அப்பா எம்.எல்.ஏ... வீடு முழுக்க காஸ்ட்லீயான கார்கள்! 18 வயசு எப்போ ஆகும்னு காத்துக்கிட்டு இருந்தார் போல!!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய கார்கள் மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். சுமார் 53 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், செல்வந்தர்கள் பலரும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை போட்டி போட்டு புக் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்கள் உலகளவில் பிரபலமானவை என்பதால், அத்தகைய காரின் ஜிடிஐ வெர்சன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் புக்கிங் குவிய ஆரம்பித்தது.
இதற்கிடையில், கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்தவர்களுக்கு காரை டெலிவிரி கொடுக்கும் பணிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் துவங்கியது. பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் கோல்ஃப் ஜிடிஐ காரை மகிழ்ச்சி உடன் டெலிவிரி பெற்று வருகின்றனர். ஆனால், இதுவரையில் நாம் பார்க்காத வகையில் இளம் பெண் ஒருவர் பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ காரை சொந்தமாக்கி உள்ளார்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் பெண்ணுக்கு அவரது தந்தை புத்தம் புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் எப்படியிருந்தாலும், எங்களுக்கு தெரிந்தவரையில் இவர்தான் இந்தியாவிலேயே ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்ற முதல் பெண்மணி ஆவார்.
இளம் பெண்ணுக்கு இவ்வளவு விலையுயர்ந்த & பவர்ஃபுல்லான கார் பரிசா? என உங்களில் சிலருக்கு ஆச்சிரியமாக இருக்கலாம். ஆனால், இந்த பெண்ணை பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இது ஆச்சிரியமாக இருக்காது. தற்போது புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை பெற்றிருக்கும் இந்த இளம் பெண்ணின் பெயர், மியா ஜோசப் சிராக்கேகரன் (Mia Joseph Chirakkekaran) ஆகும்.
ஜோசப் சிராக்கேகரன் என்பது அவரது தந்தையின் பெயர் ஆகும். அவர் ஒரு எம்.எல்.ஏ (MLA) என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அரசியல் செல்வாக்கு உள்ளவரின் மகளான மியாவை அவரது பெயரில் தெரிந்ததை காட்டிலும், 'ஆக்டேன் கேர்ள்' (Octane Girl) என்கிற பெயரில்தான் பலருக்கு தெரியும். ஏனெனில், ஆக்டேன் கேர்ள் என்கிற பெயரை தான் மியா தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.
மற்ற இளம் பெண்களை போல் இல்லாமல், மியாவுக்கு சிறு வயதில் இருந்தே கார் & பைக்குகள் என்றாலே தனி ஆர்வம் ஆகும். தனது தந்தையிடம் உள்ள விலையுயர்ந்த கார்களில் தங்கை உடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை (Reels Videos) எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை மியா வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சில பதிவுகளில் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் மற்றும் ஹெலிகாப்டர் (Helicopter) உடனும் மியா காட்சித்தருவதை பார்க்க முடிகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டேன் கேர்ள் பக்கத்தை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர் எனும்போது, மியா எந்த அளவிற்கு பிரபலமானவராக உள்ளார் என்பதை அறியலாம். தற்போது, புதியதாக கோல்ஃப் ஜிடிஐ காரை தந்தை உடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்று இருப்பதையும் மியா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் பெண்ணாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை பெற்றிருக்கும் மியாவுக்கு இதுதான் முதல் காரா? என கேட்டால், அதுதான் இல்லை. இவரது 18ஆம் வயது பிறந்த நாளின் போதே மகள் ஓட்டுனர் உரிமத்தை பெறும் வயதை எட்டிவிட்டால் என்பதை உணர்ந்து அவரது தந்தை புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ (Polo GTI) காரை வாங்கி கொடுத்திருந்தார். அந்த போலோ ஜிடிஐ காரில் தான் மியா, அவரது தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரும் தற்போது கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற ஷோரூமுக்கு வந்தனர்.


Click it and Unblock the Notifications









