary
Young girl rides royal enfield continental gt650 bike in saree check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X