டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

சாலை விபத்துகளுக்கு குடிப்பழக்கம் மற்றும் செல்போன் பேசுவது உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்பட்டாலும், அவற்றுள் முக்கிய காரணம் பள்ளம் குழியுமான சாலைகளுமே ஆகும்.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் ஒரு சில கிராமங்களில் சாலைகளே இல்லை. அத்தகைய ஒரு கிராமத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் நகரத்திற்கு அருகே உள்ள இந்த கிராமத்தில் சரியான சாலை இல்லாததினால் இளைஞர்கள் சிலர் தங்களது யமஹா ரே-இசட் ஸ்கூட்டரை தாங்களே தோளில் சுமந்து சென்றுள்ளனர். நியுஸ்18 வைரல்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் உண்மையில் வைரலாகி வருகிறது.

Image Courtesy: News18 Virals

ஸ்கூட்டரை இந்த இளைஞர்கள் மலை ஒன்றின் உச்சிற்கு கொண்டு செல்கின்றனர் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் சரியாக இது எந்த இடம் என்பது தெரியவில்லை. இதனால் இந்த கிராமத்தில் வாகனங்கள் இவ்வாறு தான் கொண்டு செல்லப்படுமா? சாலை வசதி இல்லையா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

மேலுள்ள வீடியோவில், ஸ்கூட்டரை சுமார் 8 கிமீ தூரத்திற்கு சுமந்து வந்துள்ளதாக அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். இது சற்று வருத்தத்தை தரக்கூடிய விஷயம் தான் என்றாலும், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் வேகமாக விரிவாக்கம் அடைந்து வருகின்றன.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

கடந்த ஏப்ரல் & மே மாத ஊரடங்கு காலத்தில் மட்டுமே நாடு முழுக்க 1,470கிமீ தூர நெடுஞ்சாலைகள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கிடைத்த விபரங்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

இது முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 73.5 சதவீதம் அதிகம் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இருந்து கொரோனா 2வது அலையினால் கடந்த மாதங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதே ஏப்ரல்-மே மாதங்களில் ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. ஆனால் அப்போது தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததால் இந்திய அரசாங்கம் இவ்வாறான சாலை பணிகள் எதிலிலும் ஈடுப்படாமல், தனது கடமையை உணர்ந்து வைரஸ் பரவலை தடுக்கவே பணியாற்றியது.

டிஜிட்டல் இந்தியாவில் இதுதான் நிலையா? சாலையில்லாததால் ஸ்கூட்டரை சுமந்து சென்ற இளைஞர்கள்!!

மொத்தமாக 2020-21 நிதியாண்டில், 4,350கிமீ தூர நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் கால்பகுதியில் அமைத்து முடிக்க வேண்டிய நெடுஞ்சாலைகளுக்கான செலவு மட்டுமே ரூ.50,000 கோடி வரையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youth carry Yamaha Ray-Z scooter for 8 Kms to protest the Govt’s failure to build roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X