30 வயதிலேயே கோடி ரூபாய் காருக்கு சொந்தக்காரர்! யூடியூப் சேனல் ஆரம்பித்தால் நல்லா காசு பார்க்கலாம் போல!!

இது சமூக வலைத்தளங்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஒரு காலத்தில் ரேடியோ, தொலைக்காட்சி இருந்ததை போல், தற்போது அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இதனால், சமூக வலைத்தள பக்கங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தாங்கள் பதிவிடும் பதிவுகள் மூலமாக பல ஆயிரக்கணக்கில் வருவாயை ஈட்டுக்கின்றனர். இதன் மூலமாக, புது, புது வாகனங்களை அத்தகையவர்கள் வாங்குவதை தொடர்ந்து நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், மற்றொரு இளம் யூடியூப்பர் ஒருவர் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொகுசு காரை புதியதாக வாங்கியுள்ளார்.

நிறைய பேர் சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரபலமாகி, அதன் மூலம் சினிமா பட வாய்ப்புகளை பெற்றுள்ளதை பார்த்திருப்பீர்கள். நமது தமிழ்நாட்டில் கூட கோபி-சுதாகர், ஜிபி முத்து உள்ளிட்டோரை உதாரணத்திற்கு சொல்லலாம். அதேநேரம், சினிமாவில் நடித்த சிலர் போதிய பட வாய்ப்பு கிடைக்காததாலும், வேறு சில காரணங்களினாலும் சமூக வலைத்தளங்களில் மட்டும் பதிவுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

youtuber buys land rover defender

அவ்வாறு, நகைச்சுவை நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை வைத்துக் கொண்டு தற்சமயம் யூடியூப் பிரபலமாக அறியப்படுபவர் புவன் பாம். டெல்லியை சேர்ந்தவரான இவர் சமீப காலமாக யூடியூப்பில் வேகமாக பிரபலமாகி வருகிறார். இவரது பிபி கி வைன்ஸ் என்கிற யூடியூப் சேனலை அறியாதவர்களே டெல்லியில் இல்லை என சொல்லலாம்.

இவ்வாறு, யூடியூப் மூலமாக புகழ் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் புவன் பாம் புதியதாக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். டெல்லியை சேர்ந்தவராக இருப்பினும், புவன் பாம் தற்சமயம் மும்பையில் தங்கியுள்ளார். மேற்கு மும்பையில் பாலி என்கிற பகுதியில் உள்ள ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு தனது புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் புவன் பாம் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், முழுவதும் வெள்ளை நிறத்திலான உடையை புவன் பாம் அணிந்திருக்க, அவரது புதிய டிஃபெண்டர் கார் அதற்கு நேர்மாறாக முழுவதும் கருப்பு நிறத்தில் பளபளக்கிறது. இந்த கருப்பு நிறத்தை 'சாண்டோரினி பிளாக்' என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அழைக்கிறது. டிஃபெண்டர் காரை மெஷினால் கட் செய்யப்பட்ட 10-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் புவன் பாம் வாங்கியுள்ளார்.

இந்த சக்கரங்களை பெற வேண்டுமெனில், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். மேலும், புவன் பாமின் டிஃபெண்டர் காரில் '0072' என்கிற பதிவெண்ணை கொண்ட விஐபி நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். அதாவது, இதற்காகவும் புவன் பாம் கூடுதலாக பணத்தை செலவு செய்திருப்பார். மும்பையில் காட்சி தந்துள்ள இந்த காரில் உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

youtuber buys land rover defender

இந்தியாவில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் 90, 110 மற்றும் 130 என 3 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 90, 110 மற்றும் 130 என்பன காரின் வீல்பேஸை குறிக்கின்றன. அதாவது, காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம். இதில் 110 வெர்சனை புவன் பாம் வாங்கியுள்ளார். டிஃபெண்டர் 110 கார் ஆனது SE, HSE, X, 75வது ஆண்டுநிறைவு எடிசன் மற்றும் கர்பாதியன் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், யூடியூப்பர் புவன் பாம் வாங்கியிருப்பது டிஃபெண்டர் 110 எச்.எஸ்.இ வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். புவன் பாம் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கியுள்ளார். இந்த வகையில், அவரது காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், யூடியூப்பர்கள் புது கார்களை வாங்குவது டிரெண்டாகி வருகிறது. நம்ம ஊர் யூடியூப்பர்கள் ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற பட்ஜெட் விலையிலான கார்களை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லி, மும்பை யூடியூப்பர்கள் ஒருபடி மேலே சென்று ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர், பென்ஸ் போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்கி வருகின்றனர். டெல்லி யூடியூப்பர் புவன் பாம் வாங்கியிருக்கும் டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ரூ.1.16 கோடி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 23:54 [IST]
English summary
Young youtuber bhuvan bam buys land rover defender check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+