Just In
- 1 hr ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 2 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 3 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போவே கட்டியிருந்த 200 ரூபாவோட முடிஞ்சிருக்கும்... தேவ இல்லாம 10,000 ரூபா தண்ட செலவு... ஆனா ஜெயிச்சுட்டாரு!
ரூ. 200 அபராதம் கட்ட முடியாது என கூறி ரூ. 10 ஆயிரம் செலவு செய்து இளம் தொழிலதிபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் பினய் கோபாலன். இவருக்கு மிக சமீபத்தில் பிம்பிரி-சின்ச்வாத் போக்குவரத்து காவலர்கள் ரூ. 200க்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இந்த செல்லாண் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை பார்க் செய்ததாகக் கூறி போலீஸார் அபராத செல்லாணை போலீஸார் வழங்கியிக்கின்றனர். அந்த நாளில் அபராத பினய் கோபாலன் மட்டுமின்றி இன்னும் சிலருக்கும் அபராத செல்லாணைப் போலீஸார் வழங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், அனைவரும் தாங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்திலேயே பார்க் செய்திருந்ததாகக் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே, தானும் உரிய இடத்தில் பார்க் செய்திருந்த காரணத்தினால் 200 ரூபாய்கான அபராதத்தைக் கட்ட முடியாது என பினய் கோபாலான் கூறியிருக்கின்றார்.

ஆனால், பினயின் வாக்குவாதத்தை ஏற்க மறுத்த போலீஸார் அபராதம் கட்டியே ஆக வேண்டும் என கூறியிருக்கின்றனர். இருப்பினும் விடா முயற்சியாக பல முறை காவல்நிலையங்களை அவர் நாடியிருக்கின்றார். இதனால் ரூ. 10 ஆயிரம் வரை அவருக்கு செலவாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆகையால், பினய் கோபாலனின் இந்த செயலைக் கண்டு புனே வாசிகள் பலர் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர். ரூ. 10 ஆயிரம் செலவு செய்ததற்கு பதிலாக 200 ரூபாயை போலீஸார்களிடத்தில் செலுத்தியிருக்கலாம் என கருத்தும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், பினய் கோபாலோ, தான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை நிரூபிப்பதற்காகவே இவ்வாறு ரூ.200 அபராத செல்லாணை ரத்து செய்ய போராடியிருக்கின்றார். இதற்காக காவல்துறை அதிகாரிகள் பலர் அவர் சென்று சந்தித்திருக்கின்றார். இருப்பினும், பலன் ஏதுமில்லை. மாறாக காவல்துறை அபராதத்தை உடனடியாக செலுத்துமாறு கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவிடுங்கள் என காவல்துறை அதிகாரிகள் சிலர் உதாசிணமாக கூறியிருக்கின்றனர். இதனால், மன வேதனை அடைந்தாலும் விடா முயற்சியுடன் பினய் தொடர்ச்சியாக காவல்நிலையங்களை நாடிய வண்ணம் இருந்திருக்கின்றார். இதன் விளைவாக போலீஸார் ஒருவர் அவரது அபராத செல்லாணை ரத்து செய்திருக்கின்றார்.

என்ன நடந்தது?
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்றைய தினம், அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் பகுதியிலேயே பினய் தனது வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷமிகள் யாரோ அங்கிருந்த நோ பார்க்கிங் பதாகையை இங்கு பார்க் செய்யலாம் என்பது போன்று மாற்றியமைத்திருக்கின்றனர். இதன் காரணத்திலேயே பினய் கோபாலன் உட்பட பலர் அங்கு தங்களது வாகனங்களைப் பார்க் செய்திருக்கின்றனர்.

இதன் விளைவாக அனைவரும் அபாரத செல்லாணை பெற்றனர். போலீஸாரிடத்தில் சமிக்ஞை போர்டு குறித்து கூறியும், தங்களால் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு கிடைத்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகின்றோம் என கூறிவிட்டு, அனைவரின் கையிலும் செல்லாணை திணித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே தான் ஓர் நிரபராதி என கூறி பல்வேறு காவல்நிலையங்கள் வாசல்களை கடந்த இரு மாதங்களாக பினய் ஏறி இறங்கியிருக்கின்றார். முன்னதாக, அபராத செல்லாணை கேன்சல் செய்தால் எங்களுக்கு சிக்கல் ஏற்படும் கூறி வந்த காவலர்கள், தற்போது நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் அந்த செல்லாணை ரத்து செய்திருக்கின்றனர்.

ஆகையால், தற்போது ரூ. 200 அபராதம் கட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2 மாதங்களாக அலைந்ததால் தனக்கு ரூ. 10 ஆயிரம் வரை செலவாகியிருப்பதாக புனே மிர்ரர் செய்தி தளத்திடம் பினய் கூறியிருக்கின்றார். செல்லாண் வழங்க காரணமாக இருந்த சமிக்ஞை பதாகை அகற்றப்பட்டு புதிய பதாகை நிலை நிறுத்த தற்போது உத்தரவிடப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.