யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷனை உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

ஃபோக்ஸ்வேகன் பீட்லி (Volkswagen Beetle) காரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வரலாற்று சிறப்புமிக்க ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷனை உருவாக்கியதன் மூலம் இணையத்தில் பிரபலமானவர் ராகேஷ் பாபு. வாகன மாடிஃபிகேஷன் பணிகளுக்கு பெயர் பெற்ற கேரள மாநிலத்தை சேர்ந்தவர்தான் இந்த ராகேஷ் பாபு.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

பழைய சுஸுகி சாமுராய் மோட்டார்சைக்கிளின் இன்ஜினை பயன்படுத்தி, ஃபோக்ஸ்வேகன் பீட்லி காரின் மினியேச்சர் வெர்ஷனை ராகேஷ் பாபு உருவாக்கினார். இந்த வரிசையில் புதிய பணி ஒன்றை கையில் எடுத்து, தற்போது அதனை நிறைவு செய்துள்ளார் ராகேஷ் பாபு. இம்முறை அவர் உருவாக்கியிருப்பது மிகவும் பிரபலமான யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன் ஆகும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

இதில், செயின்ஷா இன்ஜின் (Chainsaw Engine) பயன்படுத்தப்பட்டுள்ளது. Sudus Custom என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கால்வானிஸ்டு இரும்பு பைப்பை பயன்படுத்தி இந்த பைக்கிற்கான சேஸிஸை ராகேஷ் பாபு உருவாக்கியுள்ளார். அதே சமயம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகளை பயன்படுத்தி க்ராஷ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

இந்த மினி யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹேண்டில்பார், பழைய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் பக்க டர்ன் இன்டிகேட்டர்கள், எரிபொருள் டேங்க், சைடு பேனல் ஆகியவை ஸ்கிராட்ச்சில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் பழைய ஆர்எக்ஸ்100 பைக்கில் இருந்து இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் எடுக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

முன் மற்றும் பின் பக்க மட்கார்டுகள், சைக்கிள் ஒன்றில் இருந்து எடுத்து பொருத்தப்பட்டுள்ளன. மெட்டாலிக் ப்ளூ கலரில், இந்த மினியேச்சர் ஆர்எக்ஸ்100 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஆர்எக்ஸ்100 பைக்கின் முன் பகுதியில் சைக்கிள் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பின் பகுதியில் ட்ரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் இருந்து உருவாக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்புடன் இந்த மினியேச்சர் பைக்கின் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கில் இயங்கும் பின் பக்க சஸ்பென்ஸன்கள், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. உண்மையில் ராகேஷ் பாபு, இந்த மினியேச்சர் ஆர்எக்ஸ்100 பைக்கை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார்.

யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷன்... கேரள இளைஞரின் அட்டகாசமான தயாரிப்பு...

உண்மையான ஆர்எக்ஸ்100 பைக்கில் நாம் பார்க்கும் அத்தனை அம்சங்களும், இந்த மினியேச்சர் வெர்ஷனிலும் இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த மினியேச்சர் வெர்ஷனின் இருக்கைகள் கூட நமக்கு உண்மையான யமஹா ஆர்எக்ஸ்100 மோட்டார்சைக்கிளைதான் நினைவுபடுத்துகிறது.

யமஹா ஆர்எக்ஸ்100 ஒரு காலத்தில் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த மோட்டார்சைக்கிள் ஆகும். தற்போதும் கூட பயன்படுத்தப்பட்ட பைக் சந்தையில் யமஹா ஆர்எக்ஸ்100 கிடைக்கிறதா? என தேடுவோர் பலர் இருக்கின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஒரு பைக்கின் மினியேச்சர் வெர்ஷனை மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார் ராகேஷ் பாபு.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngster Builds A Miniature Yamaha RX100 Motorcycle From Scratch. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X