90ஸ் கிட்ஸ் தான் வந்தே பாரத் ரயிலை அதிகமா யூஸ் பண்ணுறாங்க! ரயில்வே வெளியிட்ட டிடெயில் ரிப்போர்ட்!

வந்தே பாரத் ரயிலில் 29 சதவீதம் இளைஞர்கள் தான் பயணிக்கிறார்கள் என தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்த ரயில்களின் பயணிக்க அதிகம் விரும்பி வருகின்றனர். இந்திய ரயில்வே நிர்வாகமும் பல முக்கியமான ரூட்களில் இந்த வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கூட தற்போது 4 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.

vande bharat express

இந்நிலையில் தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் வந்தே பாரத் ரயில் குறித்த ஒரு முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயிலை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? எந்த வயது கொண்ட மக்கள் இந்த ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள் என்ற தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயிலில் அதிகம் இளைஞர்கள் தான் பயணிக்க விரும்புகிறார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் வந்தே பாரத் ரயில் அதிகம் இளைஞர்கள் மற்றும் வேலை செய்யும் வகுப்பு மக்களால் அதிகம் விரும்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 56 சதவீத பயணிகள் இந்த இளைஞர் மற்றும் வேலை பார்க்கும் வகுப்பை சேர்ந்த பயணிகள் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vande bharat express

இந்த ரயிலில் பயணிக்கும் 27 சதவீதமான பயணிகளுக்கு 35 முதல் 49 வயது வரை இருப்பதாகவும். அதே நேரம் 29 சதவீதமான பயணிகளுக்கு 25 முதல் 34 வயது வரை இருப்பதாகவும். 12 சதவீதமான பயணிகள் இந்தியாவின் மூத்த குடிமக்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை 7.16 லட்சம் பயணிகளை வந்தே பாரத் ரயிலில் அழைத்து சென்றுள்ளது. இந்த தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது 5 வந்தே வாரத் ரயில்கள் இருக்கின்றன. செகந்திராபாத்- விசாகப்பட்டினம், செகந்திராபாத்-திருப்பதி, காச்சிகவுடா-யஸ்வந்த்பூர், விஜயவாடா-சென்னை சென்ட்ரல் ஆகிய ரூட்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்க முக்கியமான காரணம் அதிகமான வசதிகள் சிறப்பான சேவை மற்றும் இந்தியாவின் ரயில் பயணத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சிறப்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் 100% சீட்டுகள் புக்காகி தான் பயணிக்கின்றன.

குஜராத் மாநிலம் காந்திநகர் முதல் மும்பை வரை இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலில் தேவைக்கும் அதிகமாக டிக்கெட் புக்காகி வருகிறது. குறிப்பாக 31 முதல் 35 வயது வரை உள்ள பயணிகள் தான் அதிகம் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக 46 முதல் 60 வயது வரை உள்ள பயணிகள் அதிகம் பயணிக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த வந்தை பாரத் ரயிலில் பயணிக்க அதிகம் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது வந்தே பாரத் ரயிலுக்கு போட்டியாக நமோ பாரத் என்ற புதிய ஆர்ஆர்டிஎஸ் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வெறும் பதினேழு கிலோமீட்டர் தான் இந்த செயலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது நீட்டிக்கப்பட்டு டெல்லியில் இருந்து காஸியாபாத் முதல் மீரட் வரை இணைக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் இருந்து வெறும் 55 நிமிடத்தில் மீரட்டிற்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 6 கோச்கள் உள்ளன. அதில் ஒரு கோச் முற்றிலும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கோச் பிரீமியம் கோச்சாக இருக்கிறது. மற்ற 4 கோச்களில் மக்கள் பயணித்து கொள்ளலாம்.

தற்போது இந்த வந்தே பாரத் மற்றும் ஆர்ஆர்டிஎஸ் போன்ற ரயில்கள் எல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் ரயில் தயாரிப்பு மற்றும் சேவையில் மிக முக்கியமான நாடாக மாறி வருகிறது. வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியா இந்த ரயில்களை தயாரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு இந்த தரவுகள் மிக முக்கியமான சாட்சிகளாக இருக்கின்றன. மேலும் இந்தியாவில் இன்னும் பல ரூட்களில் வந்தே பாரத் ரயில் அறிமுகமானால் அதற்கான வரவேற்பு சிறப்பாக இருக்கும்

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 11:18 [IST]
English summary
Youngsters make up 29 of the occupancy on vande bharat railways says
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+