வயசு வெறும் 21 தான் ஆகுது... பிக்பாஸ் வீட்டிற்குள் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் புதுசா பிஎம்டபிள்யூ கார்!!

சினிமாவை பொறுத்தவரையில் யார் எப்போது பிரபலமாகுவார்கள் என்றே சொல்ல முடியாது. சிலர் 40, 50 வயதுக்கு பிறகு அதிக ரசிகர்களை கவர்வர். சிலரோ குழந்தை பருவத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் அளவிற்கு கவனிக்கத்தக்க நடிகராகிவிடுவர். ஆக, சினிமாவில் நிச்சயமாக உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடிவரும். ஆனால், அதனை எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறோம் என்பதில்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளது.

நம் தமிழ் சினிமாவில் புது, புது நடிகர்கள் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் எதிர்காலத்தில் தாக்குப்பிடித்து இருப்பர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவ்வாறு, கர்நாடகாவில் சாண்டல்வுட்டில் பிரபலமாகிவரும் இளம் நடிகர் ரக்‌ஷக் புல்லட். நம்ம ஊர் டிடிஎஃப் வாசனை போல் சமூக வலைத்தளங்களில் நிறைய கேலி, கிண்டல்களுக்கு உள்ளானவர், ரக்‌ஷக் புல்லட்.

young actor buys bmw car

ஆனால், மற்றவர்கள் எறிந்த அந்த கற்களை பயன்படுத்தியே இவர் படிக்கட்டு உருவாக்கி மேலே, மேலே என வளர்ந்து வருகிறார். ரக்‌ஷக் புல்லட் இப்போதுவரையில் நடித்து திரைக்கு வந்தது குரு சிஷ்யாரு என்ற ஒரேயொரு கன்னட படம் மட்டுமே. ஆனால், அதற்குள் கர்நாடகா மாநிலத்தில் இளைஞர்கள் பலருக்கு பரீட்சையமான முகமாக இவர் மாறியுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், பிரபல பிக்பாஸ் போட்டியில் ரக்‌ஷக் புல்லட் கலந்துக் கொண்டதுதான். அதன்பின்பே, சமூக வலைத்தளங்களில் அதிகமாக கேலி, கிண்டல்களுக்கு இவர் உள்ளானர். இதன்மூலம் அடைந்த பிரபலத்தில் எத்தனை புதிய திரைப்படங்களில் நடிப்பதற்காக ரக்‌ஷக் புல்லட் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால், ரக்‌ஷக் தனது அடுத்த வளர்ச்சியாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

young actor buys bmw car

ரக்‌ஷக் புல்லட் தங்கியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் அவரது புதிய பிஎம்டபிள்யூ கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் வாயிலாக தெரிவித்துள்ளார். இவருக்கு கார் பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து நேரடியாக வீட்டிற்கு ஹோம் டெலிவிரி செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. காருடன் ரக்‌ஷக் புல்லட் நிற்கும் படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ரக்‌ஷக் புல்லட்டின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பார்த்த பலரும் இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை எப்படியிருந்தாலும் ரூ.40 லட்சம் என்ற அளவில் இருக்கும் என கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் உண்மையில், இந்த காரின் விலை ரூ.2.60 கோடி என கூறப்படுகிறது. மற்றப்படி, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எந்த மாடல் கார் இது என்பதை அறிய முடியவில்லை.

young actor buys bmw car

நடிகர் ரக்‌ஷக் புல்லட் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூவின் லக்சரி செடான் ரக கார் போன்று உள்ளது. கருப்பு நிறத்தில் ரக்‌ஷக்கின் அப்பார்ட்மெண்ட்டின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த பிஎம்டபிள்யூ காரின் தோற்றம் பளபளப்பாக இருந்தாலும், காரின் முன்பக்கம் அப்டேட்டாக இல்லை. அதாவது, சில வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் போன்று இது உள்ளது.

அல்லது, செகண்ட்-ஹேண்டில் இந்த பிஎம்டபிள்யூ காரை ரக்‌ஷக் புல்லட் வாங்கி உள்ளாரா? என்பது தெரியவில்லை. முன்னதாக கடந்த ஆண்டில் ரக்‌ஷக் புல்லட் அவரது சகோதரியின் திருமணத்தை முன்னிட்டு மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, புதிய 2024ஆம் ஆண்டின் 2 மாதங்களுக்கு உள்ளாகவே புதியதாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரக்‌ஷக் புல்லட்க்கு வயது 21 மட்டும் ஆகிறது. அதற்குள்ளாக பிஎம்டபிள்யூ காரை வாங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இதன் காரணமாகவே, உண்மையில் இந்த காரை ரக்‌ஷக் புல்லட் தான் வாங்கினாரா அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது வாங்கினார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 19:31 [IST]
English summary
Young kannada actor buys new bmw car in black colour check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X