அப்புறம் என்ன... வெளிநாட்டு பெண்களே புகழ்ந்து தள்ளிட்டாங்க! மஹிந்திராவின் இந்த கார் கண்டிப்பா ஹிட்டு தான்!!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். எலக்ட்ரிக் கார் (Electric Car)-களை வடிவமைப்பதில் சமீப காலமாக தீவிரம் காட்டிவரும் மஹிந்திராவுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் நெட்வொர்க் உள்ளது. மஹிந்திராவின் லேட்டஸ்ட் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் வெளிநாட்டு கஸ்டமர்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு இத்தாலி (Italy) நாட்டை சேர்ந்த பெண்கள் இருவர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் எலக்ட்ரிக் காரை பார்த்து இத்தாலிய பெண்கள் அப்படி என்ன கூறினார்கள்? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த மல்டி-நேஷ்னல் நிறுவனங்களுள் மஹிந்திராவும் ஒன்று. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் மஹிந்திரா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் மஹிந்திராவின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், ஐரோப்பாவில் மஹிந்திராவின் நெட்வொர்க் இல்லை. இருப்பினும், தற்போது மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு தங்களது கருத்துகளை யூடியூப் (Youtube)-இல் தெரிவித்து இருப்பது, ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த இளம்பெண்கள் ஆகும். மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. காரின் துவக்க விலை மட்டும் தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காரின் விரிவான விலை விபரங்கள் விரைவில் நடைபெறவிருக்கும் பாரத் மொபைலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்பட உள்ளன. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இந்த எலக்ட்ரிக் காரின் பெயர் 'பிஇ 6இ' என சூட்டப்பட்டது. ஆனால், பிரபல ஏர்லைன் நிறுவனமான இண்டிகோ (Indigo)-இன் தலையீடால் காரின் பெயர் 'பிஇ 6' என மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த இத்தாலிய பெண்கள் காரின் பெயரை பிஇ 6இ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

கிராஸ் கல்ச்சுரல் (Cross Cultural) என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் இந்த இரு பெண்கள், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை மிகவும் விரும்புவதாகவும், ஒருநாள் இதை ஓட்டி பார்க்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மஹிந்திராவில் இருந்து எதிர்காலத்திற்கான காரை பார்க்க போகிறோம் என இந்த பெண்கள் கூறுவதில் இருந்து துவங்கும் வீடியோவில், பிஇ 6 எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை வேறு வீடியோவில் பார்த்து இவர்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.
காரின் வெளிப்பக்க தோற்றத்தை பார்த்ததும் இவர்கள் மிகவும் ஆச்சிரியப்படுவதை பார்க்க முடிகிறது. அதன்பின், காரின் உட்புறத்தை பார்த்ததும் இன்னும் அதிகமாக ஷாக் ஆகினர் என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் ஒரே மாதிரியாக, காரின் டேஸ்போர்டு ஆனது ஜெட் விமானத்தின் காக்பிட் (Cockpit)-ஐ போல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை டெஸ்லா (Tesla)-இன் சைபர்டிரக் (Cybertruck) உடன் இவர்கள் ஒப்பீடு செய்துவதையும் வீடியோவில் கேட்க முடிகிறது.

வீடியோவில் பிஇ 6 எலக்ட்ரிக் கார் டிரிஃப்ட் (Drift) செய்யப்படுவதை பார்த்ததும், இது ஃபார்முலா 1 (Formula 1) டிரைவர்கள் மைக்கேல் ஷூமேக்கர் (Michael Schumacher) மற்றும் சார்லஸ் லெக்லெர்க் (Charles Leclerc) ஆகியோருக்கு ஏற்ற கார் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.18.9 லட்சம் விலையை இத்தாலியன் பண மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தவர்கள், காரின் குறைந்த விலையை அறிந்து மிகவும் ஆச்சிரியப்பட்டு, பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஒன்றை இப்போதே வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மஹிந்திரா கார்கள் வெளிநாட்டினரை கவர்வது ஒன்றும் இது புதியது இல்லை. மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்களுக்கு எதிர்காலத்தில் உலகளவில் வரவேற்பு கிடைப்பதற்கு இத்தாலிய பெண்களின் இந்த வீடியோ தான் உதாரணமாகும். ரூ.18.9 லட்சம் என்பது இந்தியாவில் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் விலை ஆகும். ஒருவேளை, இத்தாலி நாட்டில் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டால், அங்கு காரின் விலை இதே அளவிற்கு தான் நிர்ணயிக்கப்படும் என கூற இயலாது.


Click it and Unblock the Notifications









