ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

தற்போதைய இளம் பைக் ஓட்டுனர் பலர் அபாயகரமான பயணத்தையே வெகுவாக விரும்புகின்றனர். இதன் காரணமாக அத்தகைய பயணங்களில் ஈடுப்படுவோரே அதிகளவில் போலீஸாரிடம் சிக்குகின்றனர்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இவ்வாறு ஆர்15 பைக்கில் ஸ்டண்ட் செய்த கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞரை போலீஸார் கைது, அவரது பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் சாலை போக்குவரத்து அலுவலரை போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை தான் மேலே பார்க்கிறீர்கள். போலீஸார் அளித்துள்ள தகவலின்படி பார்த்தோமேயானால், திருவனந்தப்புரத்தில் விஷ்ணு என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர் அதி வேகமாக தனது ஆர்15 பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இடையில் மறித்த போலீஸார் அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் அதிவேகத்திற்காக எச்சரித்து மட்டுமே அனுப்பியுள்ளனர். இருப்பினும் போலீஸாரின் அறிவுறுத்தலை கேட்காத விஷ்ணு அதன்பின் பொது சாலையிலேயே மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களை தூக்கியவாறு ஸ்டண்ட் செய்துள்ளார்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்த அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களும், படங்களும் வைரலானதை தொடர்ந்து போலீஸாரின் பார்வைக்கும் அவை சென்றன.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இப்படிதான் விஷ்ணு போலீஸாரிடம் சிக்கி கொண்டுள்ளார். வீடியோவின் மூலம் பைக்கின் விபரங்களை கண்டறிந்த போலீஸார் அதன் மூலம் விஷ்ணுவின் வீட்டு முகவரியை கண்டறிய பெரிய அளவில் சிரமப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

விஷ்ணுவை அதிரடியாக கைது செய்த போலீஸார் அவர் பதிவிட்ட வீடியோக்களையும் படங்களையும் தான் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பித்துள்ளனர். வீடியோவில் காட்சிதரும் மற்ற ரைடர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதன் ஒரு பகுதியாக இந்த ஸ்டண்ட் மேற்கொள்ளப்பட்ட பகுதியை சுற்றிலும், தீவிரமாக சாலை விதி மீறல்களில் ஈடுப்படுவோரை கண்காணிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றம் விஷ்ணுவிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது, அவருக்கு விதிக்கப்பட்ட அபாரத தொகை தெரியப்படவில்லை.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

போலீஸார் கேட்டு கொண்டுள்ளதால் விஷ்ணுவின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீஸார் கேட்டு கொண்டதற்கு இணங்க ஒருவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டால், அவர் ஓட்டுனர் உரிமத்தை திரும்ப பெறுவது சிரமமே, நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதனால் பல மாதங்களுக்கு விஷ்ணு எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் பயன்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது. இந்தியா, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடு என்ற பெயரை பெற்றது.

ஆர்15 பைக் ரைடரை அதிரடியாக கைது செய்த போலீஸார்!! எதுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதனை தடுக்க அரசாங்கங்கள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் இவ்வாறான விதி மீறல்களில் ஈடுப்படுவோரை கடுமையாக தண்டிக்கவும், போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸாருக்கு டிஜிட்டல் தளங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youth on Yamaha R15 stunts even after MVD warning Arrested & license cancelled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X