ஹை-ஸ்பீடில் பறந்த ஃபோர்டு கார்... கொஞ்சம் தவறினாலும் எமனை பார்க்க வேண்டியதுதான்! இன்னும் புத்தாண்டே துவங்கல!!

இந்தியாவில் சாலையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் கடினமாகி கொண்டே போகிறது. அதாவது, நீங்கள் சரியாக வாகனம் ஓட்டிச் சென்றாலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு சாலையில் சாகசங்களில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, இணையத்தளங்களின் மோகம் அதிகரித்த பிறகு அவ்வாறான சாகசங்களில் ஈடுப்படுவோரை அதிகமாக பார்க்க முடிகிறது. அவ்வாறு, காரில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞரை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஃபோர்டு எண்டேவியர் (Ford Endeavour) ஆனது ஓட்டுவதற்கும் சரி, பயணம் செய்வதற்கும் சரி மிகவும் ஏற்ற கார் ஆகும். 7 இருக்கைகளை கொண்ட இந்த காரில் கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களையும் தைரியமாக மேற்கொள்ள முடிகிறது. ஆனால், 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஃபோர்டு வெளியேற முடிவு செய்த பின், எண்டேவியர் கார்களின் விற்பனையும் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

man dangerous stunt in car

இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு நுழைய உள்ளதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளிவந்துக் கொண்டிருந்தாலும், அதுகுறித்து உறுதியாக தகவல்கள் எதுவும் இல்லை. ஃபோர்டு திரும்ப வரவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் எண்டேவியர் காரை மட்டும் ஆவது மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரலாம். ஏனெனில் அந்த அளவிற்கு, ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில் அதிகளவில் விற்பனையான ஒரேயொரு ஃபோர்டு காராக எண்டேவியர் விளங்கியது.

இத்தகைய அற்புதமான காரில் தான் இங்கு சிலர் ஆபத்தான ஸ்டண்ட் (Stunt) வேலைகளை செய்துள்ளனர். அதாவது, எண்டேவியர் காரை ஒருவர் ஓட்ட, டிரைவருக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர், கதவை திறந்து வெளியே தொங்கியப்படி பயணம் செய்துள்ளார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அந்த நபர் காரில் ஃபுட்போர்டு (Footboard) அடித்துள்ளார்.

man dangerous stunt in car

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் இரவில் நடந்துள்ளது. இது இன்னும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், இரவு நேரத்தில் சாலை பார்வை எவரொருவருக்கும் கொஞ்சம் மங்கலாகவே தெரியும். இருப்பினும், எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி காரின் கதவை திறந்துக் கொண்டு தொங்கியப்படி பயணம் செய்த இளைஞர், காருக்குள் ஒலித்த பாடலுக்கு நடனமாட முயற்சிப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.

இதற்காக, காருக்குள் A-பில்லரில் பொருத்தப்பட்டு இருந்த கைப்பிடியை இந்த நபர் பயன்படுத்தி உள்ளார். இந்த கைப்பிடி ஆனது காருக்குள் ஏறவும், இறங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டு, காருக்கு வெளியே வழங்கப்படும் படிக்கட்டில் நின்றப்படி இந்த இளைஞர் மிகவும் ஆபத்தாக பயணம் செய்துள்ளார்.

man dangerous stunt in car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது முற்றிலும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், கொஞ்சம் தவறினால் கூட கற்பனை செய்து முடியாத அளவுக்கு சேதாரங்கள் ஏற்படக்கூடும். இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான், சமூக வலைத்தளங்களில் எப்படியாவது லைக்குகளை பெற வேண்டும் என்பதாகும். இந்த சம்பவம் புத்தாண்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன் நடந்தது ஆகும். அப்போதே அப்படியென்றால், புத்தாண்டு இரவில் என்னென்ன எல்லாம் நடக்க போகிறதோ...

More from DriveSpark

Article Published On: Tuesday, December 31, 2024, 23:45 [IST]
English summary
Young man dangerous stunt in ford endeavour car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X