தொழிலில் ஜெட் வேகத்தில் வளர்ந்துவரும் இளம் தொழிலதிபர்! புதுசா வாங்கிய லம்போர்கினி கார் தான் அதற்கு சாட்சி!
லம்போர்கினி (Lamborghini) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். உலகளவில் பல லம்போர்கினி கார் பிரியர்கள் பரவலாக நிறைய இடங்களில் உள்ளனர். ஆனால், நம் நாட்டில் லம்போர்கினி கார்களை மிகவும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் மிகவும் இளம் வயதில் தொழிலதிபர் ஒருவர் லம்போர்கினி ரெவால்டோ (Lamborghini Revuelto) காரை வாங்கியுள்ளார். யார் இந்த இளம் இந்திய தொழிலதிபர் என்பதையும், இவர் வாங்கியுள்ள லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். அபிஷேக் அகர்வால் (Abhishek Agarwal) இந்த பெயரை சமீப காலமாக நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
'பர்பிள் ஸ்டைல் லேப்ஸ்' (Purple Style Labs) என்கிற பெயரில் இந்தியாவின் மிக பெரும் ஃபேஷன் நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் அதிக வருவாயை பெற்று வருபவராக இளம் தொழிலதிபர் அபிஷேக் அகர்வால் விளங்குகிறார். எந்த அளவிற்கு அதிக வருவாய் என்பதை சமீப காலமாக இவர் அடுத்தடுத்து வாங்கி வரும் விலையுயர்ந்த சொகுசு கார்களை பார்த்தாலே தெரிகிறது.

மும்பை ஐஐடி (Mumbai IIT)-இன் முன்னாள் முதுகலை வானூர்தி பொறியியல் மாணவரான அபிஷேக் அகர்வால், கடந்த 2023ஆம் ஆண்டில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 (Mercedes-Maybach S680) காரை வாங்கினார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே ஆகும். இவ்வளவு இளம் வயதில் மெர்சிடிஸ்-மேபக் கார் ஒன்றை சொந்தமாக வாங்கியவர், அபிஷேக் அகர்வால் ஆவார்.
இவரது மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரில் 6 லிட்டர் வி12 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலதிபரின் மேபக் காரில் மெர்சிடிஸ் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கும் 4மேட்டிக் டெக்னாலஜியும் உள்ளது. இந்த அளவிற்கு செயல்திறன்மிக்க மேபக் காரை வாங்கி கவனத்தை ஈர்த்த அபிஷேக் அகர்வால், தற்போது லம்போர்கினி காரை வாங்கி மீண்டும் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தொழிலதிபர் அபிஷேக் அகர்வால் மும்பையில் உள்ள லம்போர்கினி ஷோரூமில் தற்போது வாங்கி இருப்பது முற்றிலும் கருப்பு நிறத்திலான லம்போர்கினி ரெவால்டோ கார் ஆகும். இந்த கருப்பு நிறத்தை 'நீரோ நெமேசிஸ்' (Nero Nemesis) என லம்போர்கினி நிறுவனம் அழைக்கிறது. ரெவால்டோ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், லம்போர்கினி நிறுவனம் கடந்த 2023 மார்ச் மாதத்தில் உலகளவில் இந்த சூப்பர் காரை வெளியீடு செய்தது.
அதனை தொடர்ந்து இந்திய சந்தையில் ரெவால்டோ கார் 2023 டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்பு விற்பனையில் இருந்த லம்போர்கினி அவெண்டேடார் (Aventador) காருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ரெவால்டோ கார் ஆனது லம்போர்கினியின் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.
அதாவது, ரெவால்டோ காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் உடன் 3.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை கொண்ட மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. லம்போர்கினி இதுவரையில் உருவாக்கியதிலேயே எடை குறைவான, அதேநேரம் பவர்ஃபுல்லான என்ஜினான 6.5 லிட்டர் வி12 என்ஜினில் இருந்து மட்டும் அதிகப்பட்சமாக 825 பிஎஸ் மற்றும் 725 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற லம்போர்கினி கார்களை போன்று ரெவால்டோ கார்களும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இன்னும் சொல்லப்போனால், 2026ஆம் ஆண்டு வரையிலான லம்போர்கினி ரெவால்டோ கார்கள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. அவ்வாறு இந்தியாவில் ரெவால்டோ காரை புக் செய்த கஸ்டமர்களுள் இளம் தொழிலதிபர் அபிஷேக் அகர்வாலும் ஒருவர் என்பது தற்போது அவர் காரை டெலிவிரி பெற்றதில் இருந்து அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









