டாட்ஸ் லிட்டில் பிரின்சஸா இருப்பாங்க போல!! நடுரோட்டில் இப்படியா நடந்துகிறது? ஆதாரத்துக்கு இந்த வீடியோ இருக்கு!

ஹைதராபாத்தில் இளம்பெண் ஒருவர் விலையுயர்ந்த ஜாகுவார் (Jaguar) காரை சாலையின் நோ-எண்ட்ரீ திசையில் ஓட்டி உள்ளார். அத்துடன், இதுதொடர்பாக கேள்விக் கேட்ட போலீசாரின் மொபைல் போனையும் அந்த பெண் உடைத்து நொறுக்கி உள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.

சாலை விதிமீறல்கள் நம் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது. இதனாலேயே சாலை விபத்துகள் குறித்த செய்திகளை தினந்தோறும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பார்க்க முடிகிறது. சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் சாலை விதிமீறல்கள் பெரியதாக குறைந்தது போல் தெரியவில்லை.

woman drives on wrong side

இதற்கு முக்கிய காரணம், சாலையில் வாகன ஓட்டிகள் சவுகரியத்தை தேடுவதுதான். அவ்வாறான ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24, சனிக்கிழமை அன்று இரவு 9.50 மணியளவில் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு விலையுயர்ந்த ஜாகுவார் கார் சாலையின் எதிர்திசையில் வந்துள்ளது. இதனை கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளனர்.

அந்த ஜாகுவார் காரை இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டியது மட்டுமின்றி, இதனை தட்டிக்கேட்ட போலீசார் ஒருவரின் மொபைல் போனையும் அந்த இளம்பெண் தரையில் போட்டு உடைத்துள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் கேமராவில் காட்சிப்படுத்தி உள்ளார்.

woman drives on wrong side

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அந்த சம்மந்தப்பட்ட இளம்பெண்ணின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீலதா ஆகும். இவர் கடந்த பிப்.24ஆம் தேதி சாலையில் தனது ஜாகுவார் லக்சரி காரில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென திரும்பி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த பெண் தனது ஜாகுவார் காரை திருப்பி உள்ளார். ஆனால், அந்த இடத்தில் யு-டர்னுக்கு அனுமதி கிடையாது என்பதால், வாகன சோதனை பணியில் அங்கு ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போலீஸார் காரை தடுத்தி நிறுத்தினர். நோ-எண்ட்ரீயில் நுழைந்ததற்காக அந்த இளம்பெண்ணுக்கு பெரியதாக எந்த அபாரதமும் போலீஸார் விதிக்கவில்லை என கூறப்படுகிறது.

woman drives on wrong side

மாறாக, அவரிடம் தாழ்மை உடன் நடந்துக் கொண்டது மட்டுமின்றி, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று வழியையும் போலீஸார் காட்டியுள்ளனர். ஆனால், அதனை எல்லாம் அந்த இளம்பெண் மதிக்கவே இல்லை. போலீஸாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட ஆரம்பித்தார். சாலையில் எதிர்திசையில் நின்றிருந்த இந்த பெண்ணின் ஜாகுவார் காரினால் சில நிமிடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரி ராகேஷ் ரெட்டி, "அரை மணிநேரமாக தன் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அந்த பெண் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். மேலும், காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, ஆட்சேபனைக்கு உரிய கருத்துகளையும் தெரிவித்தார்" என்றார். அத்துடன் நிற்காமல், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் மொபைல் போனையும் வேகமாக கீழே தட்டி உடைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பாக, இளம்பெண்கள் இவ்வாறு சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருவதுபோல் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் இதேபோன்றதான 2, 3 வீடியோக்களை இணையத்தில் பார்த்ததாக ஞாபகம். பெண் என்பதால் அவ்வளவு எளிதாக நம் மீது வழக்கு பதிந்துவிட மாட்டார்கள் என்கிற தைரியத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவ்வாறான செயல்கள் இதற்கு மேல் அடிக்கடி நிகழக் கூடாது என்றால் இந்த விஷயத்தில் போலீஸார் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 19:01 [IST]
English summary
Young woman drives jaguar luxury car on wrong side road in hyderabad
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X