21 வயதில் சிஇஓ... 40 நாடுகளில் சொந்த நிறுவனம்! இந்தியாவின் மகிழ்ச்சியான மனிதர் வாங்கிய புதிய கார்!!

வெறும் 21 வயதில் சிஇஓ-ஆனவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கேரளாவில் ஒருவர் அவ்வளவு சிறிய வயதில் ஒரு நிறுவனத்துக்கு சிஇஓ ஆனது மட்டுமின்றி, அந்த நிறுவனத்தை 40க்கும் அதிகமான நாடுகளில் கால்பதிக்க வைத்துள்ளார். இவரது வருடாந்திர வருவாய் ஆனது ரூ.25 கோடி என கூறப்படுகிறது. இளம் வயதிலேயே மிக பெரிய பொறுப்பை ஏற்ற அவர், புதியதாக ஒரு பி.எம்.டபிள்யூ எலக்ட்ரிக் கார் (BMW Electric Car)-ஐ வாங்கியுள்ளார். யார் அந்த இளம் தொழிலதிபர் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

கேரளாவின் கோட்டயம் (Kottayam) பகுதியை சேர்ந்தவர் அபின் ஜோஸ் டாம் (Abin Jose Tom). பெரும்பாலான இளைஞர்களை போலவே இவரும் ஆரம்ப காலக்கட்டத்தில் பல ஐடி கம்பெனிகளால் வேலையில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டார். அதற்கு முக்கிய காரணம், அபின் ஜோஸ் டாம் தனது இளங்கலை பொறியியல் (Engineering) படிப்பை நிறைவு செய்யவில்லை.

abin jose buys bmw i7

ஆனால், அதற்கெல்லாம் மனம் தளராத அபின் ஜோஸ், தன்னுடைய 21வது வயதில் 'வெப் & கிராஃப்ட்ஸ்' (Web And Crafts) எனும் பெயரில் ஐடி கம்பெனி (IT Company) ஒன்றை ஆரம்பித்தார். கேரளாவின் திரிச்சூரில் உள்ள ஐடி பூங்காவில் இவரது நிறுவனம் தற்சமயம் செயல்பட்டு வருகிறது. 2012இல் அபின் ஜோஸ் டாம் துவங்கிய கம்பெனியில் அந்த சமயத்தில் வெறும் 4 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

ஆனால் இன்றோ, 40 வெளிநாடுகளில் இவரது கம்பெனியின் கிளைகள் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், அவற்றின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ரூ.25 கோடி வருவாய் அபின் ஜோஸுக்கு கிடைக்கிறது. இத்தகையவர் தற்போது புதியதாக வாங்கியிருக்கும் கார், பிஎம்டபிள்யூ ஐ7 (i7) என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் செடான் (Sedan) கார் ஆகும்.

abin jose buys bmw i7

மனைவி மற்றும் குழந்தைகள் உடன் வந்து அபின் ஜோஸ் டாம் தனது புதிய பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அபின் ஜோஸ் வாங்கியிருப்பது, பளபளக்கும் கருப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ ஐ7 கார் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ7 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த லக்சரி எலக்ட்ரிக் கார் கடந்த 2023 ஜனவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 2023 அக்டோபர் மாதத்தில் எம்70 எக்ஸ் டிரைவ் (M70 xDrive) என்கிற புதிய வேரியண்ட் ஐ7 காரில் சேர்க்கப்பட்டது. ஆக மொத்தத்தில் தற்சமயம், இ டிரைவ்50 எம் ஸ்போர்ட், எக்ஸ் டிரைவ்60 எம் ஸ்போர்ட் மற்றும் எம்70 எக்ஸ் டிரைவ் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

abin jose buys bmw i7

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.03 கோடி, ரூ.2.13 கோடி மற்றும் ரூ.2.50 கோடியாக உள்ளன. இதில் எந்த வேரியண்ட்டை தொழிலதிபர் அபின் ஜோஸ் டாம் வாங்கினார் என்பது தெரியவில்லை. இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரில் 101.7kWh பேட்டரி பேக் (Battery Pack) வழங்கப்படுகிறது. காருக்கு உள்ளே, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (7-Series) காரில் வழங்கப்படும் நிறைய அம்சங்கள் இந்த எலக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டவை பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.3 கோடி அளவில் வந்துவிடும். இருப்பினும், இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்திற்கு சிஇஓ ஆனது மட்டுமில்லாமல், கடந்த 12 வருடங்களில் அந்த நிறுவனத்தை 40 நாடுகளுக்கு கொண்டு சென்றவருக்கு ரூ.3 கோடியில் கார் ஒன்றை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 24, 2024, 23:59 [IST]
English summary
Yound indian ceo abin jose tom buys bmw i7 electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X