நடிச்சது 4 படமா இருந்தாலும், பென்ஸ் காருக்கு ஓனர்! இளம் பாடகி தனது வாழ்வில் வாங்கிய முதல் கார்!
பென்ஸ் கார் (Benz Car) ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு பென்ஸ் கார்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. இதனாலேயே, சினிமாவில் (Cinema) பிரபலமாகுபவர்கள் கூட முதலவாதாக வாங்குவது பென்ஸ் கார்களை தான் என்பதற்கு இணங்க, தற்போது இளம் பாடகி (Singer) ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கி உள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை, பாட்டு பாடும் டிவி (TV) நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து, பின்னர் சமையல் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலமாக கவனத்தை ஈர்த்த இளம் பாடகி சிவாங்கி (Sivaangi) ஆவார். நடிகர் சிவகார்த்திகேயனின் டான் (Don) திரைப்படம் உள்பட சில திரைப்படங்களிலும் சிவாங்கி நடித்துள்ளார்.

பின்னி கிருஷ்ணகுமார் (Binni Krishnakumar) என்கிற பிரபலமான மலையாள பாடகியின் மகளான சிவாங்கி, தாய் வழியை பின்பற்றி இளம் வயதில் இருந்தே ராகங்களை கற்று பாடகியாக வளர ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி, சிவாங்கியின் தந்தையும் பாடகர் ஆவார். இவ்வாறு, பாடகர் குடும்பத்தில் இருந்து வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தனது நகைச்சுவையான நடிப்பு மக்களால் பாராட்டப்படுகிறது என்பதை உணர்ந்து நடிப்பிலும் சிவாங்கி கவனம் செலுத்தி வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்துவரும் சிவாங்கி, சமீபத்தில் கடந்த மே மாதத்தில் திரைக்குவந்த 'லவ்லி' என்கிற தமிழ்-மலையாள அனிமேட்டட் திரைப்படத்தில் முக்கியமான அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்றிற்கு குரல் கொடுத்து இருந்தார். இதற்கிடையில் டிவி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கிவரும் பாடகி சிவாங்கி தனது முதல் காரை வாங்கி உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை எல்லாம் நிஜமாக்க முடியுமா என 15 வயதில் நினைத்த சிவாங்கி தற்போது அதனை நிஜமாக்கி சந்தோஷமாக இருப்பதாகவும், இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி எனவும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். தாய், தந்தை மற்றும் அண்ணன் உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ ஜி.எல்.இ (GLE) காரை சிவாங்கி டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார்.
சிவாங்கி வாங்கி இருக்கும் ஜி.எல்.இ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் லக்சரியான எஸ்யூவி (SUV) காராக விளங்குகிறது. 300டி ஏஎம்ஜி லைன், 450 4மேட்டிக் லாங்-வீல்பேஸ் மற்றும் 450டி 4மேட்டிக் லாங்-வீல்பேஸ் என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் ஜிஎல்இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.1.28 கோடியில் இருந்து ரூ.1.49 கோடி வரையில் தற்சமயம் உள்ளன.

2 லிட்டர் டீசல், 3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று விதமான என்ஜின் (Engine) ஆப்ஷன்களில் ஜி.எல்.இ கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்படுகிறது. மூன்றில் எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் காரை வாங்கினாலும் சரி, என்ஜின் உடன் டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) மட்டுமே இணைக்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதுவும் இல்ல
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேனுவல் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படாத பென்ஸ் கார்களுள், ஜிஎல்இ ஒன்றாகும். இத்தகைய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரை எந்த வேரியண்ட்டில், எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் பாடகி சிவாங்கி வாங்கி உள்ளார் என்பது தெரியவில்லை. வாழ்வில் முதல் காராகவே பென்ஸ் காரை வாங்குவது எல்லாம் வேற லெவல்.


Click it and Unblock the Notifications









