தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

பெற்றோர் பரிசாக வழங்கிய மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு குடும்பத்துடன் சென்று வர வேண்டுமென்றால், சொந்தமாக ஒரு கார் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பஸ்ஸிலும், ரயிலிலும் கூட்ட நெரிசலில் முண்டியத்து சென்று வர வேண்டியதாக இருக்கும்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

எனவே குடும்பத்திற்கு ஒரு கார் என்பது இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது. ஆனால் சொந்த கார் என்ற கனவை ஒரு சிலரால் மட்டுமே நிறைவேற்ற முடிகிறது. மற்றவர்களால் சொந்த கார் கனவை வாழ்நாள் முழுவதும் நிறைவேற்ற முடியாமலேயே போய் விடுகிறது. காரணம் கார்கள் சற்று விலை உயர்ந்தவை.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

உண்மையை சொல்வதென்றால் இன்று புதிய கார் வாங்குவது என்பது மிகவும் எளிதான விஷயமாக மாறி விட்டது. வட்டி சற்று அதிகம் என்றாலும், வங்கிகள் தற்போது கூவி கூவி கார் லோன் கொடுக்கின்றன. சுலப தவணை முறையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பிடித்தாற்போல் மிக அழகான புதிய காரை எளிதாக வாங்கலாம்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அத்துடன் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், தள்ளுபடி, சலுகை என கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து கொண்டுள்ளன. அப்படி இருந்தும் கூட புதிய கார் வாங்க முடியவில்லை என்றால், இருக்கவே இருக்கின்றன செகண்ட் ஹேண்ட் கார்கள்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

யூஸ்டு கார்களை வாங்குவது கொஞ்சம் ரிஸ்க் ஆன விஷயம்தான் என்றாலும், கை தேர்ந்த மெக்கானிக்கை உடன் வைத்து கொண்டு, சற்று அலசி ஆராய்ந்தால் மிகவும் குறைவான விலையில் அருமையான காரை கண்டுபிடித்து வாங்கி விட முடியும். இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் கூட கார் வாங்க முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா?

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அப்படி என்றால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாகதான் இருக்கும். எதற்கும் பிபி மாத்திரைகளை எடுத்து வைத்து கொள்ளுங்கள். மிக குறைவான விலையில் விற்பனையாகி வரும் மாருதி சுஸுகி காரை கூட வாங்க முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களுக்கும் இந்த செய்தியை அதிர்ச்சியை கொடுக்கலாம்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

குழந்தைகளை அதட்டி வளர்த்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. அவர்களுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கும் காலம் வந்து விட்டது. தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூட பெற்றோர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இதனை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அதன் விளைவுதான் நேற்று (ஆகஸ்ட் 9) ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம். இளைஞர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய ஹை எண்ட் பிஎம்டபிள்யூ காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால், அந்த காரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இப்படி ஒரு விபரீத சம்பவத்தை செய்த இளைஞர் ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்தவர். அவரது பெயர் என்ன? அவர் ஆற்றில் தள்ளி விட்ட பிஎம்டபிள்யூ கார் மாடல் எது? என்பது போன்ற கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

எனினும் முதற்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த புத்தம் புதிய ஹை எண்ட் பிஎம்டபிள்யூ காரை அந்த இளைஞரின் பெற்றோர் வெகு சமீபத்தில்தான் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால் அந்த இளைஞருக்கு பிஎம்டபிள்யூ கார் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அதற்கு பதில் எனக்கு ஜாகுவார் கார்தான் வேண்டும் என அந்த இளைஞர் தனது பெற்றோரிடம் அடம் பிடித்து வந்துள்ளார். எனினும் ஜாகுவார் காருக்கு பதிலாக அவரது பெற்றோர் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி விட்டனர். இந்த ஆத்திரத்தில்தான் புத்தம் புதிய கார் என்றும் கூட பார்க்காமல், அந்த இளைஞர் காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளியுள்ளார்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

முன்னதாக புற்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருந்ததால், ஆற்றின் நடுவே கார் சிக்கி கொண்டது. அதன்பின் அந்த இளைஞர் என்ன நினைத்தாரோ? தெரியவில்லை. உடனடியாக காரை மீண்டும் ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அங்கு இருந்த நன்கு நீச்சல் தெரிந்த சிலரையும் அவர் உதவிக்கு அழைத்து கொண்டார்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட இளைஞர் காரை ஆற்றில் தள்ளியபோது, வீடியோ எடுத்துள்ளார். அத்துடன் அதனை சமூக வலை தளங்களிலும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள இந்த தகவல்கள் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞரை நெட்டிசன்கள் கடுமையாக வசை பாடி வருகின்றனர். இதுபோன்ற நபர்களின் நடவடிக்கைகள் எத்தகையது? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngster Pushes New High-end BMW Car In River In Haryana : Here Is Why - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X