சேலையில் பைக் ஓட்ட கூடாதுனு யாருங்க சொன்னா? இந்த வீடியோவை பார்த்துவிட்டு அப்புறம் பேசுங்க!!

யமஹா எம்டி-15 (Yamaha MT-15) பைக்கை தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் சேலை அணிந்துக் கொண்டு பரபரப்பான சாலையில் ஓட்டி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். யார் இந்த பெண்? சேலையில் பைக் ஓட்டுவது ஏன் அவ்வளவு சிரமமானது என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இணைய மோகம் யாரை தான் விட்டது... சிறுவர்களில் இருந்து வயதான முதியவர்கள் வரையில் மக்கள் நிறைய பேர் மொபைல் போனுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது நம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

girl riding bike in saree

போட்டி அதிகமாகிவிட்டதால், முடிந்தவரையில் புதுமையான மற்றும் வித்தியாசமான கான்செப்ட்களில் வீடியோக்களை பதிவிட நெட்டிசன்கள் விரும்புகின்றனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்கள் தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள கட்டாயம் புதுமையான விஷயங்களை உள்ளடக்கிய வீடியோக்களை பதிவிட வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், சேலை அணிந்துக் கொண்டு பைக் ஓட்டுவது சமீப காலமாக டிரெண்ட்டிங்காக உள்ளது.

இதனால், பைக் ஓட்டிய அனுபவமிக்க இளம்பெண்கள் அவ்வப்போது சேலையில் பைக் ஓட்டும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இந்த வகையில், தெலுங்கானாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளம் நீல நிற சேலையில் யமஹா எம்டி-15 என்கிற ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை ஓட்டி இளைஞர்களை கிறங்கடித்துள்ளார்.

girl riding bike in saree

ஜெட்டி பைக் கேர்ள்ஸ் என்கிற இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோ, ஹெல்மெட் அணிந்தப்படி இவர் சிக்னலில் யமஹா எம்டி-15 பைக்கில் அமர்ந்திருப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. சேலை அணிந்தப்படி ஒரு பெண் பைக் ஓட்டுகிறார் என்றால் நிச்சயமாக எவரொருவரது கவனமும் அவர் மீதுதான் இருக்கும்.

அந்த வகையில், சேலை உடன் எம்டி-15 பைக்கில் சிக்னலில் நின்றிருக்கும் இந்த இளம்பெண்ணை சுற்றியிருக்கும் அனைவரும் ஆச்சிரியமாக பார்ப்பதை காணலாம். சிக்னலில் க்ரீன் சிக்னல் விழுந்ததும் இந்த பெண் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு செல்கிறார். ஒரு சில இடங்களில் இந்த பெண் ஒரு கை விட்டு ஓட்டுவதையும் வீடியோவில் காணலாம்.

girl riding bike in saree

இந்த பெண்ணின் பைக்கிற்கு அருகே வேறொரு பைக்கில் சென்றவர்கள் இந்த வீடியோவை காட்சிப்படுத்தி உள்ளனர். வீடியோவை காட்சிப்படுத்தியவர்களும் இந்த பெண்ணிற்கு தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். மே 5ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரையில் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3.5 இலட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

சேலையில் பைக் ஓட்டுவது முடியாது என சொல்வதை காட்டிலும், கூடாது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், சேலை எத்தகைய ஆடை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். பைக் ஓட்டும்போது, காற்றில் பறக்கும் சேலை பைக்கின் செயினில் அல்லது என்ஜினின் வேறு எதாவது ஒரு பாகத்தில் சிக்கனால் பெரிய பிரச்சனையாகி விடும். பைக்கின் சக்கரங்களில் சிக்க நேர்ந்தால், உயிரிழப்பு கூட ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சேலையில் பைக் ஓட்டியதற்காக போலீசார் ஒன்றும் அபராதம் விதிக்க போவதில்லை. மோட்டார் வாகன சட்டத்தில் சேலையில் பைக் ரைடிங்கிற்கு எந்த இடத்திலும் தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இது ஒரு எழுதப்படாத விதி போன்றதே. பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் சேலை (அ) வேஷ்டி சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்துகளை பார்த்துள்ளோம். அப்படியிருக்கையில், சேலை அணிந்துக் கொண்டு பைக் ஓட்டுவது இன்னும் ஆபத்தானது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 17:52 [IST]
English summary
Young telangana woman riding yamaha mt 15 bike in saree internet stunned
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X