சுப்ரீம் கோர்ட்டில் ரேஞ்ச் ரோவரில் சுற்றப் போகும் பெண் வழக்கறிஞர்! இன்ஸ்டாவில் 23 லட்சம் பேர் ஃபாலோ பண்றாங்க!

ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை பிடிக்காதவரக்ள் யார் தான் இருப்பார்கள்? குறிப்பாக, பெண்களுக்கு பிடித்தமான சொகுசு கார் என்றால் அது ரேஞ்ச் ரோவர் கார்கள் தான் என சொல்ல வேண்டும். லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் கார்கள் பல சினிமா நடிகளிடம் உள்ளன. நடிகைகள் என்று மட்டுமின்றி, அந்தந்த துறைகளில் சிறந்து விழங்கும் பெண்கள் பலரிடமும் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. அந்த வரிசையில், தற்போது ஒரு பெண் வழக்கறிஞர் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கம்பீரமான தோற்றத்தில், அளவில் பெரியதான எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு சமீப காலமாகவே கஸ்டமர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால்தான், ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்தின் கார்கள் பலரால் வாங்க விரும்பப்படும் அல்ட்ரா-லகசரி காராக உள்ளன. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் அளவிற்கு இல்லையென்றாலும், ரேஞ்ச் ரோவர் கார்களும் கம்பீரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை.

woman lawyer buys range rover

ரேஞ்ச் ரோவர் கார்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் விலைகளை கொண்டுள்ளன. சாலையில் மிதக்கும் மினி கப்பல் போன்று இருந்தாலும், இவற்றை கண்ட்ரோல் செய்வது நாம் நினைப்பதை விட எளியது. அதனால்தான், பெண்களால் கூட இவற்றை எளிதாகவும், அதிகமாகவும் பயன்படுத்த முடிகிறது. அந்த வகையில் தற்போது ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருக்கும் பெண், சனா ரயீஸ் கான் (Sana Raees Khan).

மும்பையில் பிறந்தவரான சனா ரயீஸ் கான், உச்ச நீதிமன்றம் (Supreme Court)-இல் பல சிக்கலான மற்றும் கடினமான உயர்மட்ட குற்றவியல் வழக்குகளை விசாரிக்கக்கூடிய வழங்கறிஞராக உள்ளார். அத்துடன், அவ்வப்போது பதிவுகளை போட்டு இன்ஸ்டாகிராம் (Instagram)-லும் பிரபலமானவராக உள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் சனா ரயீஸ் கானை சுமார் 23 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

woman lawyer buys range rover

இவ்வாறு, நிழல் வாழ்க்கை மற்றும் இணைய வாழ்க்கை என இரண்டிலும் பிரபலமானவராக விளங்கும் சனா ரயீஸ் கான் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று அதனை இவர் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Sport), ரேஞ்ச் ரோவர் வேலர் (Velar), ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் (Evoque) என 4 விதமான ரேஞ்ச் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், சுப்ரீம் கோர்ட் பெண் வழங்கறிஞர் சனா ரயீஸ் கான் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் வேலர் கார் ஆகும். வெள்ளை நிறத்திலான ரேஞ்ச் ரோவர் வேலர் காரை இவர் வாங்கியுள்ளார்.

woman lawyer buys range rover

இதனை 'ஃபுஜி வெள்ளை' (Fuji White) என லேண்ட் ரோவர் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், சாண்டோரினி பிளாக் மெட்டாலிக், வரேசைன் ப்ளூ மெட்டாலிக் மற்றும் சடார் கிரே மெட்டாலிக் என்கிற கலர் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இவை மூன்றும் கொஞ்சம் கருமை நிறத்திலான பெயிண்ட் கலர் ஆப்ஷன்கள் ஆகும். அதுவே, ஃபுஜி வெள்ளை மட்டும் பளிச்சிடும் வெண்மை நிறத்திலானது ஆகும்.

எச்.எஸ்.இ டைனாமிக் (HSE Dynamic) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் வேலர் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், வேறு வழியில்லாமல் இந்த வேரியண்ட்டை தான் வழக்கறிஞர் சனா ரயீஸ் கான் வாங்கியிருப்பார். ஆனால், இந்த வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கலாம்.

இதில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 250 பிஎஸ் மற்றும் 365 என்.எம் டார்க் திறன் வரையிலும், 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 430 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் கார்கள் வரிசையிலேயே சரியாக மத்தியில் அமைந்த கார் வேலர் ஆகும். அதாவது, இதனை காட்டிலும் விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார்களும் உள்ளன; விலை குறைந்த ரேஞ்ச் ரோவர் கார்களும் உள்ளன. இத்தகைய ரேஞ்ச் ரோவர் காரை தான் இந்த சுப்ரீம் கோர்ட் வழங்கறிஞர் வாங்கியுள்ளார். சனா ரயீஸ் கானின் கம்பீரத்துக்கு மிகவும் சரியான கார் இது என சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 17:33 [IST]
English summary
Young woman lawyer sana raees khan buys range rover velar luxury car
மேலும்... #celebrity car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X