பெங்களூர் பேச்சிலர் வாழ்க்கை எல்லாம் இப்படிதான் இருக்குமோ? ஸ்கூட்டர் பயணத்தின்போது கூட வேலை!!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மிக சீரியஸாக எடுத்து கொண்ட பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பயணத்தின் போது கூட லேப்டாபில் வேலை பார்த்தப்படி சென்றுள்ளார். வாங்க, இதுகுறித்து பெங்களூரில் இருந்து இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பவர்கள் முந்தைய காலங்களிலும் இருந்தனர். அவர்களின் தொழில் அவ்வாறானதாக இருந்தது. ஆனால், ஒரே கட்டடத்திற்குள் கணினியில் வேலை பார்த்தவர்களின் பணிகள் அலுவலகத்திலேயே முடிந்துவிடும். ஆனால், சமீபத்தில் உலகத்தையே திருப்பி போட்ட கொரோனா வைரஸ் பரவல் இவை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

young woman working while scooter ride

வொர்க் ஃப்ரம் ஹோம் என ஆங்கிலத்தில் கூறப்படும் வீட்டில் இருந்தே பணிப்புரியும் முறை பல்வேறு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே இடத்தில் கணினியில் வேலை பார்ப்பவர்கள் தான் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகையவர்களுக்கு மின்சாரம் மற்றும் ஒரு லேப்டாப் இருந்தால் போதும், எங்கு வேண்டுமாயின் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவர்.

குறிப்பாக இரயில், பேருந்து பயணங்களின் போது 'வொர்க் ஃப்ரம் ஹோம் காய்ஸ்' எனப்படும் இவர்களை பரவலாக பார்க்க முடியும். ஆனால் இவர்கள் இப்போது பேருந்து, இரயில்களை தாண்டி 2-வீலர் பயணத்தின் போதும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் பயணத்தின்போது, நேரத்தை வீணாக்காமல் லேப்டாப்பை நோண்டி கொண்டு சென்றுள்ளார்.

காலை 11 மணி, இடம்: கோரமங்களா, பெங்களூர் தெற்கு. இந்த காட்சியை அருகில் மற்றொரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவானது, "உச்சக்கட்ட பெங்களூர் தருணம். அலுவலகத்திற்கு போகும் வழியில் பெண் ஒருவர் ராபிடோ பைக் பயணத்தின்போது வேலை பார்த்து கொண்டிருக்கிறார்" என்ற கேப்ஷன் உடன் பதிவிடப்பட்டுள்ளது.

2-வீலரில் பின்னால் அமர்ந்து கொண்டு மொபைல் போன் பயன்படுத்துவதே கடினம். ஆனால் இந்த இளம்பெண் அவ்வளவு பெரிய லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். வேலை பளு இன்றைய கால இளம் தலைமுறையினர் தலையில் எந்த அளவிற்கு வலுவானதாக உள்ளது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை. இந்த இளம்பெண்ணின் கடமை உணர்ச்சியை பாராட்டினாலும், இது ஆபத்தானது.

லேப்டாப் கீழே விழுந்தால் பணம் இழப்பு; பேலன்ஸ் தவறி கீழே விழுந்தால் உயிரே இழப்பு. ஏனெனில், ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமருபவருக்கு பிடித்து கொள்ள ஒரு கம்பியை தவிர்த்து, வேறெந்த பாதுகாப்பும் கிடையாது. 2-வீலர்களில் சடர்ன் டர்ன் அடிக்க வேண்டி வரலாம். அதிலிலும், குறிப்பாக பெங்களூர் போக்குவரத்தை பற்றி சொல்லவே வேண்டாம். பாதுகாப்பாக செல்ல வேண்டுமென்றால், பயணம் இன்னும் தாமதமாகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெங்களூர் பேச்சிலர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தை பார்த்து உணர முடிகிறது. பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் மணிக்கணக்கில் பயணிக்கும்போது லேப்டாப்பை திறந்து வேலை பார்க்கலாம் என தோன்றுவதில் ஆச்சிரியமில்லை. ஆனால் இத்தகைய பயணங்கள் ஆபத்தானது என்பதை மறந்துவிட வேண்டாம். இதனால் உங்களுக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பிரச்சனை ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 14:17 [IST]
English summary
Young woman working on laptop while scooter ride
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+